Entertainment lifestyles

காதுகள் அதிர பாட்டு கேட்க விரும்புபவரா நீங்கள்? இதை பாருங்க.

என்னதான் இயர்பட்ஸ் அல்லது ஹெட்போன்ஸ் மாட்டிக்கொண்டு, நமக்கு பிடித்த பாடல்களை அமைதியான முறையில் ரசித்து கேட்டாலும் கூட.. அதே பாடலை, ஒரு தரமான ப்ளூடூத் ஸ்பீக்கரில் (Bluetooth Speaker).. ஃபுல் சவுண்ட் வைத்து கேட்பதில் ஒரு தனி அலாதி இருக்கத்தான் செய்கிறது!

அந்த அலாதியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவும் 2 பட்ஜெட் விலை ப்ளூடூத் ஸ்பீக்கர்களை பற்றித்தான் நாம் இங்கே விரிவாக பார்க்க உள்ளோம்? அதென்ன ஸ்பீக்கர்கள்? இது எந்த நிறுவனத்தின் ஸ்பீக்கர்கள்? இவற்றின் விலை நிர்ணயம் என்ன? அம்சங்கள் என்ன?




LG launches XBoom party speakers and Tone Fit TF7 TWS earbuds in India, price starts at Rs 12,500 - India Today

டிடபிள்யூஎஸ் (TWS) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்ஸ் மற்றும் நெக்பேண்ட்ஸ் போன்ற ஆடியோ டிவைஸ்களுக்கு பெயர் பெற்ற ட்ரூக் பிராண்ட், இரண்டு ப்ளூடூத் எனேபிள்டு ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்வதன் மூலம் ‘ஹோம் ஆடியோ’ பிரிவில் (Home Audio Segment ) நுழைந்துள்ளது.

ட்ரூக் நிறுவனம் இன்பினிட்டிபாக்ஸ் (InfinityBox ) மற்றும் தண்டர்பார் (Thunderbar) என்கிற 2 புதிய ப்ளூடூத் ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்துள்ளது.முன்னரே குறிப்பிட்டபடி, ட்ரூக் நிறுவனத்தின் டிடபுள்யூஎஸ் இயர்பட்களை போலவே, அதன் புதிய சவுண்ட்பார்களும் பட்ஜெட்வாசிகளை குறிவைத்து மலிவான விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.




ட்ரூக் இன்பினிட்டிபாக்ஸ் ப்ளூடூத் ஸ்பீக்கரின் அம்சங்கள்: இந்த ஸ்பீக்கர் – சாதாரண அவுட்டிங் அல்லது ஹேங்கவுட்ஸ் முதல் பட்டையை கிளப்பும் பார்ட்டிகள் வரை எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் அப்படியே “வேற லெவலுக்கு” மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் இன்பினிட்டிபாக்ஸ் ஆனது 50வாட் சவுண்ட் அவுட்புட்டை (50W Sound Output. ) வழங்குகிறது.

மேலும் இந்த இந்த ஸ்பீக்கர் டூயல் 78மிமீ ஸ்பீக்கர்கள் (dual 78mm speakers) மற்றும் டூயல் பேஸிவ் ரேடியேட்டர்களுடன் ( dual passive radiators) வருகிறது. அதாவது இந்த ஸ்பீக்கரின் பாஸ் (Bass), இதை வைத்துள்ள இடம் முழுவதும் எதிரொலிக்கும் என்றே கூறலாம். மேலும் இது உங்கள் இசைக்கு டெப்தையும் (Depth) சேர்க்கிறது.

இன்பினிட்டிபாக்ஸ் ப்ளூடூத் ஸ்பீக்கரில் டைனமிக் ஆர்ஜிபி லைட்டிங்கும் (dynamic RGB lighting) உள்ளது. இது இசைக்கப்படும் இசையுடன் ஒத்திசைந்து, பாடல் கேட்பவரை ஆடவைக்கும் உற்சாகத்திற்குள் தள்ளும் என்பதில் சந்தேகமே வேண்டாம். பேட்டரி லைஃப்பை பொறுத்தவரை, இது 12 மணிநேரம் வரை தொடர்ச்சியான பிளேபேக் டைமை வழங்கும் என்று ட்ரூக் உறுதியளிக்கிறது.




சுவாரசியமாக, ஸ்டீரியோ சவுண்ட் அனுபவத்திற்காக பயனர்கள் இரண்டு இன்பினிட்டிபாக்ஸ் யூனிட்களை ஒன்றாக கனெக்ட் செய்யவும் முடியும். இது ப்ளூடூத், ஆக்ஸ் (AUX), டிஎஃப்/யூஎஸ்பி (TF/USB) மற்றும் எஃப்எம் ரேடியோ போன்ற மல்டிபிள் பிளேபேக் விருப்பங்களுடன் வருகிறது. கடைசியாக இது சார்ஜ் செய்ய யூஎஸ்பி-சி போர்ட் மற்றும் கண்ட்ரோல்களை வழங்கும் பட்டன்களையும் கொண்டுள்ளது.

ட்ரூக் தண்டர்பார் ப்ளூடூத் ஸ்பீக்கரின் அம்சங்கள்: இந்த ப்ளூடூத் ஸ்பீர்க்கர், டூயல் 52 மிமீ ஸ்பீக்கர் டிரைவர்களுடன் (55mm Speaker Drivers) 16வாட் சவுண்ட் அவுட்புட்டை (16W Sound Output) வழங்குகிறது. இந்த கூட்டணி மிகவும் ‘ரிச்’ ஆன பாஸ்-ஐ உருவாக்குகிறது. இந்த ஸ்பீக்கர் கஸ்டமைஸ் செய்யக்கூடிய ஆர்ஜிபி லைட்களுக்கான ஆதரவுடன் வருகிறது.




மேலும் இது மொபைல் போன்கள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான பில்ட்-இன் டிவைஸ் ஹோல்டரையும் (Bulit-in Mobile and Tablet Holder) கொண்டுள்ளது. பேட்டரி லைஃப்பை பொறுத்தவரை இந்த சவுண்ட்பார் 6 மணிநேரம் வரையிலான பிளேபேக்கை வழங்கும் என்று ட்ரூக் நிறுவனம் உறுதி அளிக்கிறது. இதுவும் ஆக்ஸ் (AUX), டிஎஃப்/யூஎஸ்பி (TF/USB) மற்றும் எஃப்எம் ரேடியோ போன்ற மல்டிபிள் பிளேபேக் விருப்பங்களுடன் (Multiple Playback Options) வருகிறது. கூடுதலாக, ஒலியளவை சரிசெய்வதற்கும், டிராக்குகளை மாற்றுவதற்கும், போன் கால் நிர்வகிப்பதற்கும் தண்டர்பார் ஸ்பீக்கரில் சில கண்ட்ரோல் பட்டன்களும் உள்ளன.

இந்தியாவில் இன்பினிட்டிபாக்ஸ் மற்றும் தண்டர்பார் ப்ளூடூத் ஸ்பீக்கரின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: இன்பினிட்டிபாக்ஸ் ஸ்பீக்கரின் விலை ரூ.4,499 ஆகும். மறுகையில் உள்ள தண்டர்பார் ஸ்பீக்கரின் விலை ரூ.1,499 ஆகும். இவ்விரு ப்ளூடூத் ஸ்பீக்கருமே பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான அமேசான் இந்தியா (Amazon India) வழியாக வாங்க கிடைக்கும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!