gowri panchangam Sprituality

மகாபாரதக் கதை/கர்ணன் தூரியோதனின் உண்மையான நட்பு

உண்மையான நட்பின் கதை

ஒருமுறை கர்ணனும் துரியோதனனின் மனைவி பானுமதியும் பகடை விளையாடினார்கள். விளையாட்டில் அடுத்தடுத்து கர்ணன் வெற்றி பெறுகிறார். பானுமதி தோல்வி அடைகிறார். அந்த சமயம் துரியோதனன் தனது மனைவியின் அறைக்கு வருகிறார். இதனைக் கண்ட பானுமதி உடனே எழுந்து நிற்கிறார். ஆனால் தோல்வி அடைவதால் தப்பிக்க செல்கிறாள் நின்று நினைத்த கர்ணன் அவளுடைய முத்துக்கள் பதித்த துணியைப் பிடித்து இழுக்கிறார்.

துரியோதனின் காதலை சேர்த்து வைக்க கர்ணன் என்னவெல்லாம் செய்தார் தெரியுமா? | Unknown Love Story of Duryodhana and Bhanumati - Tamil BoldSky




கர்ணனின் பலமிக்க கைகளால் அந்த துணியை இழுத்ததால் அதில் பதிந்திருந்த முத்துக்கள் நூல் அறுந்து சிதறின. இதனால் ராணி திகைத்துப் போய் இருந்தார். என்ன செய்வது, என்ன சொல்வது என்று தெரியாமல் இருந்தார். கர்ணனுடைய இத்தகைய செயல்களால் தன் கணவனால் தவறான நடத்தையாக புரிந்துக் கொள்ளப்படுமோ என்று அஞ்சினார். அவருடைய பதட்டத்தைப் பார்த்து எதோ தவறு இருப்பதாக உணர்ந்து முன்னே பார்க்கிறார். அங்கு துரியோதனன் நிற்கவே, வார்த்தைகளற்று நிலைகுலைந்து போனார் கர்ணன்.




அரச அறையில் தனது நண்பரின் மனைவியுடன் பகடை விளையாடுவது போதாது என்று அவருடைய ஆடையை வேறு இழுத்து பானுமதியின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தி விட்டோமே என்று திகைத்து தடுமாறி நின்றார் கர்ணன். பானுமதி மற்றும் கர்ணன் இருவரும் துரியோதனனின் கண்களைப் பார்க்க முடியாமல் வெட்கத்தில் நின்றபோது, கௌரவ வாரிசான துரியோதனன், “நான் முத்துக்களை மட்டும் எடுக்க வேண்டுமா அல்லது அவற்றைக் கோக்க வேண்டுமா” என்று மட்டுமே கேட்டார்.




What’s your Reaction?
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!