Samayalarai

லவேரியா செய்வது எப்படி? (இலங்கை உணவு )

இலங்கையில் தேநீர் குடிக்கும் வேளையில் அனைவரும் விருப்பதுடன் எடுத்துக்கொள்ளக்கூடிய ஒரு சிற்றூண்டிாயக இருப்பது லவரியா தான்.அதேபோல், காலை உணவு அல்லது இரவு உணவிற்கு இவற்றை சாப்பிடலாம். மேலும், தேங்காய் மற்றும் வெல்லம் கொண்டு இது தயாரிக்கப்படும்.

இலங்கையின் கிராமப்புறங்களில் உணவகங்கள் மற்றும் தெருவோர விற்பனையாளர்களில் இவை மிகவும் பொதுவான உணவாக விற்பனை செய்கின்றார்கள்.இதை சாப்பிடுவதற்காக இலங்கை போக வேண்டும் என்ற தேவை இல்லை. வீட்டிலேயே இலங்கையில் கிடைக்கும் சுவையில் எப்படி செய்யலாம் என இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.




How to make Laveria? Idiappa Ma is enough!

தேவையான பொருட்கள்

 பச்சரிசி மாவு-2 கப்

 தண்ணீர்- 2 கப்

வாழை இலை

 பாசி பருப்பு-1/2 கப்

 வெல்லம்-3/4 கப்

 தேங்காய் துருவல்-1 முடி

உப்பு-சிறுது

ஏலக்காய் பொடி-சிறிது

தேங்காய் எண்ணெய்-2 தேக்கரண்டி




செய்முறை விளக்கம் :

  • பச்சரிசி மாவில், கொதிக்க வைத்த தண்ணீர் சேர்க்கவும். இதை நன்றாக கலந்துவிடவும்.

  • வாழை இலையை சதுரங்களாக வெட்ட வேண்டும். அதை தோசை கல்லில் வைத்து இரண்டு பக்கமும் வாட்ட வேண்டும்.

  • தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் பாசி பருப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்கவும்.

  • தொடர்ந்து தண்ணீர் நன்றாக வத்த வேண்டும். இந்நிலையில் இதில் வெல்லத்தை பாகு போல் செய்து சேர்க்கவும்.

  • தொடர்ந்து துருவிய தேங்காய், ஏலகாய் பொடி சேர்த்து நன்றாக கிளர வேண்டும். இதை ஆறவிடுங்கள்.

  • தொடர்ந்து மாவை இடியாப்பம் பிழிவதுபோல் இலையில் புழிந்துகொள்ள வேண்டும்.

  • அதற்கு மேலாக பருப்பு பூரணத்தை வைத்து இலையை சுருட்டிக்கொள்ளவும்.

  • தொடர்ந்து இப்படி செய்து 15 நிமிடங்கள் வேக வைத்து எடுத்தால் சுவையான லவேரியா ரெடி!




வீட்டு குறிப்பு

Premium Photo | Dirty dishes and unwashed kitchen appliances filled the kitchen sink

  • உங்கள் சிங்க் தொட்டியில் வீசும் துர்நாற்றத்தை நீக்க முதலில் நீங்கள் சிங்க் தொட்டியை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். பிறகு அதில் மிளகுக்கீரை எண்ணெயை தெளித்து விடவும். ஒருவேளை உங்களிடம் மிளகுக்கீரை எண்ணெய் கிடைக்கவில்லை என்றால் புதினா இலைகளை பயன்படுத்தலாம். இது சிங்கில் நல்ல வாசனையை பரப்பும்.

புகைபோக்கி கொண்ட எரிவாயு அடுப்பு - படங்கள், நன்மைகள் மற்றும் பலவற்றைக் கொண்ட வகைகள்

  • ஃபிரிட்ஜ், மைக்ரோவேவ் மற்றும் சிம்னி போன்ற சமையலறை சாதனங்களில் க்ளிங் ஃபாயிலை ஒட்டவும்.  எண்ணெய் மசாலா மற்றும் நீராவி புகையால், சமையலறையில் வைக்கப்படும் பொருட்கள் பிசுபிசுப்பாகவும் அழுக்காகவும் இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், இந்த அனைத்து உபகரணங்களிலும் க்ளிங் ஃபாயிலை பயன்படுத்துங்கள். இவை புதிய பொருட்களின் பளபளப்பைத் தக்கவைத்துக்கொள்ளும் மற்றும் நீங்கள் அவற்றை மீண்டும் மீண்டும் சுத்தம் செய்ய வேண்டியதில்லை.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!