Serial Stories நீ காற்று நான் மரம்

நீ காற்று நான் மரம்-12

12

 

             “வீணா??? நீயா???..”

“போனில் இதற்கு முன் தாரா பேசி வம்புக்கிழுத்தாள் “என சொன்னான் மோகன்.

” அவ என்ன சொன்னா என்னை பத்தி.???.இன்னும் என்னைப் பார்க்கக் கூட இல்லை..”

“வீணா…அப்பா ..அம்மா இல்லையா வீட்டிலே….”

“இல்லை…இன்னிக்கு புதுசா சேர்ந்த எல்லா பேராசிரியர்களுக்கும் இரவு விருந்து கொடுக்கறாங்க.. 12மணி ஆகிடும் ..நீ தாழ் போட்டு தூங்கு….னாங்க..அதான் .. எனக்கு தூக்கம் வரலை..”  “அன்னிக்கே ரயில்வே ஸ்டேஷன் ல உன் பாவமான முகத்தைப் பார்த்தேன்.அதிலேந்து உன்னிடம் பேசணும் என நினைச்சேன்..இன்னிக்கு தான் அதுக்கு சரியான டைம் கிடைச்சது..”

“அது இருக்கட்டும். பேச்சை மாத்தாதே…அவ என்ன சொன்னா என்னைப் பத்தி…”

“அது வந்து..வந்து…”

“சொல்லேன் எதுக்கு இழுக்கறே..”

“இந்த ராத்திரி நேரத்துல நீ எப்படி போனை எடுத்தே..உன் ஆளு தானே எடுத்து என்னைத் திட்டுவானு சொன்னா??”

“சரியாத்தானே சொல்லிருக்கா…..”

“எனக்கு எப்படி தெரியும் நீ போன்ல திட்டுவேனு??…..”

“அதுக்கு சொல்லலை…அதுக்கு முன்னாடி என்ன சொன்னா???”

“எனக்கு பொறியியல் படிப்புக்கு விண்ணப்பம் குடுக்கறாங்க நு சொன்னா…”

“முட்டாளா… நீ….இல்லை வேணுமின்னே என் வாயை கிண்டறயா??….”

“அவளை….. யார்…. திட்டறதுனு சொன்னா??” “அதுக்கு தான்…..  சரியாத்தான் சொன்னா என்றேன்…”

“உன்னை தானே சொன்னா…”

“மவனே இப்போ நீ என் கையில் கிடச்சா…கைமா தான்…”

“ஏண்டா…என்னை இப்படி பாடாய் படுத்தறே???”

“அவ என்ன சொன்னாளோ திரும்ப ஒரு முறை சொல்லு…”




“இந்த நேரத்துல உன் ஆளு தானே…. போனை….”

சட்டென வேர்த்தது…மோகனுக்கு..

“ஓ…இதைத் தான். …’ சரியா சொல்லிருக்கா’ நு சொல்றாளா…”

“மரமண்டை டீ எனக்கு..”

“இன்னோரு முறை சொல்லுங்க…….” பாடினாள் மோகனின் தேன் குரல் தேவதை.

“மரமண்டை ….சாரி.. டீ… போட்டு பேசிட்டேன் உன்னை..”

முதன் முறை அவளை அப்படி கூப்பிட்டதை நினத்து தன்னையே மனத்தில் கடிந்து கொள்கிறான்…

” நீ மரமண்டை தான்..”

“இல்லே…நான் தெரியாம உன்னை ஒரு உரிமைல அப்படி சொல்லிட்டேன்..”

“ஏய் …தெரியாமத்தான் உன்னை கேக்கறேன்….

நீ பிறப்புலேந்து இப்படித் தானா..நடுவில் தான் இப்படியா…”

“வீணா..செம மூடுல பேசிட்டு இருக்கா…”

நமக்கு இப்படிப் பேச வரலையே…. என நினைக்கிறான் மோகன்..

“என்ன….பேச்சை காணோம்…அந்த தாரா என்னன்னா..என்னை

‘ உன் ஆளுங்கிறா…’

நீ என்னன்னா உரிமைல என்னை ‘டீ’ போட்டு பேசிட்டேன்ங்கிறே….

என்ன இதெல்லாம்….. “

வேண்டுமென்றே வீணா குரலில் கோபத்தைக் காட்டினாள்…




“நான் வாய் தவறி சொல்லிட்டேன்…..அவ என்னையும் உன்னையும் சேத்து ஏதோ வம்புக்கிழுக்க சொல்லிட்டா…”

“நீ இதெல்லாம் பெருசா எடுத்துக்காதே…”

” என்ன மேன் நழுவறே….

எனக்கு பதில் சொல்லு இப்போ….” “அவ சொன்னது சரிதானா என???” என்றாள் வீணா…

“நேரில் என்றால் முகத்தைப் பார்த்து வீணா சொல்வதன் அர்த்தத்தை அறியலாம்…”

“ஆனால் , தானே போன் பண்ணவள் தன்னைப் பிடிக்காமல் பேச மாட்டாள்” என நம்பி…

மோகனும் வேண்டுமென்றே வம்பு வளர்க்க நினைக்கிறான் இப்போது…..

“அவ சொன்னது சரியாத்தான் இருக்கும்…

என் கிட்டேயே இவ்வளவு வம்பு இழுக்கறவ…. நீ…., தாரா கிட்டே என்ன பேச்சு பேசினயோ…சரியாத்தான் சொல்லிருப்பா…”

“ஏய்….. என்னை மீண்டும் மீண்டும் வெறுப்பேத்தறே…”

சொல்லி தொலையேன்….. மோகா…..அவ சொன்னது சரிதான்னு…கெஞ்சி வெக்கத்தை விட்டு கேக்கறேன்……”..”ப்ளீஸ், ப்ளீஸ்…”

“சரி….நீ என் ஆளு தான்..”

தாரா சொன்னது சரிதான்…”

“அப்பாடா….உன்னையெல்லாம் வெச்சுக்கிட்டு…..கடவுளே..”

“ஒரு வார்த்தை கேக்க… ஒரு வருஷம் காத்திருந்தேன்..”

வீணாவின் குரல் வீணை இப்போது மோகனை மயக்கியது…

“அட நான் இப்படி புரியாம பேசினதால தான் இவ்வளவு நேரம் பேசிருக்கா..”

மீண்டும் வம்பிழுக்கத் தோன்றியது…

“ஏன் என்னை நீயும் தாராவும் வம்புக்கிழுக்கறீங்க….”

எனக்கு படிப்பு தவிர வேற எதுவும் தெரியாதே….அஜீத் ,  மாதவன் மாதிரி அவ்வளவு அழகு கூட கிடையாதே…”




“யார் சொன்னா நீ அழகில்லேனு…உங்க தனம் பாட்டிய கேளு…ஸ்ரீ ராமச் சந்திர மூர்த்திக்கு அப்புறம் நீ தான் ஆணழகன் நு சொல்லி சொல்லி என மனசை கெடுத்து வெச்சிட்டா இந்த ஒரு வருஷமா…”

“எந்த ஸ்ரீராமச் சந்திர மூர்த்தி..தில்லு முல்லு ல வர தேங்காய் சீனிவாசன் மாதிரி அழகனா???. அவரு கண்ணு மாதிரி யா??…

“அடி வாங்கபோற நீ…”

“ஆனா உன் கண்ணில் ஒரு காந்த சக்தி இருக்கு தான்…உனக்கு தெரியாது உன் பவர்…அது…அதனால தான் அந்த தாராவும் உன் கைய பிடிக்கறா..”

“நீயும் பேக்கு மாதிரி நீட்டி அவ கையால ‘லவ் பேர்ட்ஸ் பேனா’லாம் வாங்கிக்கறே…”

“ஆமாம் வீணா….நீ இவ்வளவு பேசறே..எனக்கு பேசத் தெரியலயே…”

“யாருக்கு…உனக்கா ..

இவ்வளவு நேரம் பேச்சு குடுத்து என் வாயிலேர்ந்தே எல்லாத்தையும் வரவழைச்சுட்டேயே…”

“ஆமாம் வீணா….காந்தத்தில் வட துருவமும் தென் துருவமும் ஈர்க்கறா மாதிரி……..”

“தோ பார் இந்த ராத்திரி வேளைல உன் ஃபிசிக்ஸ் ஞானத்தை காட்டி மொக்கை பண்ணாதே….”

“அந்த தாரா கிட்டேந்து தள்ளியே இரு.. அவ்வளவு தான் சொல்வேன்..”

“அப்போ உன் கிட்டே….???”

“அடி படவா…திரும்ப முதல்லேந்து வாயை கிண்டாதே…”

“உன் படிப்பு வீணாக கூடாது நு அப்பா அம்மா பேசிண்டு இருந்தாங்க..”

அதை சொல்லத்தான் போன் பண்ணேன்…”

“படிப்புல வரும் வருஷங்களில் கான்சண்டிரேட் பண்ணு…அவ்வளவு தான் சொல்வேன்…”

“அட வீணாவா என்னை படி நு சொல்றா..ஆச்சரியம் தான்..”

“இதை சொல்லத்தான் இவ்வளவு நேரம் போன் பேசினயா???”

“சரியான மொக்க ராசு நீ..

நீ இனிமே மோகா இல்ல… மொக்க ராசா…”

“அப்போ ராணி நீயா??”

“ஆளை விடு சாமி….

வாசலில் அப்பா அம்மா வராங்க…” “வெச்சுடறேன்”.

” ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டதை எண்ணி இருவருக்கும் தூக்கம் வரவில்லை…” ..”ஆனால் இன்று தூங்காமல் இருந்தது சுகமானதாகத்தான் இருந்தது இருவருக்குமே..”




அடுத்த சில நாட்களில் இறுதித் தேர்வு, நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் வந்து, மோகன் அதிரடியாக நிறைய மதிப்பெண் பெற்று, மாநிலத்திலேயே முதல் நூறு பேரில் இருந்தான்….

சென்னைக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என இருந்தாலும் , ‘நான் இல்லாவிடில் முரளி யை யாரும் கவனிக்க மாட்டார்கள….’ ‘ வேலூரில் சேர்கிறேன்’ என சொல்ல, ரகோத்தமன் அவர் குழும கல்லூரியில்

ஸ்காலர்ஷிப் வாங்கி கொடுக்க ,வேலூர் பொறியியல் கல்லூரியில்

“பயோடெக் தொழில் நுட்பத்தில் சேருகிறான்..

அடுத்த சில நாட்களில் அதே கல்லூரியில் கெமிக்கல் எஞ்சினியரிங் பிரிவில் சேர்கிறாள் தாரா…

முதல் நாள் கல்லூரி அறிமுக விழா…

அந்த நிகழ்ச்சியை முன்னின்று அழகான ஆங்கிலத்தில் தொகுத்து நடத்த ரகோத்தமன் பணிக்கப்பட்டார்…

மோகன் முன் வரிசையில் உட்கார வைக்கப் பட்டிருந்தான். பக்கத்து இரு இருக்கைகள் காலியாக இருக்க ஊரில் பெரிய துணி வியாபாரி…., இந்த நிகழ்ச்சியின் ஸ்பான்சர் என அறிமுகப்படுத்த….,,

கோவிந்தனின் கடை முதலாளியும் தாராவின் அப்பாவுமான ராமசாமி

வந்து உட்கார உதவி செய்கிறார் ரகோத்தமன்..

” தள்ளி உக்காருங்கப்பா..

நான் இங்கே உட்காருகிறேன்…”

என அப்பாவை அடுத்த இருக்கைக்கு நகர்த்தி , மோகன் பக்கத்து இருக்கையில் அமர்கிறாள் தாரா….ரகோத்தமன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே….




What’s your Reaction?
+1
8
+1
8
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!