Entertainment News Uncategorized

இந்த 18 போன்களிலும்.. இனி WhatsApp வேலை செய்யாது.. இந்த லிஸ்ட்ல உங்க போனும் இருக்கா?

சாம்சங், மோட்டோரோலா உட்பட வெவ்வேறு நிறுவனங்களின் 18 போன்களின் மாடல் பெயர்களை வெளியிட்டு, இனிமேல் இந்த ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப்பை (WhatsApp) பயன்படுத்த முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏன் இந்த திடீர் நடவடிக்கை? இதற்கு பின்னால் உள்ள காரணம் என்ன? இதோ விவரங்கள்:

 




வேறு எந்தவொரு இன்ஸ்டன்ட் மெசேஜிங் பிளாட்ஃபார்மை (Instant Messaging Platform) விடவும் வாட்ஸ்அப் நிறுவனம் அதன் யூஸர் எக்ஸ்பீரியன்ஸ் (User Experience), ப்ரைவஸி (Privacy) மற்றும் செக்யூரிட்டியில் (Security) அதிக கவனம் செலுத்துகிறது, அனைத்தையும் சிறப்பாக கையாள்கிறது என்பதில் சந்தேகமே வேண்டாம்.

ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் வெப் உட்பட அனைத்து வாட்ஸ்அப் வெர்ஷன்களில் அவ்வப்போது வெளியாகும் அப்டேட்களே அதற்கு சாட்சி. புதிய ஓஎஸ்-களுக்கு ஏற்ப புதிய சிஸ்டம் அப்டேட்களை வெளியிடும் வழக்கத்தை கொண்டுள்ள வாட்ஸ்அப், பழைய அல்லது காலாவதியான ஓஎஸ்-களுக்கான ஆதரவை நீக்குவதையும் வழக்கமாக கொண்டுள்ளது. இப்படி செய்வதன் மூலம் வாட்ஸ்அப் நிறுவனத்தால் புதிய தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்த முடியும்.




இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக வருகிற அக்டோபர் 24 ஆம் தேதிக்கு பிறகு இந்த 18 ஸ்மார்ட்போன்களிலும் வாட்ஸ்அப் வேலை செய்யாது (Whatsapp To Stop Working on These Smartphones) என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த ஸ்மார்ட்போன்களின் வாட்ஸ்அப் வேலை செய்யாது? ஆண்ட்ராய்டு ஓஎஸ் வெர்ஷன் 4.1 (Android OS Version 4.1) மற்றும் அதற்கு முன்பாக ஓஎஸ் கொண்டு இயங்கும் ஸ்மார்ட்போன்களுக்கான ஆதரவை நிறுத்துவதாக வாட்ஸ்அப் அறிவித்துள்ளது. மேற்க்குறிப்பிட்ட ஓஎஸ்களை கொண்டு இயங்கும் ஆண்ட்ராய்டு போன்களின் பட்டியல் மிகவும் நீளம்; அவைகளில் மிகவும் பிரபலமான, இன்னமும் பயன்பாட்டில் உள்ள 18 ஸ்மார்ட்போன்களின் பட்டியல் இதோ:




01. நெக்சஸ் 7 (Nexus 7)

02. சாம்சங் கேலக்ஸி நோட் 2 (Samsung Galaxy Note 2)

03. எச்டிசி ஒன் (HTC One)

04. சோனி எக்ஸ்பீரியா இஸட் (Sony Xperia Z)

05. எல்ஜி ஆப்டிமஸ் ஜி ப்ரோ (LG Optimus G Pro)

06. சாம்சங் கேலக்ஸி எஸ்2 (Samsung Galaxy S2)

07. சாம்சங் கேலக்ஸி நெக்சஸ் (Samsung Galaxy Nexus)

08. எச்டிசி சென்ஸேஷன் (HTC Sensation)

09. மோட்டோரோலா ட்ராய்டு ரேஸர் (Motorola Droid Razr)

10. சோனி எக்ஸ்பீரியா எஸ் (Sony Xperia S2)

11. மோட்டோரோலா ஜூம் (Motorola Xoom)

12. சாம்சங் கேலக்ஸி டேப் 10.1 (Samsung Galaxy Tab 10.1)

13. ஆசஸ் ஈ பேட் டிரான்ஸ்ஃபார்மர் (Asus Eee Pad Transformer)

14. ஏசர் ஐகானியா டேப் ஏ5003 (Acer Iconia Tab A5003)

15. சாம்சங் கேலக்ஸி எஸ் (Samsung Galaxy S)

16. எச்டிசி டிசையர் எச்டி (HTC Desire HD)

17. எல்ஜி ஆப்டிமஸ் 2எக்ஸ் (LG Optimus 2X)

18. சோனி எரிக்சன் எக்ஸ்பீரியா ஆர்க்3 (Sony Ericsson Xperia Arc3)




அக்.24 க்கு பிறகு என்ன நடக்கும்?

மேலே பட்டியலிடப்பட்டுள்ள 18 ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஆண்ட்ராய்டு ஓஎஸ் வெர்ஷன் 4.1 மற்றும் அதற்கு முன்பாக வெளியான ஓஎஸ் கொண்டு இயங்கும் எல்லா ஸ்மார்ட்போன்களிலும் வாட்ஸ்அப்பிற்கான ஆதரவு நீக்கப்படும். அதாவது வாட்ஸ்அப் வேலை செய்யாது!

எந்தெந்த ஸ்மார்ட்போன்களுக்கு எந்த சிக்கலும் இருக்காது?

ஆண்ட்ராய்டு ஓஎஸ் வெர்ஷன் 5.0 (Android OS Version 5.0) மற்றும் அதற்கு பிறகு வெளியான ஓஎஸ், ஐஓஎஸ் 12 (iOS 12) மற்றும் அதற்கு பிறகு வெளியான ஐஓஎஸ், காய்ஓஎஸ் 2.5.0 (KaiOS 2.5.0) மற்றும் ஜியோபோன் (JioPhone) மற்றும் ஜியோபோன் 2 (JioPhone 2) உட்பட புதிய அனைத்து போன்களிலும் தொடர்ந்து வாட்ஸ்அப் இயங்கும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!