Samayalarai

உடுப்பி ஸ்டைல் முட்டை புலாவ்! ட்ரை பண்ணி பாருங்க..

பொதுவாக பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு என்ன மாதிரியான உணவு கொடுக்க வேண்டும் என்று யோசிப்பதே பெரிய தலைவலியாக இருக்கும். ஒரே மாதிரியான உணவுகளை கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடமாட்டார்கள். வித்தியாசமாகவும், சத்தாகவும் இருக்கும் வகையில் உணவு கொடுக்க வேண்டும் என்று யோசிக்கும் தாய்மார்களுக்கு அருமையான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி இதோ. இப்படி ஒருமுறை முட்டை புலாவ் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.




முட்டை புலாவ் | Egg Pulao in Tamil | Muttai Pulao in tamil | how to make egg rice recipe - YouTube

தேவையான பொருட்கள் :

15 முந்திரி பருப்பு

பட்டை சிறிய துண்டு

கிராம்பு-2

ஏலக்காய்-2

3 டேபிள் ஸ்பூன் தயிர்

பச்சை மிளகாய் – 3

கொத்தமல்லி- 1 கைபிடி

புதினா-சிறிது

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

மிளகாய் பொடி – அரை ஸ்பூன்

தக்காளி-1

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்

பால் – அரை கப்

பாஸ்மதி அரிசி – 1 கப்




chetinadu egg pulav recipe | Indian Express Tamil

செய்முறை  விளக்கம் :

  • முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் முந்திரி பருப்பு, பட்டை, லவங்கம், கிராம்பு, தயிர், பச்சை மிளகாய், கொத்தமல்லி ஆகியவை சேர்த்து அரைக்கவும்.

  • பின்னர் ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து அதில் வேகவைத்த முட்டைகளை போட்டு வறுக்க வேண்டும். அதை ஒரு தட்டில் மாற்றிவிட்டு, அதே பாத்திரத்தில் கூடுதலாக எண்ணெய் சேர்த்து வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.

  • பின்னர் இஞ்சி பூண்டு பேஸ்ட், தக்காளி ஆகியவற்றை வதக்கி, புதினா, கொத்தமல்லியை சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் அரைத்து வைத்த மசாலா பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும்படி வதக்கவும்.

  • பின்னர் ஒரு கப் பால், அரிசிக்கு தேவையான ஊற்றி கொதிக்க விடவும். அதில் பாஸ்மதி அரசியை சேர்த்து வேக விட வேண்டும். கடைசியாக வறுத்த முட்டைகளை அதில் சேர்த்து மெதுவாக கிளறவும். அவ்வளவு தான் சுவையான உடுப்பி ஸ்டைல் முட்டை புலாவ் ரெடி. இந்த முட்டை புலாவை குழந்தைகள் மட்டுமின்றி வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.




வீட்டு குறிப்பு

Dirty Gas Stove In Kitchen Stock Photo - Download Image Now - Dirty, Unhygienic, Camping Stove - iStock

பர்னர் புதிதாக மின்ன எளிய வழி ஒன்று உண்டு. ஹார்பிக்கை பர்னரின் மீது ஊற்றி ஒரு பத்து நிமிடம் ஊற விட்டு விடுங்கள். இதில் அதிகமான கெமிக்கல்  இருப்பதால் பயன்படுத்தும் பொழுது கையுறை மற்றும் மாஸ்க் பயன்படுத்துவது நல்லது. ஊறிய பின்பு பழைய டூத் பிரஷ் வைத்து லேசாக தேய்த்து கொடுத்தால் போதும் பர்னரில் இருக்கும் விடாப்பிடியான கறைகள், அழுக்குகள் மற்றும் கருப்பு படிமங்கள் அனைத்தும் நீங்கி தங்கம் மாதிரி தகதகன்னு ஜொலிக்கும்.

மருதாணி சிவப்பு - அறிவியல் குறுங்கதை - இனிது

மருதாணி நன்றாக பிடிக்க ஒரு மிக்ஸர் ஜாரில் இரண்டு கைப்பிடி அளவு மருதாணி எடுத்துக் கொண்டீர்கள் ஆனால் அதற்கு ஆறு முழு கிராம்பை போடுங்கள். இதற்கு உடைந்த கிராம்பை பயன்படுத்த வேண்டாம்.  உடைந்த காம்பில் மேல் புறம் இருக்கும் பகுதி இருக்காது. அடுத்ததாக ஒரு ஸ்பூன் சர்க்கரை அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து கொள்ளுங்கள். இத்துடன் நன்றாக பழுத்து அழுகும் தருவாய்க்கு முன் உள்ள எலுமிச்சை பழத்தின் சாறை சேர்த்துக் கொள்ளுங்கள்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!