Cinema Entertainment விமர்சனம்

அப்பத்தா விமர்சனம்: ஊர்வசியின் நடிப்புக்கு ஆயிரம் ஹார்ட் ரியாக்ஷன்ஸ் கொடுக்கலாம்; ஆனால் படத்துக்கு?

புகழ்பெற்ற இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் ஊர்வசி, அமித் பார்கவ் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் `அப்பத்தா’. இத்திரைப்படம் `ஜியோ சினிமா’ ஓ.டி.டி தளத்தில் வெளியாகியிருக்கிறது. தனது 700வது திரைப்படத்திற்குக் கச்சிதமான கதைக்களத்தைத் தேர்வு செய்திருக்கிறார், ஊர்வசி. ஆனால், இந்த `அப்பத்தா’ படமாக எப்படியிருக்கிறது? இதன் ப்ளஸ், மைனஸ் என்னென்ன?




ஊறுகாய் வியாபாரம் செய்யும் கண்ணம்மா (எ) அப்பத்தா (ஊர்வசி) தனது மகன் பாவாடை சாமி (அமித் பார்கவ்) மீது அளவற்ற பாசம் கொண்டிருக்கிறார். பணி நிமித்தமாக வெளியூருக்குச் சென்ற மகனை நினைத்து சோகத்தில் வாடுகிறார். ஆனால், அம்மா கண்ணம்மா மீதும் அவளது தொழில் மீதும் மகனுக்கு வெறுப்புதான். தனது மகனை நீண்ட நாள்களுக்குப் பின் சந்திப்பதற்கு கண்ணம்மா வாஞ்சையுடன் புறப்படுகிறாள். ஆனால், மகன் தனது வீட்டிலிருக்கும் நாயைப் பார்த்துக் கொள்வதற்காகத்தான் தாயை அழைக்கிறான். கண்ணம்மாவுக்குச் சிறுவயதிலிருந்து நாய்களைக் கண்டால் பயம். இப்போது ஒரு நாயைத் தனியாகச் சமாளிக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது. அவர் அந்த நாயை எவ்வாறு சமாளிக்கிறார் என்பதுதான் இந்த ‘அப்பத்தா’வின் கதை.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!