Beauty Tips

பாதவெடிப்பை குணப்படுத்தும் அருமையான மருந்து!

ஆண், பெண் என இருபாலருக்கும் ஏற்பட கூடியது தான் இந்த  பாதவெடிப்பு பிரச்னை. அதற்கான மருத்துவத்தை பார்க்கலாம். இப்பிரச்னைக்கு குப்பைமேனி, மஞ்சள்பொடி, இஞ்சி ஆகியவை மருந்தாகிறது.

பாத வெடிப்பால் ரத்தக்கசிவு ஏற்படும். வெடிப்பில் தூசி புகுந்து துன்புறுத்தும். வலியை ஏற்படுத்தும். இதை பித்த வெடிப்பு என்றும் சொல்வது வழக்கம். பித்தத்தை சமன்படுத்தும், பாதவெடிப்பை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம்.




தேவையான பொருட்கள்

குப்பைமேனி-1 கைபிடி

 விளக்கெண்ணெய்-2 டேபிள்ஸ்பூன்

மஞ்சள் பொடி-2 டேபிள்ஸ்பூன்

தயாரிக்கும் முறை

  • ஒரு பாத்திரத்தில் சிறிது விளக்கெண்ணெய் எடுத்து. இதனுடன் மஞ்சள் பொடி, குப்பைமேனி இலை பசையை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு இரவு நேரத்தில் தூங்க செல்லும் முன்பு பூசிவர பாதவெடிப்பு சரியாகும்.

  • பாதம் அழகுபெறும். குப்பைமேனி உடலை பொலிவுபெற செய்ய கூடியது. நுண்கிருமிகள், பூஞ்சை காளான்களை அழிக்கும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!