தோட்டக் கலை

வெற்றிலை வளர்ப்பு;

வெற்றிலை வளர்ப்பு;

வெற்றிலையில் 4  தெய்வங்கள் உறைந்துள்ளன.வெற்றிலையின் காம்பில் மகாலஷ்மியும்,நரம்பில் பிரம்மாவும்,முன் பகுதியில் சிவனும்,பின் பகுதியில் சக்தியும் என நான்கு தெய்வங்களும் இருப்பதாக கூறப்படுகிறது.ஆன்மீக சம்பிரதாயங்களில் வெற்றிலையும் ஒன்று.அதுமட்டுமில்லாது ஓர் அற்புதமான மூலிகையும் ஆகும்.

  • வெற்றிலை கொடியில் கணுக்காலில் வேர் விட்டிருக்கும் அதன் சிறு கிளையை ஒடித்து வைத்தாலே,முளைத்துவிடும் .

  • வெற்றிலை நடுவதற்கு இரண்டு முறைகள் கையாளப்படுகின்றன. .அதில் ஒன்று டம்ளரில் நீர் வைத்து அதில் கிளையினை விட்டுவைத்தால் ஒரு வாரத்தில் வேர் விடும், அதனை மண்ணில் நட்டு வளர வைக்கலாம்.




  • இன்னொரு முறை   தொட்டியில் மணல்,எரு உரம், போட்ட தொட்டியில் நட்டு வைத்தால் இலைகள் வளர ஆரம்பிக்கும். தினமும் நீர்விட வேண்டிய அவசியம் இல்லை. ஈரப்பதம் இருந்தால் பொதுமானது.

  • வெற்றிலை கொடி வகையைச் சார்ந்தது,அது படர வழி செய்யவேண்டும்.வீட்டில் வெற்றிலை வளர்த்தால் ,அந்த வீடு செழிப்பாக இருக்கும் என நம்புகின்றனர்.

  • வெற்றிலையில் அதிகம் ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்றால் அது பூஞ்சைத் தொற்று மற்றும் வேர் அழுகல் நோய் என கூறலாம். வெற்றிலையை பொறுத்தமட்டும் அதிகம் தண்ணீர் ஊற்றக் கூடாது.  தண்ணீர் கட்டாயம் தேங்கி நிற்கக்கூடாது. தொட்டியில் தண்ணீர் ஊற்றும் பொழுது ஈரப்பதம் இருந்தால் போதும், தேங்கி நிற்குமாறு எப்பொழுதும் ஊற்றாதீர்கள்! தண்ணீர் தேங்கி நின்றால் வேர் அழுகல் நோய் கட்டாயம் ஏற்படும்.




வெற்றிலை காய்ந்து போகிற மாதிரி உங்களுக்கு தெரிந்தால் பொட்டாசியம் சத்து நிறைந்துள்ள வாழைப்பழ தோல் கொண்டு உரத்தை செய்து கொடுக்கலாம். காய்ந்த வாழைப்பழத் தோல்களை நன்கு மிக்ஸியில்  அரைத்து ஒரு ஸ்பூன் அளவிற்கு வேரை சுற்றிலும் போட்டு விடலாம். இலைகளில் பூஞ்சை தொற்று ஏற்பட்டால் அதற்கும் நீங்கள் அதிகம் தண்ணீர் ஊற்றுவது தான் காரணமாக இருக்கும் எனவே பூஞ்சை தொற்று ஏற்பட்டால் உடனே ஒரு கப் புளித்த மோருடன் சிறிதளவு பெருங்காயத்தூள், கொஞ்சம் மஞ்சள்தூள் கலந்து ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து இலைகளிலும், மண்ணிலும் நன்கு தெளித்து விடுங்கள். இப்படி செய்யும் பொழுது பூஞ்சை தொற்றுகள் எளிதாக நீங்கும்.

வெற்றிலையின் மருத்துவ குணங்கள்;

வெற்றிலையின் மருத்துவ குணம் அறிந்திருந்ததால் தான் பழங்காலம் முதலே வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு உணவு உபசரிப்புக்கு பிறகு வெற்றிலை பாக்கு கொடுக்கும் பழக்கம் இருந்துவந்தது.பல வீடுகளில் இம்முறையினை இன்றும் பின்பற்றி வருகின்றனர்.

அஜீரணகோளாறுகளை சரிசெய்ய வெற்றிலை போட வேண்டும்.வெற்றிலையில் கார்ப்புத்தன்மை இருப்பதால் ,பல உடல் கோளாறுகளையும் சரிசெய்கிறது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!