தோட்டக் கலை

தோட்டத்தின் அழகை அதிகரிக்க உதவும் செம்பருத்தியின் வெரைட்டிகள்!!!

தோட்டத்தில் வருடம் முழுவதும் பூக்களைத் தரக்கூடியவாறான செடியை வைப்பதற்கு ஆசைப்பட்டால், அதற்கு செம்பருத்தி செடி சரியானதாக இருக்கும். செம்பருத்தி செடியை பராமரிப்பது என்பது மிகவும் ஈஸியானது. அனைவருக்கும் செம்பருத்தியில் உள்ள வெரைட்டிகள் தெரியுமோ இல்லையோ, ஆனால் அந்த செம்பருத்தி கண்ணைப் பறிக்கக்கூடிய வகையில் பல்வேறு நிறங்களில் உள்ளது. மேலும் அவை அனைத்தும் ஒரே மாதிரி இல்லாமல், சில செம்பருத்தி பூக்கள் வடிவம் மற்றும் அளவுகளில் மாறுபட்டிருக்கும்.




குறிப்பாக இந்த செம்பருத்தி செடியில் உள்ள ஒரு தனித்துவம் என்னவென்றால், அந்த பூவானது செடியின் இலைகளை பல்வேறு காலங்களில் ஒரே மாதிரி வைத்திருக்கும். இங்கு அந்த செம்பருத்தி பூக்களில் உள்ள வெரைட்டிகளை கொடுத்துள்ளோம். அவற்றைப் பார்த்து உங்களுக்கு பிடித்ததை, உங்கள் வீட்டு தோட்டத்தில் வைத்து மகிழுங்கள்.

சைனீஸ் செம்பருத்தி: சைனீஸ் செம்பருத்தி அடர் பிங்க் நிறத்தில் இருக்கும். மேலும் இதன் இலைகள் சிறியதாக இருக்கும். குறிப்பாக இந்த செடிக்கு அதிக கவனம் வேண்டும் என்பதில்லை.




செக்கர்டு செம்பருத்தி (Checkered Hibiscus): மால்வேசி குடும்பத்தைச் சேர்ந்த இந்த செம்பத்தியின் இலைகள் மிகுந்த அடர் பச்சை நிறத்திலும், பாதி வெள்ளை, பிங்க் நிறம் கலந்து காணப்படும்.

ஹவாயன் செம்பருத்தி (Hawaiian hibiscus): இந்த செம்பருத்தியின் இதழ்கள் மிகவும் பெரியதாகவும், மஞ்சள் நிறத்திலும் இருக்கும். இது மற்ற செம்பருத்தி செடிகளை விட மிகவும் வேகமாக வளர்வதோடு, நீண்ட நாட்கள் இருக்கக்கூடியது.

மஸ்சூடஸ் செம்பருத்தி (Hibiscus Moscheutos): இது ஒரு பலவண்ண நிறம் கொண்ட செம்பருத்தி. இந்த பூவின் இதழ் வெள்ளை நிறத்திலும், நடுவே அடர் மெரூன் நிறத்திலும் இருக்கும்.

செப்டரிஃபா செம்பருத்தி (Hibiscus sabdariffa): தோட்டத்தில் வளர்க்கக்கூடிய மிகவும் பிரபலமான செம்பருத்தி செடிகளில் ஒன்று தான், இந்த செப்டரிஃபா செம்பருத்தி. இது ஒரு குறுந்தாவரம். இந்த செடியில் மலர்கள் வெள்ளை மற்றும் மஞ்சள் கலந்த இதழ்களையும், நடுவே அடர் சிவப்பு நிறத்தையும் கொண்டது. இது சற்று குறுகி இருக்கும். சாதாரண செம்பருத்தி இது இந்தியாவில் பொதுவாக அனைவரது வீட்டிலும் சாதாரணமாக வளர்க்கப்படும் செம்பருத்தி. இது சிவப்பு நிறத்தில் இருக்கும்.




செம்பருத்தி முடாபிலிஸ் (Hibiscus mutabilis) இந்த செம்பருத்தியின் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், இது ரோஜாப்பூ நிறத்தில் பூக்களை கொண்டிருப்பது தான். இதனை தோட்டத்தில் வைத்தால், நிச்சயம் வித்தியாசமான தோற்றத்தைக் கொடுக்கும்.

செம்பருத்தி ட்ரியோனம் (Hibiscus trionum) தோட்டத்தில் வளர்க்கக்கூடிய வித்தியாசமான செம்பருத்திகளில் ஒன்று தான் இந்த செம்பருத்தி ட்ரியோனம். இதன் சிறப்பு, இது வெள்ளை அல்லது மஞ்சள் நிற இதழ்களுக்கு நடுவே ஊதா நிறத்தை கொண்டிருப்பது தான்.

செம்பருத்தி கானாபினஸ் (Hibiscus cannabinus) இந்த செம்பருத்தியின் இதழ் வெளிர் மஞ்சள் நிறத்தில், நடுவே சிவப்பு நிறத்தைக் கொண்டிருக்கும்.

டிலியாசியஸ் செம்பருத்தி (Hibiscus tiliaceus) இந்த செம்பருத்தியை கடல் செம்பருத்தி, பீச் செம்பருத்தி என்றெல்லாம் அழைப்பார்கள். இந்த செம்பருத்தி அடர் மஞ்சள் நிறத்தில் நடுவே அடர் சிவப்பு நிறம் கொண்டிருக்கும்.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!