gowri panchangam Sprituality

பெரியபாளையத்தம்மன் கோவில்

ஆடி மாதம் வந்துவிட்டால் போதும். வெல்லத்தைச் சுற்றி ஈக்கள் மொய்ப்பதைப் போல, பெரிய பாளையத்தைச் சுற்றிக் கும்பல் பொங்கி வழியும். அங்கே, அம்பிகையான பெரியபாளையத்தம்மன் ‘அன்னை பவானி’ என்ற திருநாமத்தில், கிழக்கு முகமாகச் சன்னதி கொண்டு எழுந்தருளி இருக்கிறாள்.

அதிலும் ஒரு புதுமை! வலதுகையில் சக்கரமும் இடதுகையில் சங்கும் மற்றொரு கையில் வாளும் நான்காவது கையில் அமுதக் கலசமும் கொண்டு அம்பிகை திருக்காட்சி அளிக்கின்றாள். இது, வேறு எங்கும் பார்க்க முடியாத அற்புதமான திருக்கோலம். இப்படி அபூர்வமான திருக்கோலம் கொண்ட பெரியபாளையத்தம்மன் வெளிப்பட்டதிலும் ஓர் அதிசயம் உண்டு.

ஆடியும் பெரியபாளையத்து அம்மனும் | aadi masam periyapalayam bhavani amman

பெரியபாளையம் கோவில் உள்ள இடம் ஆதி காலத்தில் புற்று மேடாக இருந்த இடமாகும். பவானி அம்மன் வளையல் வியாபாரி ஒருவர் மூலம் திருவிளையாடல் நடத்தி தான் அங்கு இருப்பதை இந்த உலகுக்கு உணர்த்தினாள். அதன் பிறகே புற்று இருந்த இடத்தில் பாளையத்தம்மனுக்கு கோவில் கட்டப்பட்டது.




தல வரலாறு வருமாறு:-

சில நூற்றாண்டுகளுக்கு முன்பு, ஆந்திராவில் உள்ள பலிஜா நாயுடு இனத்தை சேர்ந்தவர்கள் வளையல் விற்பதற்காக சென்னைக்கு வருவார்கள். வளையல் மூட்டைகளை தலையில் சுமந்தபடி கால்நடையாகவே வந்து செல்வார்கள். பெண்களின் கையில் வளையல் பொட்டு விட்டவுடன் மங்களகரமாக வாழ்த்துவதற்கு அறிகுறியாக, வளையல் அணிந்த பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுப்பார்கள். இதற்காகவே அவர்கள் பொட்டலங்களில் மஞ்சள், குங்குமம் கொண்டு வருவார்கள்.

காலத்தின் வாசனை: வளையல்காரர் வராத தெரு! | காலத்தின் வாசனை: வளையல்காரர் வராத தெரு! - hindutamil.in

ஒரு சமயம், ஒரு வளையல் வியாபாரி, சென்னையில் வியாபாரத்தை முடித்துக் கொண்டு நடை பயணமாக ஆந்திராவுக்குத் திரும்பி கொண்டிருந்தார். ஆரணி ஆறு பகுதி வந்ததும் மதிய உணவு சாப்பிட்டார். பிறகு பெரியபாளையத்தில் ஒரு வேப்ப மரத்தடியில் அமர்ந்து சற்று நேரம் தூங்கினார். சிறிது நேரம் கழித்து கண் விழித்தார். அருகில் வைத்திருந்த வளையல் மூட்டை காணாததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.




அங்கும் இங்கும் தேடினார். வளையல் மூட்டை கிடைக்கவில்லை.அப்பொது அவரது கண்ணில் பெரிய பாம்பு புற்று தென்பட்டது. சந்தேகத்துடன் அந்த புற்றுக்குள் எட்டிப் பார்த்தார். வளையல் மூட்டை அங்கு கிடந்தது. ஒரு கம்பை எடுத்து வந்து வளையல் மூட்டையை எடுக்க முயன்றார். அவரால் முடியவில்லை. நீண்டநேரம் போராடியும் அவரால் வளையல் மூட்டையை எடுக்க இயலவில்லை.

அதற்கு மேலும் அங்கு நிற்க துணிவு இல்லாத அவர் ஆந்திராவில் உள்ள தன் வீட்டுக்குத் திரும்பி சென்றுவிட்டார். அன்று இரவு அவர் தூங்கிக் கொண்டிருந்த பொது, அவருக்கு ஒரு கனவு வந்தது. கனவில் பவானி அம்மன் தோன்றினாள். `நான் ரேணுகாதேவி. பெரியபாளையத்தில் பவானி ஆக அவதாரம் எடுத்துள்ளேன். உன் வளையல் மூட்டை விழுந்துள்ள புற்றில் சுயம்புவாக கோவில் கொண்டுள்ளேன். இதை நினைத்து நீ பயப்படாதே. நீ மீண்டும் உடனே அங்கு வா. அங்கு வந்து என்னை தினமும் வணங்கி வழிபட ஒரு கோவில் எழுப்பு’ என்று உத்தரவிட்டாள்.

திடுக்கிட்டு விழித்த வளையல்காரருக்கு வியர்த்துக் கொட்டியது. மறுநாளே வளையல், மஞ்சள், குங்குமம் மூட்டைகளுடன் சென்னைக்கு புறப்பட்டார். பெரியபாளையம் வந்ததும், அந்த புற்றைப் பார்த்தார். அந்த பகுதி ஊர் மக்களை அழைத்து, அம்மன் கனவில் உத்தரவிட்டதை கூறினார். அந்த பகுதி விவசாயிகள் நீண்ட நாட்களாக, அந்த புற்றை அகற்றிவிட்டு, அதில் வயல் உண்டாக்க வேண்டும் என்று நினைத்திருந்தனர்.




The Bangle sellers | English - Quizizz

வளையல் வியாபாரி சொன்னதும் கடப்பாரை எடுத்து வந்து புற்றை இடித்து அகற்ற தொடங்கினார்கள். பாதி புற்று இடிக்கப்பட்ட நிலையில் “ணங்” என்று ஒரு சத்தம் கேட்டது. கடப்பாரையில் ரத்தம் காணப்பட்டது. அதோடு புற்றில் இருந்து ரத்தம் வழிந்தது. அந்த பகுதி முழுவதும் ரத்தம் கசிந்தது. பூமியே ரத்தத்தால் நனைந்து பொனது. இதைப் பார்த்து அந்த பகுதி மக்களுக்கு கூடுதல் பயம் வந்துவிட்டது. நடுங்கியபடி புற்றை முழுமையாக அகற்றிப் பார்த்தனர். அதற்குள் சுயம்பு ஒன்று இருந்தது.

அதன் மேல் பகுதியில் இருந்து தான் ரத்தம் குபுகுபு என்று வந்து கொண்டிருந்தது. உடனே வளையல் வியாபாரி தன்னிடம் இருந்த மஞ்சளை எடுத்து ரத்தம் பீறிட்டு வந்த இடத்தில் வைத்து அழுத்தினார். மறுநிமிடம் ரத்தம் நின்று போனது. இதையடுத்து அந்த இடத்தில் சுயம்புவை மூலமாகக் கொண்டு அம்பிகைக்கு கோவில் கட்டப்பட்டது. கோவில் கருவறையில் சுயம்பு மீது வெள்ளி கவசமிடப்பட்டு வணங்கப்பட்டு வருகிறது.

தற்போதும் அந்த கவசத்தை அகற்றிவிட்டு பார்த்தால் சுயம்பு உச்சியில் கடப்பாரை பட்ட காயத்தின் வடுவைக் காணலாம். இப்படி தன்னை வெளிப்படுத்திக் கொண்ட பெரிய பாளையத்து பவானியம்மன், தன்னை நம்பி, நாடி வரும் லட்சோப லட்ச பக்தர்களுக்கு வேண்டும் வரம் களை வாரி, வாரி வழங்கி ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறாள்.




பெரியபாளையத்தம்மன் வழிபாடுகள் | Aanmiga Kalanjiyam, Periyapalayathamman worships

 பிரார்த்தனை :

அங்க பிரதட்சணம் செய்வதை நீங்கள் எல்லா கோவில்களிலும் பார்த்து இருப்பீர்கள். அந்த பிரார்த்தனையை பெரிய பாளையம் பவானி அம்மன் கோவிலில் சற்று மாறுபட்டு செய்கிறார்கள். அதாவது தாங்கள் அங்கபிரதட்சணம் செய்வதற்கு பதில் கோவிலை சுற்றி அங்க பிரதட்சணம்போல தேங்காயை உருட்டி விடுகிறார்கள். இந்த பிரார்த்தனையில் ஈடுபடுபவர்கள் ஈரத்துணியுடன் பவானி அம்மனை வணங்கி விட்டு தேங்காயை உருட்டி விடுவார்கள். அந்த தேங்காய் உருண்டு செல்லும். எந்த இடத்தில் அந்த தேங்காய் நிற்கிறதோ, அந்த இடத்தில் பவானி அம்மனை நோக்கி தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிடுவார்கள். இப்படி தேங்காயை உருட்டியபடி கோவிலைச் சுற்றி வருவார்கள். இந்த பிரார்த்தனையை `அடிதண்டம்’ என்றும் பக்தர்கள் சொல்கிறார்கள்.

 நீண்ட நாட்களாக திருமணம் ஆகாத ஆண்கள் பவானி அம்மனிடம் கரகம் எடுத்து வருவதாக வேண்டிக் கொள்வார்கள். திருமணம் நிச்சயம் ஆனதும் மணமகன் கரகம் பிரார்த்தனையை நிறைவேற்றுவார். கரகத்தை நன்றாக அலங்காரம் செய்து பட்டுச்சேலை சுற்றி, பூ வைத்து, தலையில் ஏந்தி கோவிலை சுற்றி வருவார்கள். திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களும், பெரியபாளையத்தம்மனை குல தெய்வமாக கருதுபவர்களும் இந்த பிரார்த்தனையை அதிகமாக செய்கிறாரக்ள்.

 கோவில் சிறப்பு :

பெரியபாளையத்தம்மன் கோயில் மகா கும்பபிஷேகம்.... | Periyapalayam Amman Maha Kumbabishegam

பெருமாள் கோவில்களில் துளசி தீர்த்தம் கொடுக்கப்படுவது போல பெரியபாளையத்தம்மன் கோவிலில் மஞ்சள் தீர்த்தம் வழங்கப்படுகிறது. இந்த மஞ்சள் தீர்த்தம் மிகவும் பிரசித்தமானது. பவானி அம்மனின் அருள்பட்ட இந்த மஞ்சள் தீர்த்தம் பிணி தீர்க்கும் மாமருந்து என்றே சொல்லலாம். கோவிலில் அர்ச்சகர் வழங்கும் மஞ்சள் தீர்த்தத்தை பருகினால் நோய்கள் பறந்தோடி விடும் என்று பக்தர்கள் முழுமையாக நம்புகிறார்கள்.




அம்மை போட்டவர்கள் இந்த மஞ்சள் தீர்த்தத்தை குடித்தால் மூன்றே நாளில் அம்மை இறங்கி விடும் என்பது கண்கூடு. தற்போது பெரியபாளையத்தம்மன் கோவில் கருவறை அமைந்திருக்கும் பகுதியில்தான் பெரியபுற்று இருந்தது என்பதையும், அந்த புற்றை அகற்றும்போது கம்பி பட்டு சுயம்பு காயம் அடைந்து ரத்தம் பீறிட்டு வந்ததையும் ஏற்கனவே நீங்கள் படித்து இருப்பீர்கள். அப்படி ரத்தம் வந்தபோது மஞ்சள்தான் வைத்தனர். அதை பக்தர்களுக்கு உணர்த்தவே மஞ்சள் தீர்த்தம் வழங்கப்படுகிறது.

சுயம்பில் வைத்து எடுத்துத் தரப்படும் மஞ்சளை நாள்பட்ட காயம், புண்களில் வைத்தால், விரைவில் அவை ஆறி குணமாகி விடும். எனவே இந்த மஞ்சள் தீர்த்தத்தை பக்தர்கள் போட்டி போட்டு வாங்கிச் செல்வதை காணலாம். சென்னையில் இருப்பவருக்கு அம்மை போட்டிருந்தால், இந்த தலத்துக்கு வந்து மஞ்சள் தீர்த்தம் வாங்கி சென்று பயன்பெறுவது மரபாக உள்ளது. தாலி  பிரார்த்தனை செய்து பெண்கள் பவானி அம்மனை நினைத்து மனதார வேண்டிக் கொள்வார்கள். அதற்கு நன்றி காணிக்கையாக தங்களது தாலிக்கொடியையே அப்படியே பெரியபாளையத்தம்மன் கோவில் உண்டியலில் போட்டு விடுவார்கள்.

ஆடி மாத விழா காலத்தில்தான்  இந்த பிரார்த்தனையை நிறைவேற்றுவார்கள். குறிப்பாக 3-வது வாரம், 5-வது வாரம், 7-வது வாரம் அல்லது 9-வது வாரம் ஞாயிற்றுக்கிழமை  பெண்கள் இந்த பிரார்த்தனையை செய்வதுண்டு. இதன் காரணமாக ஆடி மாதம் முழுவதும் உண்டியலில் தாலி காணிக்கை மிகுதியாக இருக்கும். வேப்பஞ்சேலை பிரார்த்தனை போலவே இந்த பிரார்த்தனையும் இந்த ஆலயத்துக்குரிய ஒன்றாக தனித்துவத்துடன் உள்ளது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!