Cinema Entertainment விமர்சனம்

‘இனிக்குதா? உறைக்குதா? கசக்குதா?’ ஸ்வீட் காரம் காபி விமர்சனம் இதோ!

பெண் சுதந்திரம் தேவை தான், ஆனால் அதே சுதந்திரம் பார்ப்பவர்களுக்கும் இருக்க வேண்டாமா? அதை மூன்று இயக்குனர்களில் ஒருவர் கூட புரிந்துகொள்ள தவறியது ஏன்?

மது, லெட்சுமி, சந்தி நடித்த முழு நீள வெப்சீரிஸ் தான், ஸ்வீட் காரம் காபி. தலைப்பில் மட்டும் மூன்று பேர் இல்லை, இயக்கத்திலும் மூன்று பேர் இருக்கிறார்கள். பிஜாய் நம்பியார், கிருஷ்ணா மாரிமுத்து, ஸ்வாதி ரகுராமன் ஆகியோர் இயக்கியிருக்கும் இந்த சீரியஸ், பெண்களின் வாழ்வியலை கொண்டது.




Sweet Karam Coffee Review | இந்த ஐந்து காரணத்திற்காக 'ஸ்வீட் காரம் காஃபி' வெப் சீரிஸை கட்டாயம் பாருங்க | Movies News in Tamil

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அத்தை, மருமகள், பேத்தியின் வாழ்விலை கொண்டது. அத்தையாக லெட்சுமி, அவரது மருமகளாக மது, மதுவின் மகளான சந்தி. யாரையோ சந்திக்க துடித்துக் கொண்டிருக்கிறார் லெட்சுமி. அதுக்காக வெளியே செல்ல வேண்டும். வெளியே என்றால் அது ரொம்ப தூர பயணம்.

அதற்காக ஒரு திட்டம் போடுகிறார்கள். வழக்கமாக வெப் சீரிஸ்களில் காட்டப்படும் வீடே கடவுளாக கொண்ட மருமகளாக மது. பிள்ளைகள், கணவன் யாருமே அவர் உணர்வை மதிப்பதில்லை. அவருக்கும் வெளி உலகத்தை பார்க்க ஆசை. அவரின் மகளான சந்தி கிரிக்கெட் வீராங்கனை. பயிற்சியில் சக வீரரை காதலிக்கும் அவருக்கு , காதலனுடன் சின்ன மனஸ்தாபம். அதனால் அவருக்கும் ஒரு ட்ரிப் தேவைப்படுகிறது.

மூன்று பெண்களின் வெளியூர் பயண விருப்பத்தை குடும்பத்ததலைவரான மதுவின் கணவர் மறுக்கிறார். தனக்கு வேலை இருப்பதாக கூறுகிறார். ‘உனக்கு வேலையிருந்தால் என்ன, நாங்கள் போறோம்’ என்று மூன்று பெண்களும் தடையை மீறி டூர் கிளம்புகிறார்கள். இதனால் மதுவின் கணவர் கொதித்து போய் நிற்கிறார்கள்.

இந்த பயணத்தில் லெட்சுமி, மது, சந்தி ஆகிய மூன்று பேரும் சந்திக்கும் அனுபவங்கள் தான் நடுவில் வரும் கதை. இறுதியில் லெட்சுமி யாரை சந்திக்க இந்த திட்டத்தை , இவ்வளவு பெரிய திட்டத்தை தீட்டினார் என்பது தான், பெரிய சஸ்பென்ஸ் என காட்டியிருக்கும் கதை.

‘பாய்ண்ட் வரட்டும்.. பாய்ண்ட் வரட்டும்..’ என ஒரு படத்தில் காத்திருப்பார்களே, அப்படி தான் இந்த படத்திலும், ‘எப்போ கதை வரும்… எப்போ கதை வரும்..’ என காத்திருக்க வேண்டும். இரண்டரை மணி நேர சினிமாவில் அதை எதிர்பார்ப்பதில் தவறில்லை. தலா 40 நிமிடங்களுக்கு மேல் போகும் 8 எபிசோட் கொண்ட ஒரு தொடரில், பொறுமைக்கு மேல் பொறுமை இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.

ஊர் சுற்றி காட்டுவதாக நினைத்து கதையையே சுற்றிக் காட்டியிருக்கிறார்கள். இதற்கு முன் ஒவ்வொரு படத்திலும், வெப் சீரிஸிலும் பார்த்துப் பார்த்துப் பழகிப் போன அதே பெண் கொடுமை. கொஞ்சமும் இதிலும் வித்தியாசம் இல்லாத மதுவின் கதாபாத்திரம்.

அரை மணி நேரத்தில் முடிக்க வேண்டிய நாடகத்தை நீட்டி முழக்கியிருக்கிறார்கள். உண்மையில் பார்க்க பெரிய பொறுமை தேவைப்படுகிறது. வழிநெடுகிலும் உணர்வுகளை காட்டுகிறோம் என்கிற பெயரில் கதாபாத்திரங்களை காட்டி, காட்டி, எபிசோடுகளை கடத்தியிருக்கிறார்கள்.




போதாக்குறைக்கு லெட்சுமியின் ப்ளாஷ்பேக் காட்சிகளை காட்டி, அவர் தேடுவது முன்னாள் காதலன் என்பதைப் போல கொண்டு வந்து, இறுதியில் அவர் தேடி வந்தது ஒரு தோழியை என்று சஸ்பென்ஸ் முடிக்கிறார்கள். நட்பும் ஒரு விதமான உணர்வு தான். அதற்காக 5:30 மணி நேரத்தை கடந்து தான் அந்த நட்பை அறிய வேண்டும் என்றால், அது கொஞ்சம் சிரமம் தான்.

அடிப்படையில் வெப்சீரிஸ் த்ரில்லராகவோ, க்ரைமாகவோ, நகைச்சுவையாகவோ கடந்தால் மட்டுமே அது முழுபெறும். காரணம் அதற்காக எடுத்துக் கொள்ளும் நேரம் அப்படி. அப்படி இருக்க, மேலே சொன்ன மூன்றுமே இல்லாமல் எப்படி இந்த முடிவு எடுத்தார்கள் என்பது அவர்களுக்கே சாத்தியம்.

நகைச்சுவை இருப்பதாக சொல்லப்பட்டாலும், அதற்கு சிரிப்பு தான் வரவில்லை. ஆறுதலான ஒரே விசயம், ஒளிப்பதிவு மட்டுமே. மற்றொரு விசயம், பின்னணி. 96 படம் போன்று தாக்கத்தை ஏற்படுத்த முயற்சித்திருக்கிறார்கள் ஓகே. அதற்காக அந்த படத்தின் பின்னணி இசையை , அப்படியே இதிலும் பயன்படுத்தியிருப்பது அப்பட்டமாக தெரிகிறது.

பெண் சுதந்திரம் தேவை தான், ஆனால் அதே சுதந்திரம் பார்ப்பவர்களுக்கும் இருக்க வேண்டாமா? அதை மூன்று இயக்குனர்களில் ஒருவர் கூட புரிந்துகொள்ள தவறியது ஏன்? திரைக்கதையில் பெரிய ஓட்டை இருக்கிறது. என்ன தான் நடிப்பால் அதை ஈடுகட்ட நடிகர்கள் முயற்சித்தாலும், கவிதையாக கடப்பதாக நினைத்து காட்சிகளில் கோட்டை விட்டிருக்கிறார்கள் என்பது கடைசி வரை தெரிகிறது. ஸ்வீட் காரம் காபி தேடி வந்தால், சுக்கு காபியும், சுண்டலும் கிடைத்ததாக தான் கடக்க வேண்டியிருக்கிறது.  அமேசான் ப்ரைமில் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகியிருக்கம் இந்த சீரிஸ், கொஞ்சம் சீரிஸ் தான்.




 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!