தோட்டக் கலை

துருப்பிடித்த தோட்டக் கருவிகளை சுத்தம் செய்வது எப்படி?

இடைவிடாத மழை மற்றும் நீண்ட குளிர் காலம் ஆகியவற்றின் இறுதியில் எப்பொழுது உங்களுக்கு பிடித்த தோட்ட வேலைகளை செய்யலாம் என்று ஆவலாய் காத்துக் கொண்டிருந்திருப்பீர்கள். ஆனால் இந்த வேலையை வெறுமனே அங்கிருக்கும் கருவிகளை செய்ய முடியாது. ஆனால் குளிரின் காணரமாக பயன்படுத்தாமல் வைத்திருந்த தோட்ட கருவிகள் இப்போது துருப்பிடித்திருப்பது வருத்தமளித்திருக்கும்.




இதற்காக ஒவ்வொரு முறையும் புதிய கருவிகளை வாங்குவது கடினமான காரியம். அதிக அளவு பணமும் இதற்காக செலவு செய்யவும் முடியாது. ஆனால் உங்களது பழைய துருபிடித்த கருவிகளை மீண்டும் சரிசெய்து பயன்படுத்த முடியும். துரு என்பது இரும்பில் காற்றும், நீரும் வெளிப்படும் போது ஏற்படுகின்றது. உலோகங்கள் இந்த கலவையில் இணையும் ஏற்படும் வினையின் காரணமாக துரு ஏற்படுகின்றது.

ஆகையால் துருவை எவ்வாறு எளிதாக நீக்குவது என்பது குறித்து இந்த பகுதியில் பார்ப்போம். இந்த குறிப்புகள் உங்களுக்கு மிகுந்த பயனை தரும் மற்றும் இதே பொருட்களை மீண்டும் பயன்படுத்த செய்யவும் உதவும்.




1. படிக்கல் தோட்டத்து கருவிகளில் உள்ள துருவை நீக்குவதற்கு பெரும் உதவியாக இருக்கிறது. ஒரு வருடத்திற்கு பின் கன்னி செல்லும் புதன்: அக்டோபரில் இந்த 3 ராசிகளுக்கு வெற்றியும் லாபமும் குவியும்.

2. பிராசோ அல்லது WD-40 என்ற கலவையை துருபிடித்த தோட்டத்து பொருட்கள் மீது போட்டு மண் காகிதம் கொண்டு தேய்த்தால் போதும் துரு திட்டுக்களை நீக்கிவிடும்.

3. மண் காகிதம் இதற்கு பெரிதளவு உதவவில்லை என்றால் ஸ்டீல் உள் கொண்டு துருவை தேய்த்து எடுத்து விட முடியும்

4. வெள்ளை வினிகரின் பயன்பாடு

– சிறிய கருவிகளாக இருந்தால் வெள்ளை வினிகரில் அவற்றை அப்படியே முக்கி வைத்து விடுங்கள். இல்லையென்றால் ஒரு பஞ்சு உருண்டையால் இதை தொட்டு அந்த கருவி முழுவதும் தடவுங்கள் அல்லது வினிகரை துருப்பிடித்திருக்கும் பொருள் மீது தெளிக்கலாம். – அதை கழுவும் முன்பு 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். அப்படி ஊற வைக்கும் போது உங்கள் கருவி கருப்பாக மாறிவிட்டால் கவலைப்படாதீர்கள். கழுவிய பின் அது மீண்டும் பழைய நிறத்திற்கு வந்து விடும். – பித்தளை கருவிகளில் வினிகரை பயன்படுத்தக் கூடாது.




5. ஆப்பச் சோடா மற்றும் எலுமிச்சை சாறு பயன்படுத்தலாம். – இவை இரண்டையும் ஒரு கலவையாக செய்து துருப்பிடித்த இடத்தில் தடவி விட்டு, சில நிமிடங்கள் காத்திருக்கவும். – அதனை துடைக்கும் முன் ஒரு உலர்ந்த துண்டை பயன்படுத்தி சுத்தம் செய்யவும்.

6. எலுமிச்சை சாறு, வெள்ளை வினிகர் மற்றும் உப்பு

 இந்த கலவையை துருபிடித்த இடத்தில் போட்டு ஒரு சிறிய பிரஷ் கொண்டு தேய்க்க வேண்டும். பின்னர் தண்ணீரில் கழுவி உலர வைக்க வேண்டும்.

7. கம்பிகள்கொண்ட பிரஷ் மூலம் நன்கு தேய்த்து துருவை எடுக்க வேண்டும். பின் அதில் வண்ணம் தீட்டி உலர்வான இடத்தில் வைப்பது நல்லது. முற்பகுதியில் எவ்வாறு துருவை எடுப்பது என்று நாம் பார்த்தோம். இந்த குறிப்புகளை கருத்தில் கொண்டு துருவை நீக்கி உங்கள் பொருட்களை காத்துக் கொள்ளுங்கள்.

எனினும், உங்கள் கருவிகள் துருப்பிடிக்காமல் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பதை கற்றுக் கொள்ள விருப்பமா? மேற்கொண்டு படியுங்கள். இப்போது தோட்டத்துப் பொருட்கள் துருப்பிடிக்காமல் இருப்பதற்கு என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.




1. உங்கள் இரும்புப் பொருட்கள் ஈரமாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஈரத்தை தடுப்பதால் துருப்பிடிக்காது.

2. ஜில்லென்ற இடத்தில் பொருட்களை வைக்க வேண்டும் என்பது கிடையாது. இந்த பொருட்களை பதப்படுத்த விரும்பும் போது எண்ணெய் தடவி ஒரு உலர்ந்த பிளாஸ்டிக் பையில் போட்டு காற்று போகாத அளவிற்கு கட்டி வைக்க வேண்டும்.

3. ஒரு வாளியில் மோட்டார் எண்ணெய் மற்றும் மணல் ஆகியவற்றை கலந்து, அதில் இந்த துருப்பிடிக்கும் சாதனங்களை போட்டு வைக்க வேண்டும். பின்னர் வாளியை ஒரு சுத்தமான உலர்ந்த இடத்தில் வைக்கவும். இது துருவை தவிர்க்க உதவும்.




4. மரக்கரி ஆகியவற்றை சிறிதளவு எடுத்து அப்பொருட்கள் இருக்கும் பெட்டியில் வைத்தால் துரு பிடிப்பதை தவிர்க்க முடியும்

5. WD-40-ஐ ஒவ்வொரு முறையும் தோட்டக் கருவிகளை பயன்படுத்திய பின்பு அதன் மேல் பூசுவது சிறந்ததாகும்.

கடைசியாக எப்போதும் தோட்ட கருவிகளை ஈரமற்ற, பாதுகாப்பான, தூசி படியாத இடத்தில் வைத்திருத்தல் வேண்டும். மிக முக்கியமாக மழை இல்லாவிட்டாலும் நாம் வெட்டும் புற்களில் உள்ள ஈரமே போதும், நமது பொருட்களை பாழ்படுத்தி விடும். ஆகையால் பயன்படுத்தி விட்டு மிக கவனத்துடன் இவைகளை பாதுகாத்து வைப்பது நல்லது. இப்போது ஆர்வத்துடனும் சந்தோஷமாகவும் தோட்ட வேலையில் நீங்கள் ஈடுபட முடியும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!