Samayalarai

சுவையான தினை கீர்

ஏதாவது வித்தியாசமா சமைக்கனுமா? அப்போ இந்த தினை கீர் ட்ரை பண்ணி பாருங்க. சுவையான வித்தியாசமான முறையில் தினை கீர் எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

தினை கீர் (Thinai kheer recipe in tamil) இவருடைய ரெசிபி Viji Prem- குக்பேட்




தேவையான பொருட்கள்:

தினை அரிசி- 1/2 கப்

சர்க்கரை- 100 கிராம்

கோவா- 50 கிராம் (சர்க்கரை இல்லாதது)

நெய்யில் வறுத்த முந்திரி

திராட்சை, பாதாம் தலா- 1  டீஸ்பூன்

கசகசா- 10 கிராம்

ஏலக்காய்- 2

பால்- 1 டீஸ்பூன்

குங்குமப்பூ- 1  சிட்டிகை




செய்முறை விளக்கம்:

  • தினை அரிசியை தண்ணீரில் களைந்து சுத்தம் செய்து குக்கரில் குழைய வேகவைக்கவும்.

  • கசகசாவுடன் ஏலக்காய், பால் சேர்த்து விழுதாக அரைக்கவும். இனிப்பு இல்லாத கோவாவை உதிர்த்து போட்டு நன்றாக பிசைந்து சேர்க்க வேண்டும். அதனுடன் வேகவைத்துள்ள தினையையும், அரைத்த விழுது, சர்க்கரை மற்றும் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சையை சேர்க்கவும்.

  • இறுதியாக குங்குமப்பூ (தேவைப்பட்டால்) தூவி பரிமாறினால் சுவையான தினை கீர் தயார்.

டிப்ஸ்:

  • இதனை ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்று பரிமாறலாம்.




வீட்டு குறிப்பு

சுவையான ரசம் செய்யும் முறை! Rasam Recipe in Tamil

  • அடுப்பில் சாம்பார், ரசம் பொங்கி வழியாமல் இருக்க, பாதி கொதி வரும்போதே இரண்டு ஸ்பூன் சமையல் எண்ணெய் விட்டால் பொங்கி வழியாது.

  •  கிழங்குகளை வேகவைக்க, அரிசி கழுவிய நீரை பயன்படுத்தினால் சீக்கிரம் வெந்துவிடும்.

Mushroom Masala Cheese Omelette Recipe by Archana's Kitchen

  • ஆம்லெட் செய்யும்போது ஒரு ஸ்பூன் மைதா மாவு கலந்து செய்தால் பெரியதாகவும், உப்பியும் வரும்.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!