gowri panchangam Sprituality Uncategorized

ஆடி மாதம் அம்மன் மாதம்

ஆடி என்றாலே அம்மனுக்கு பிடித்த மாதம். அம்மனுக்கு கூழ் படைத்து வழிபடுவது தொன்று தொட்டு வரும் மரபு. எவ்விடத்திலும் தூய்மை காக்கப்படும் அதிலும் ஆடி செவ்வாய் பல்வகையில் உயர்வு பெற்றது. பொதுவாக இந்த ஆடி மாதத்தில் சுப காரியங்கள் செய்ய மாட்டார்கள். பெயர் சூட்டுதல், வளைகாப்பு, காது குத்துதல் போன்ற நிகழ்வுகளுக்கு தோஷம் இல்லை. மேலும் ஆடி செவ்வாயில் கொண்டாடப்படும் ஒரு நோன்பு ஔவையார் நோன்பு.

amman temple | ஆடி மாத முதல் வெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

இது பற்றி செவி வழி செய்தி ஒன்று உள்ளது.. அதாவது ஒரு ஏழைப் பெண் கிராமத்திலேயே வசித்து வந்தாள். உடுத்துவதற்கு மாற்று துணி கூட இல்லாத நிலையில் அவள் இருந்து வந்தாள். அப்பொழுது ஒரு நாள் அவள் வீட்டுக்கு வந்த அவ்வை பாட்டி அவள் மீது இரக்கம் காட்டி அருள் பாலிக்க நினைத்தால் அந்த ஏழை பெண்ணை அழைத்து ஆடி மாதம், தை மாதம், மற்றும் மாசி மாதம் ஆகிய மூன்று மாதங்களில் ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் அவ்வை நோன்பு இருக்க சொன்னாள் அந்தப் பெண்ணும் ஏழ்மையிலும் அந்த விரதத்தை கடைபிடிக்க துவங்கினால் இன்றளவும் அந்த நோன்பு கடைபிடிக்கப்படுவதாக கூறப்படுகிறது.




ஆடிச் செவ்வாயில் நள்ளிரவில் பெண்கள் அனைவரும் ஒன்று கூடி பச்சரிசி மாவில் வெல்லம் சேர்த்து உப்பில்லா கொழுக்கட்டை தயாரித்து படையல் போட்டு விளக்கேற்றி பூஜை செய்வார்கள். அப்பொழுது மாவு பிள்ளையாரையும் மாவு அவ்வையாரையும் பிடித்து வைப்பார்கள். பெண்களில் ஒருவர் அவ்வையாரின் கதையை கூற மற்றவர்கள் கேட்பார்கள், பின் நீர் நிரம்பிய பாத்திரத்தில் மாங்கல்யத்தை காட்ட அதன் பிம்பத்தை மற்றவர்கள் வணங்கிடுவார். பின்னர் விரத நிவேதனங்களை விரதம் இருந்தவர் உண்பர். இதில் ஆண்களுக்கு இடமில்லை. இப்படியாக அந்த ஏழைப் பெண் வழிபட அனைத்து நன்மைகளும் கிடைத்தது அதாவது அந்த நாட்டிற்கே ராணியாகும் யோகம் கிடைத்ததாகவும் செவி வழி செய்திகள் உள்ளன.

மற்றொரு முக்கியமான ஆன்மீக செய்தி நீண்ட காலமாக உடல் நலிவுற்றவர்கள், கடனில் அவதிப்படுபவர்கள், நீதியற்ற எதிரிகளால் பாதிக்கப்பட்டோர்,செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் அம்பாளுக்கு எலுமிச்சம் விளக்கேற்றி வழிபட்டால் அனைத்து துன்பங்களும் நீங்கும் என்பதும் திருமண யோகம் கிடைக்கும் என்பதும் ஐதீகம் மட்டுமல்லாமல் அனுபவம் மிக்க உண்மையும் கூட ஆகும்.

ஆடி வெள்ளியானது அம்பாள் குளிர்ந்த மனதுடன் இருப்பார். ஆடி வெள்ளி அன்று அம்பாளை வழிபடுவது வாழ்வில் திருமண யோகம் மற்றும் அனைத்துநன்மைகளையும் அடைவதற்கான வழிகளை தேடி தரும். மேலும் ஆடி வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் காலை வேலையில் புறத்தூய்மை அகத்தூய்மை செய்துவிட்டு வீட்டில் விளக்கு ஏற்றி மாலை வேளையில் மகாலட்சுமியை வழிபட்டால் அனைத்து சகல செல்வங்களும் ,திருமணமாகதவர்கள் திருமண வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இனி அடுத்தடுத்து வரும் பதிவுகளில் அம்மன் கோவில் வழிபாடு மற்றும் அம்மன் கோவில் சிறப்புகள் பற்றி தொடர்ந்து பார்க்கலாம்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!