health benefits lifestyles Uncategorized

துணியை வாஷிங் மெஷினில் துவைப்பது நல்லதா? கையில் துவைப்பது நல்லதா?

வாஷிங் மெஷினில் துவைத்தால் தான், பிராண்ட்டேட் துணி நல்லா இருக்குங்கற மாதிரி சொல்றாங்க. யார் பேச்சையும் நம்பாதீங்க. என் அனுபவத்தில் சொல்றேன். கையால் துவைப்பது போல வேறு எதிலும் வருவதில்லை.  குழந்தைகளின் ஆடைகள், ஆண் குழந்தைகளின் ஆடைகள், வெள்ளை ஆடைகளை சலவை செய்ய கைகளே ரொம்ப சிறந்தது. வாஷிங் மெஷினில் சலவை செய்யும் போது நாளடைவில் குருட்டழுக்கு படிந்துவிடுகிறது. அது கறை மாதிரி படிந்து கடைசியில் கைகளால் துவைத்தாலும் போவதில்லை. என் பார்வையில் கைகளின் மூலம் சலவை செய்வதே சிறந்தது எனத்தோன்றுகிறது.




ஆனால் இன்றைய பரபரப்பான சூழலில், பெரும்பாலான பெண்களுக்கு துவைக்க நேரம் இருப்பதில்லை. அப்படிப்பட்டவர்கள் அவர்களுக்கு கிடைக்கின்ற நேரம் மற்றும் வீட்டின் தன்மைக்கு ஏற்ப கைகளால் துவைக்கலாமா? இல்லை வாஷிங் மெஷின் பயன்படுத்தலாமா என்ற முடிவுக்கு வரலாம்.

சுத்தமான வெள்ளை சட்டைகளை கையால் தான் துவைத்தாக வேண்டும். ஏனென்றால், காலர், கஃப்ஸ் மற்றும் அக்குள் ஆகியவற்றில் அதிக அழுக்கு படிந்திருக்கும். மெஷினில் துவைக்கையில் அந்த அழுக்கு போகாது. டெனிம்கள் மற்றும் ஜீன்ஸ் ஆடைகளை மட்டும் வாஷிங் மெஷினில் போடலாம். அவை தடிமனாக இருப்பதால் கைகளால் துவைப்பது எளிதான காரியமல்ல.




சாக்ஸ் போன்ற ஆடைகளை துவைக்க ஒருபோதும் வாஷிங் மெஷினை பயன்படுத்த வேண்டாம். அது மற்ற துணிகளில் ஒட்டக்கூடும். உள்ளாடை தவிர்த்து மற்ற துணிகளை வாஷிங் மெஷினில் துவைக்கலாம். அடர் நிற ஆடைகளையும், வெளீர் நிற ஆடைகளையும் தனித்தனியாக துவைக்க வேண்டும். குழந்தைகள் பயன்படுத்தும் துணியை குறைவான டிடர்ஜென்ட் கொண்டு கையால் துவைப்பது நல்லது. துவைக்க நேரம் இல்லாத சூழல் கொண்டவர்களும், அடுக்கு மாடி குடியிருப்பில் துணியே காயப்போட முடியாத அளவுள்ள வீட்டில் குடியிருப்பவர்கள் வாஷிங் மெஷின் வாங்கலாம்.

மற்றபடி, எல்லா வசதியும் இருந்தும், மெஷினில் தான் துவைப்பேன் என்றால், துணிக்கு என்றே தணி பட்ஜெட் ஒதுக்கிவிட வேண்டும். மெஷினில் துவைக்கும் ஆடைகள் சீக்கிரம் போய்விடும். கடினமான அழுக்குகள் கையால் துவைப்பது போல வராது. அடிச்சி துவைச்சி காயப்போட்டு பாருங்க. அழுக்கு ஒரே முறுக்கில் வெளியேறிவிடும். துணியும் வெகுநாள் உழைக்கும். தையல் பிரியவே பிரியாது. தண்ணீர் குறைவாக செலவாகும். இவையெல்லாம் வாஷிங் மெஷினில் நடக்காது. ஏதோ துவைக்கணுமேன்னு துவைக்கலாம்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!