gowri panchangam Sprituality

சிவத்தொண்டர்கள்-13 (ஏனாதி நாதர்)

விற்போர், முதலான போர்க்கலைகளில் சிறந்த வீரருக்கு ஏனாதி என்று பட்டம் அளிப்பர். ஆகவே இவ்வடியாரின் இயற்பெயர் இதுவல்ல. அவரது வீரம்காரணமாய் காரணப்பெயரே நிலைத்துவிட்டது.சோழநாட்டின் எயினனூரில் பிறந்தவர் இவர். இவ்வூர் இன்று ஏனநல்லூர் என அழைக்கப்படுகிறது.




திருநீற்றின் பெருமையை காக்க உயிர்த் தியாகம் செய்த ஏனாதி நாயனார் – Rightmantra Prayer Club – RightMantra.com
கும்பகோணம் -மன்னார்குடி  சாலையில் கருவளர்ச்சேரி பிரிவில் மருதாந்தநல்லூரைத் தாண்டியும் நாச்சியார் கோயிலுக்கு மேற்கில் மூன்று கி.மீ தொலைவில் திருமலைராயன் ஆற்று வடகரையில் உள்ளது இவ்வூர். திருநீற்றுத் தொண்டில் ஈடுபட்ட இவர், அரசர்கட்கு வாட்போர்ப் பயிற்சி அளிக்கும் ஆசிரியத் தொழிலுரிமை உடையவராய் இருந்தார். அதில் வரும் ஊதியத்தால் சிவனடியார்களை உபசரித்துப் போற்றி வந்தார்.




இவரை போன்றே வாட்போர்ப் பயிற்சி அளிக்கும் அதிசூரன் என்பவன் இவர் மேல் பொறாமையுடையவனாய் “வாய்  கொண்ட தாயம் வன்மையுடையாரே கொள்வது” எனக் கூறி இவரை வலிய போருக்கு அழைத்தான். “நாம் இருவரும் சேனைகளை அணி வகுத்துப் போர் செய்யமிடத்து வெற்றியடைந்தார் யாரோ அவரே வாள் பயிற்றும் உரிமையைக் கொள்ள வேண்டும்” என்றான். ஏனாதி நாதரும் இசைந்தார்.

இருவருக்கும் இடையே நிகழ்ந்த போரில் அதிசூரன் தோற்ற ஓடினான். தோல்வியுற்ற அவன் ஏனாதி நாதரை வஞ்சனையாற் கொல்ல எண்ணினான். “நம் இருவர்க்கும் துணை வருவார் யாருமின்றி நாம் இருவர் மட்டுமே நாளை விடியற்காலை குறித்த வேறு ஒரு இடத்தில் போர் செய்வோம்” என ஏனாதி நாதர்க்குச் சொல்லி அனுப்பினான்.




அதற்கிசைந்த ஏனாதி நாதர் மறுநாள் “விடியற்காலை தனியராய் வாளுடன் சென்று அவன் குறித்த இடத்தில் அவனது வரவை எதிர்பார்த்து நின்றார். திருநீறணிந்த நெற்றியினரை எவ்விடத்தும் கொல்லாத இயல்புடையார் ஏனாதி நாதர் என்பதனை அறிந்த அதிசூரன் இதற்குமுன் என்றுமே திருநீறிடாதவன் அன்று வெண்ணீறு நெற்றியில் விளங்கப் பூசி நெஞ்சத்தே வஞ்சனையாகிய கறுப்பினையுட் கொண்டு தன் முகத்தைக் கேடகத்தால் மறைத்துக் கொண்டு ஏனாதிநாதர் எதிரே விரைந்து சென்றான்.

ஏனாதி_நாத_நாயனார் #Enathi_Nathar_Nayanar இறைவர் திருப்பெயர் : பிரம்மபுரீசுவரர் இறைவியார் திருப்பெயர் : கற்பகாம்பாள் தல மரம் : - - தீர்த்தம் : - -... | By ...ஏனாதி நாத நாயனார் புராணம் (பாகம்- 2) | Enadi nadha nayanar puranam part 2

ஏனாதி நாதர் போர் செய்ய முற்பட்ட அளவில் கேடகத்தைச் சிறிது விலக்கிய நிலையில் நீறணிந்த அவன் முகத்தைத் கண்ட ஏனாதி நாதர், “இவர் சிவபெருமானுக்கு அடியவராகிவிட்டார். இவர் குறிப்பின் வழியே நிற்பேன்” என வாளையும் பலகையையும் கையிற்படித்தபடி போர் செய்வார் போல் வறிதே நின்றார். அந்நிலையில் அதிசூரனும் அவரைக் கொலைசெய்ய எண்ணியதன் கருத்தினை எளிதில் நிறைவேற்றிக் கொண்டான்.

சிவபெருமான் பகைவனது கைவாளால் பாசம் அறுத்தருளிய ஏனாதிநாதர்க்கு எதிர் தோன்றி என்றும் பிரியாப் பேறளித்து மறைந்தருளினார்.

ஏனாதி நாதர்ருக்கு ஒவ்வோர் ஆண்டும், புரட்டாசி உத்திராடம் நட்சத்திரத்தில், சிவாலயங்களில் குருபூஜை கொண்டாடப்படுகிறது.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!