Cinema Entertainment

தெலுங்கில் வெற்றி.. தமிழில் தோல்வி.. திரைக்கதையில் திருப்தி அளிக்காத ரீமேக் படம்!

தயாரிப்பாளரும், இயக்குநருமான விட்டலாச்சாரியா கன்னடத்தில் மானே தும்பிட ஹென்னு படத்தை 1958 இல் எடுத்த போது, விஜயா புரொடக்ஷன்ஸ் நாகிரெட்டி பொருளாதார ரீதியாக அவருக்கு உதவி செய்தார். படம் தயாரானதும் அதன் ரீமேக் உரிமையை விட்டலாச்சாரியா நாகிரெட்டிக்கு தந்தார். கன்னட படத்தை தெலுங்குக்கு ஏற்ப மாற்றும் பொறுப்பு நரச ராஜுவிடம் அளிக்கப்பட்டது. படத்தை சி.புல்லையா இயக்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.




MANITHAN MARAVILLAI (1962)-Kalathai maatrinan-Seerkazhi Govindarajan, P.Leela-Ghantasala - YouTubeமனிதன் மாறவில்லை (1962) Tamil திரைப்படம்

நரச ராஜு எழுதிய திரைக்கதை சி.புல்லையாவுக்குப் பிடிக்கவில்லை. விஜயா புரொடக்ஷன்ஸின் இன்னொரு பங்குதாரரான சக்ரபாணி திரைக்கதையை மாற்றி எழுதினார். ஒரிஜினல் திரைக்கதையில் பணக்கார பெண்மணிக்கு கணவன் உண்டு. ஆனால், அவன் ஒரு தலையாட்டி பொம்மை. அந்த கதாபாத்திரத்தை தெலுங்குப் பதிப்பில் சக்ரபாணி சேர்க்கவில்லை. பணக்கார பெண்மணி ஒரு விதவை என்று மாற்றினார். தனது மகளை ராணி போலவும். தனது கணவனின் முதல் தாரத்து பெண்ணை வேலைக்காரி போலவும் அந்தப் பெண்மணி நடத்துவார். அவர்களின் குடும்ப நண்பருக்கு இரு மகன்கள்.




அவர்களை இந்த பணக்கார பெண்மணியின் இரு மகள்களுக்கு திருமணம் செய்து வைக்க விரும்புவார். ஆனால், அந்த பணக்கார பெண்மணியோ மூத்த தாரத்தின் மகளை பெரிய இடத்தில் கட்டிக் கொடுக்க விரும்ப மாட்டாள். இதனால், நண்பரின் மூத்த மகன் தன்னை அனாதை என்று பொய் சொல்லி, அந்த பெண்மணியின் வீட்டில் வேலைக்காரனாக நுழைந்து மூத்ததாரத்தின் மகளை காதலிப்பான். நண்பரின் இரண்டாவது மகன் அந்த பெண்மணியின் மகளை காதலிப்பான். அவளும் அம்மாவைப் போல திமிர் பிடித்தவள். அவளது கொட்டத்தை அடக்கி எப்படி வழிக்கு கொண்டு வருகிறான். இரண்டு ஜோடிகளும் இறுதியில் என்னானார்கள் என்பது கதை.

திரைக்கதையை சக்ரபாணி மாற்றி எழுதிய பிறகு இயக்குரும் மாறினார். சி.புல்லையாவுக்குப் பதில் கமலக்கர கமலேஸ்வர ராவ் படத்தை இயக்கினார். பணக்கார திமிர் பிடித்த பெண்மணி வேடத்தில் சூர்யகாந்தம் நடித்தார். அவரது கதாபாத்திரப் பெயர் குண்டம்மா. படம் அண்டர் புரொடக்ஷனில் இருக்கையில், குண்டம்மா கதை என்னாச்சு என்று அனைவரும் கேட்க, அதையே படத்தின் தலைப்பாக்கினார்கள். அதன்படி படத்தின் தலைப்பு குண்டம்மா கதை. நண்பரின் மூத்த, இளைய மகன்களாக என்டி.ராமராவும், அக்னியேனி நாகேஸ்வரராவும் நடித்தனர். முதல்தாரத்தின் மகளாக சாவித்ரி, சூர்யகாந்தத்தின் மகளாக ஜமுனா.

இதன் படப்பிடிப்பு சென்னை விஜயா வாகினி ஸ்டுடியோவில் அமைக்கப்பட்ட வீட்டில் எடுக்கப்பட்டது. இதனால், அதன் தமிழ் பதிப்பையும் ஒரே நேரத்தில் எடுத்தனர். தமிழ்ப் பதிப்பில் ராமராவ் நடித்த வேடத்தில் ஜெமினி கணேசனும், சூர்யகாந்தம் நடித்த வேடத்தில் சுந்தரி பாயும் நடித்தனர். ஜமுனா, சாவித்ரி, அக்னியேனி நாகேஸ்வரராவ் ஆகியோர் தெலுங்கில் செய்த அதே வேடத்தை தமிழிலும் செய்தனர். தமிழ் பதிப்பை சக்ரபாணி இயக்கினார்.




நகைச்சுவை இழையோட எடுத்த குண்டம்மா கதா 1962 ஜுன் 7 ஆம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. 17 சென்டர்களில் 100 நாள்கள் ஓடிய படம், விஜயவாடா துர்கா கலாமந்திர் திரையரங்கில் 175 நாள்களை கடந்து வெள்ளிவிழா கண்டது.

தமிழில் இப்படம் மனிதன் மாறவில்லை என்ற பெயருடன் வெளியானது. கன்னடத்தில் வெற்றியும், தெலுங்கில் பம்பர் வெற்றியும் பெற்ற படம் தமிழில் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. இத்தனைக்கும் கௌரவ வேடத்தில் நாகேஷையும் நடிக்க வைத்திருந்தனர். கண்டசாலாவின் இசைக்கு தஞ்சை என்.ராமையாதாஸ், கண்ணதாசன் பாடல்கள் எழுதினர். சக்ரபாணியின் திரைக்கதை இயக்கம் மற்றும் முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பு பேசப்பட்டது எனினும் தமிழ் ரசிகர்கள் மனிதன் மாறவில்லையை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. படத்தின் திரைக்கதையை பட்டி டிங்கரிங் பார்த்து இந்த காலகட்டத்துக்கு ஏற்ப எடுத்தால் ஒரு நகைச்சுவை குடும்பச்சித்திரம் உத்தரவாதம்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!