gowri panchangam Sprituality

இன்றைய ராசி பலன் (10.8.23)

இன்று  ரிஷபத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்யக்கூடிய இன்று துலாம் ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது. எந்த ராசியினருக்கு நன்மைகள் நடக்கும், யார் எச்சரிகையாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.

 

மேஷ ராசி அன்பர்களே!

இன்றைய நாள் சற்று சாதகமற்றதாக இருக்கும். இன்று பணம் தொடர்பான அல்லது பிற பெரிய திட்டங்களை கவனமாக செய்ய வேண்டும். பண விஷயத்தில் நஷ்டம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. முதலீடு அல்லது பிற பரிவர்த்தனைகளில் கவனம் தேவை.பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் பரிவர்த்தனைகளில் தெளிவாக இருப்பது அவசியம். வருவாயை விட செலவு அல்லது இழப்பு அதிகமாக இருக்கும். முருகப்பெருமானை வழிபட சங்கடங்கள் நீங்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழியில் ஆதாயம் கிடைக்கும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிள்ளைகளின் தேவைகளுக்காக செலவு செய்ய நேரிடும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.

ரிஷப ராசி அன்பர்களே!

இன்று உங்கள் நடத்தையில் கவனம் தேவை. தன்னிச்சையாக செயல்பட நினைப்பீர்கள். உங்கள் மனதிற்கு பிடித்த விஷயங்களை செய்வீர்கள். உங்கள் செயல்களில் வெற்றி பெறுவீர்கள். வீட்டுத் தேவைகள் குறித்த நேரத்தில் நிறைவேறும். பணிபுரியும் இடத்தில் ஏற்ற, இறக்கம் ஏற்படும், அதிக போட்டியால் லாபம் குறையும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை மென்மையான நாளாக இருக்கும்.இன்று சிவபெருமானை வழிபட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கும் சுபச் செலவுகள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படக்கூடும்.

மிதுன ராசி அன்பர்களே!

இன்று கடினமாக உழைக்க வேண்டிய நாளாக இருக்கும். தொடக்கத்தில் கொஞ்சம் சோம்பல் காட்டுவீர்கள். ஆனால் வேலை காரணமாக விரைவில் பிஸியாக இருப்பீர்கள். ஓய்வெடுக்க நேரம் கிடைக்காது.தொழில் துறையில் மேன்மை தருவதாக இருக்கும். கடன் வாங்க நினைப்பவர்களுக்கு பணம் கிடைக்கும். குடும்பத்தில் யாரோ ஒருவரிடம் அதிருப்தி இருக்கும்.மகாவிஷ்ணு வழிபாடு சிறப்பு.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை மூலம் பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் சில சங்கடங்கள் உண்டாகும்.

கடக ராசி அன்பர்களே!

இன்று தொண்டு செய்யும் மனப்பான்மை உங்களுக்குள் மேலோங்கும். ஆன்மிகத்திலும் ஆர்வம் இருக்கும் பணம் செலவழித்தாலும் மன அமைதி கிடைக்காது. வேலை, தொழிலில் எதிர்பார்த்ததை விட சற்று லாபம் நிச்சயம் கிடைக்கும்.வேலையில் நாட்டம் குறையும். பயண திட்டங்களை திட்டமிடுவீர்கள். உங்கள் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். சரியான திட்டமிடலுடன் செயல்படவும். ஆஞ்சநேயரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சி சாதகமாக முடியும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும்.

சிம்ம ராசி அன்பர்களே!

சிம்ம ராசிக்கு இன்று உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள் நாள் முழுவதும் உங்களைத் தொந்தரவு செய்யும். அதனால் வேலையை சரியான நேரத்தில் முடிக்க முடியாகல் போராடுவீர்கள்.சோம்பலும் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி ஏற்பட அனுசரித்துச் செல்லவும். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். பொருளாதார விவகாரங்களைத் தீர்வு காண்பீர்கள்.இன்று அம்பிகையை வழிபடுவது நன்று.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வார்த்தைகளில் நிதானம் தேவை.

கன்னி ராசி அன்பர்களே!

சிம்ம ராசிக்கு இன்று உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள் நாள் முழுவதும் உங்களைத் தொந்தரவு செய்யும். அதனால் வேலையை சரியான நேரத்தில் முடிக்க முடியாகல் போராடுவீர்கள்.சோம்பலும் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி ஏற்பட அனுசரித்துச் செல்லவும். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். பொருளாதார விவகாரங்களைத் தீர்வு காண்பீர்கள். துர்கையை வழிபட எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையை அனுசரித்துச் செல்வது அவசியம்.

துலா ராசி அன்பர்களே!

துலாம் ராசியினர் இன்று நாள் முழுவதும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருக்க வேண்டும். வீட்டில் மகிழ்ச்சியும், வியாபாரத்தில் வளர்ச்சியும் இருக்கும். இருப்பினும் அதற்காக சற்று செலவு அதிகரிக்கும் உங்கள் முயற்சிகளுக்கு லாபம் தாமதமாக வாய்ப்புள்ளது. யாரையும் கண்மூடித் தனமாக நம்ப வேண்டாம். நிதி சிக்கல்களை சமாளிக்க வேண்டியது இருக்கும். உடல் நலனில் அக்கறை தேவை. பேச்சு, செயலில் கவனமாக இருக்கவும். விநாயகரை வழிபட மன மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

விருச்சிக ராசிக்கு மனம் சற்று குழப்பமாக இருக்கும். நாளின் ஆரம்பம் முதல் எந்த வேலை செய்தாலும் அதில் தாமதம் ஏற்படும் என்பதால் சற்று குழப்பமடைவீர்கள். கடின உழைப்புக்கு ஏற்றாற்போல் அதிக லாபத்தை விரும்புவீர்கள். மதியத்திற்குப் பிறகு உங்கள் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். நிச்சயம் வெற்றி கிடைக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். மூட்டுகளில் வலி மற்றும் உடல் பலவீனமாக உணர்வீர்கள்.பைரவர் வழிபாடு நற்பலன்களை அதிகரிக்கச் செய்யும்..

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.

தனுசு ராசி அன்பர்களே!

தனுசு ராசிக்கு சற்று சாதகமற்ற நாளாக இருக்கும். பணம் தொடர்பான விஷயங்கள் அலைக்கழிக்கும். உங்களின் குறைகள் சுட்டிக் கட்டப்படும். மற்றவர்கள் மீது எந்த ஒரு வேலையையும் திணிக்க வேண்டாம்.
நிதி விஷயங்களில் அதிருப்தியுடன் இருப்பார்கள்.பொதுத் துறையிலும் மரியாதை குறைய வாய்ப்பு உண்டு. சொந்த காரியத்தில் கவனம் செலுத்துங்கள். யாருக்கும் கேட்காமல் அறிவுரை கூறாதீர்கள். குறிப்பாக எதிர் பாலினத்தவர்களுடன் தேவையென்றால் மட்டும் பேசுங்கள்.இன்று நீங்கள் மகாலட்சுமியை வழிபடுவது நன்று.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் நலனில் கவனமாக இருக்கவும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும்.

மகர ராசி அன்பர்களே!

மகர ராசிக்கு நிதி நிலை முன்னேற்றத்திற்கான சாதக நாள். உங்கள் லட்சியத்தை அடைய நினைப்பீர்கள். இன்று பண வரவு இருந்தாலும், பொறுமை இருக்காது. ஏக்கம் இருக்கும். மன அமைதி பெற பொறுமையுடன் செயல்படுங்கள். நாள் முழுவதும் ஏதேனும் ஒரு வேலையால் பிஸியாக இருப்பீர்கள். வேலையில் அதிக அலைச்சல் இருக்கும். வேலைப்பளு அதிகரிக்கும்.
சில காரணங்களால் உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். இறுதி நேரத்தில் பயணம் தள்ளிப் போகும் வாய்ப்பு உள்ளது, இன்று மகாவிஷ்ணுவை வழிபட சங்கடங்கள் நீங்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் கையிருப்பைக் குறைக்கும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் மூலம் கிடைக்கும் செய்தி சங்கடம் தரும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படக்கூடும்.

கும்பராசி அன்பர்களே!

இன்று முதல் உங்களுக்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கும். இன்று மும்முரமாகச் செயல்பட வேண்டிய நாள். இருப்பினும் வேலையை செய்து முடித்து திருப்தி அடைவீர்கள்.பணிபுரியும் இடத்தில் அலட்சியம் இல்லாமல் செயல்படவும். சோம்பலைத் தவிர்க்கவும். குடும்பச் சூழல் இன்று பரபரப்பாக இருக்கும். உடல்நிலை சாதகமாக இருக்கும். இன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்று.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கியமான விஷயங்களில் முடிவு எடுப்பதற்கு உகந்த நாள்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

மீனராசி அன்பர்களே!

உங்கள் இலக்கை இன்று அடைய முடியும். இன்றைய நாள் அனுகூலமாக இருக்கும். எந்த வேலை செய்தாலும் ஆரம்பத்தில் சற்று தடை ஏற்பட்டாலும், முடிவில் வெற்றி கிடைக்கும். பண வரவு நம்பிக்கை தரும்.பணியிடத்தில் கவனமாக செயல்பட வேண்டிய நாள். வீட்டின் சூழல் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நரசிம்மர் வழிபாடு விருப்பங்களை நிறைவேறச் செய்யும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவு மகிழ்ச்சி தரும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர் உதவியால் காரிய அனுகூலம் உண்டாகும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பொதுநலப்பணியில் பங்கேற்கும் வாய்ப்பு ஏற்படும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!