தோட்டக் கலை

காய்கறி பயிரிக்கு சிறந்த வளர்ச்சி தரும் முருங்கை இலை சாறு

இந்த முயற்சி ஆப்பிரிக்கா நாட்டில் ஒருவர் செய்து பார்த்து வெற்றி கண்டார் அதன்பின் நம் தமிழ் நாட்டில் இதனை பரப்பி அனைவரும் வெற்றி பெற்றனர். மேலும் ஒரு தக்காளி 150 கிராம் எடை அதிக பலன் தந்ததாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். அந்த சாற்றை எப்படி செய்வது என்று பார்க்கலாம் :




1.முருங்கை இலை எடுத்து  அம்மியில் அரைத்து சாறு எடுத்து 5 நாள் ஒரு வளியில் போட்டு மூடி வைத்து விட்டு 6 ஆம் நாள் ஒரு லிட்டர் தண்ணீரில் 50 மில்லி கலந்து செடியின் வேர் பகுதியில் ஊற்றினால் காய்கறி பயிர் நன்றாக காய்க்கிறது.(செய்முறை ஒன்று)

2. பிளாஸ்டிக்  பக்கெட்டில் முருங்கை இலை பறித்து எடுத்து அதன் முழுகும் அளவுக்கு தண்ணி ஊற்ற வேண்டும்.

உப்பு மற்றும் புளி சிறிதளவு (புளி சாறை எடுக்கும் தண்மை கொண்டது ) போட்டு பிளாஸ்டிக் பக்கெட்டில் மூடி வைத்து 5 நாள் பிறகு சாறு எடுத்து 6 ஆம் நாள் ஒரு லிட்டர் தண்ணீரில் 50 மில்லி கலந்து செடியின் வேர் பகுதியில் ஊற்றினால் காய்கறி பயிர் நன்றாக காய்க்கிறது.(செய்முறை இரண்டு)

மேலும் இந்த சாற்றை  1 லிட்டர் தண்ணீரில் 150 மல்லி வாரம் ஒரு முறை காய் கறி செடியின் மீது தெளிக்க காய்கறி செடி நன்றாக காய்க்கிறது மற்றும் எடை கூடுதலாக கிடைகிறது மேலும் ஒரு வாரம் முதல்  காய்கறி கெடாமல்  பசுமையாக இருக்கிறது.

முருங்கை இலை இல்லை என்றால் அகத்தி இலை அல்லது இயற்கை விளைந்த கீரை வகைகளை பயன் படுத்தலாம்.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!