தோட்டக் கலை

மாடித்தோட்டத்தில் வெண்டைக்காய் சாகுபடி… ரொம்ப எளிதாகத் தொடங்கலாம்!

நாட்டு வெண்டை, வடிகால் வசதியுள்ள மண் வகையில் சிறப்பாக விளையும். ஆண்டு முழுவதும் வெண்டை சாகுபடி செய்யலாம். ஆனால் ஆடிப்பட்டத்தில் விதைப்பு செய்தால், ஆவணி, புரட்டாசி மாதங்களில் காய்ப்புக்கு வரும்போது பண்டிகை மற்றும் விசேஷ நாட்கள் அதிகம்.




வெண்டைக்காய் வளர்ப்பது எப்படி? (ஆர்கானிக்காக) - யார் வேண்டுமானாலும் உழவு செய்யலாம்

“வெண்டைக்காய் சாகுபடி சுலபமானதுதான். எந்தப் பயிராக இருந்தாலும் பராமரிப்பு அவசியம் என்பதைக் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். வெண்டி விதைகளை நேரடியாக நடவு செய்யலாம். விதை நேர்த்தி செய்து விதைகளை நடவு செய்ய வேண்டும். பையில் உள்ள ஊடகத்தின் (மண் அல்லது காயர் கம்போஸ்ட்) மீது விரலில் குழியெடுத்து விதைகளை ஊன்ற வேண்டும். ஒரு குழியில் இரண்டு விதைகள் ஊன்றலாம். நடவு செய்த ஒரு வாரத்தில் விதைகள் முளைக்கத் துவங்கும்.

பத்து நாள்களில் நன்றாக முளைத்துவிடும். அந்தச் சமயத்தில் ஒவ்வொரு குழியிலும் நன்றாக வளர்ந்துள்ள ஒன்று அல்லது இரண்டு செடியை மட்டும் வைத்துக்கொண்டு, ஒரு செடியைப் பிடுங்கி எடுத்துவிட வேண்டும். ஒரு பையில் ஒரு செடியை மட்டும் வைப்பது சிறந்தது. பெரிய பையாக இருந்தால் இரண்டு செடிகள் இருக்கலாம். அதற்கு மேல் அதிக எண்ணிக்கையில் ஒரே பையில் செடிகள் இருக்கக் கூடாது.




நடவு செய்த 30 முதல் 35-ம் நாள்களுக்குள் பூவெடுக்கத் தொடங்கும். அந்த நேரத்தில் 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து தெளிக்க வேண்டும். 30-ம் நாள் முதல் 15 நாள்கள் இடைவெளியில் தொடர்ந்து பஞ்சகவ்யாவைப் பயன்படுத்தலாம். தொடர்ந்து பஞ்சகவ்யாவைக் கொடுத்துவந்தால், இலைகள் அதிகமாக உருவாகும். அதிகப் பூக்கள் பூக்கும். பூவெடுத்ததிலிருந்து ஏழு நாள்களில் காய் உருவாகத்தொடங்கும். பிறகு ஒன்றரை நாள் இடைவெளியில் அறுவடைக்கு வரும். ஒருநாள் விட்டு ஒருநாள் காய் பறிக்கலாம்.

வெண்டைக்காயைப் பிஞ்சாக இருக்கும்போது பறிக்கக் கூடாது. அதேபோல முற்றிய காயையும் பறிக்கக் கூடாது. சரியான முதிர்ச்சி அடையாத பிஞ்சுக்காய்களைத் தொடர்ந்து பறித்தால் 100 நாள்கள் மகசூல் கொடுக்க வேண்டிய பயிர், 80 நாள்களில் தனது மகசூலை நிறுத்திக்கொள்ளும். வெண்டைக்காயின் கொண்டைக்கு மேலே, இரண்டு முதல் மூன்று அங்குல உயரத்தில் இருக்கும் காய்களைப் பறிப்பதுதான் சிறந்தது.




பூச்சிகள்… கவனம்!

வெண்டைக்காயைத் தாக்கும் பூச்சிகளில் சாறு உறிஞ்சும் பூச்சி, அசுவினி, தத்துப்பூச்சி, வெள்ளை ஈ, செந்நாவாய் பூச்சி ஆகியவை முக்கியமானவை.

வெண்டைச் சாகுபடியில் சப்பாத்திப் பூச்சித் தாக்குதல் என்பது பெரும் சவாலானது. செடிகள் சுணங்கி கிறங்கிவிடும், இலைகள் சுருங்கிவிடும். எவ்வளவுதான் ரசாயன பூச்சிக்கொல்லிகள் அடித்தாலும், இதைக் கட்டுப்படுத்தவே முடியாது.தத்துப்பூச்சித் தாக்குதல் இருந்தால் இலை மஞ்சள் நிறமாக மாறி, பிறகு பழுப்பு (பிரவுன்) நிறத்துக்கு மாறும். இலை, தீயில் வாட்டியதுபோலக் காணப்படும். இந்த இரண்டு பூச்சிகளையும் தடுக்க 5 சதவிகித வேப்பங்கொட்டைக் கரைசல் தெளிக்கலாம். நடவு செய்த 20-ம் நாள் முதல் ஒவ்வொரு 25 நாள் இடைவெளியில் சாகுபடிக்காலம் முடியும் வரை வேப்பங்கொட்டைக் கரைசலைத் தெளித்து வர வேண்டும்.

‘‘வீரிய ரக வெண்டியைவிட, நாட்டுரக வெண்டி செடியின் உயரம் குறைவாகத்தான் இருக்கும். ஆனா, வீரியரக வெண்டியைவிட, இதுல கூடுதலா பக்கக் கிளைகள் உருவாகி, காய்ப்பு அதிகமாக இருக்கும். விதைப்பிலிருந்து 40 ம் நாள்ல காய் பறிப்புக்கு வந்து விடும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!