health benefits lifestyles

பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் அருந்துகிறீர்களா..?இதை படியுங்கள்..!

பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் அருந்துகிறீர்களா..? இதை படித்துவிட்டு முடிவு செய்யுங்கள்..!

வீட்டை விட்டு வெளியேறி விட்டால் 100-க்கு 90 சதவீதம் நாம் தாகத்திற்கு பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீரைத்தான் நாடியிருக்கிறோம். ஆனால், தனிப்பட்ட முறையில் இது நம் உடல் நலனுக்கு தீங்கானது என்பது மட்டுமல்லாமல் சுற்றுச்சூழலுக்கும் பேராபத்து ஏற்படுத்தக் கூடியதாக அமைகிறது.




உதாரணத்திற்கு தண்ணீர் அருந்திவிட்டு வனப்பகுதியில் நாம் தூக்கி எறிகின்ற பாட்டில்கள் வனவாழ்வை பாதிக்கின்றன. அதேபோல கடற்கரை பகுதிகளில் கொட்டப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களால் கடல்வளம் பாதிக்கப்படுகிறது. சாதாரணமாக நாம் வசிக்கும் பகுதிகளில் கூட பிளாஸ்டிக் பாட்டில்களால் மழைநீர் வடிகால், கழிவுநீர் கால்வாய் போன்றவற்றில் அடைப்பு ஏற்படுகிறது.

இந்தியாவில் ஆண்டுதோறும் 3.5 மில்லியன் அளவுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் சேருகின்றன என்று மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார். அதிலும், தனிநபர்களின் பயன்பாடு மூலமாக சேகரமாகும் பிளாஸ்டிக் கழிவுகள் என்பது கடந்த 5 ஆண்டுகளில் இரட்டிப்பாக மாறியிருக்கிறதாம்.




முன்னதாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசும்போது, “நாம் இன்றைக்கு எதிர்கொள்ளும் சுற்றுச்சூழல் பாதிப்புகளில் மிக முக்கியமான இடத்தை பிளாஸ்டிக் பெற்றுள்ளது. பிளாஸ்டிக் மாசுபாடு காரணமாக நம் வாழ்வியல் சூழல் பாதிக்கப்படுவதோடு, காற்று மாசுபாடும் ஏற்படுகின்றது’’ என்றார்.

பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலமாக தண்ணீர் அருந்துபவர்களின் சிறுநீரை ஆய்வு செய்ததில், பைபெனால் என்னும் ரசாயனம் அதில் அதிகம் இருப்பது தெரிய வந்தது என்று ஹார்வார்டு மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவிக்கிறது. அதிலும் பிளாஸ்டிக் பாட்டில்களில் வெந்நீரை அடைத்து குடித்தால் இந்தப் பாதிப்பு பல மடங்கு அதிகரிக்குமாம்.

இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், “பைபெனால் பாதிப்புக்கு உள்ளாகும் இளம் சிறுமிகளின் செயல்பாடு பாதிக்கப்படும் மற்றும் உளவியல் ரீதியிலான பிரச்சினைகள் ஏற்படும். சிறுநீரில் இந்த ரசாயனம் அதிக அளவு உள்ள மக்களுக்கு இதய நோய் அல்லது நீரிழிவு போன்ற பிரச்சினைகள் உண்டாகும்’’ என்று குறிப்பிடுகின்றனர்.




இதுகுறித்து மருத்துவர் கூறுகையில், “பிளாஸ்டிக் பாட்டில்களில் வெந்நீரை ஊற்றும்போது அதிலிருந்து நுண்ணிய அளவிலான பிளாஸ்டிக் வெளியேறுகிறது. அந்த தண்ணீரை அருந்தும்போது இது உங்கள் உடலில் சேர்ந்துவிடும். ஹார்மோன் சீர்குலைவு, குழந்தையின்மை போன்ற பிரச்சினைகள் இதன் மூலமாக ஏற்படும்.

இது மட்டுமல்லாமல் தண்ணீர் அருந்திவிட்டு நாம் தூக்கிப்போடும் பாட்டில்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் மக்காமல் மண்ணிலேயே இருக்கும். ஆகவே, தண்ணீர் அடைக்க ஆரோக்கியமான கலன்களை பயன்படுத்துவது குறித்து மக்கள் சிந்திக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.

கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் மற்றும் குளோரைடு போன்றவை கலந்துதான் பிளாஸ்டிக் பாட்டில்களை தயாரிக்கின்றனர். அதிலும் பைபெனால் ரசாயன கலப்பு மிக, மிக அதிகம். இப்படிப்பட்ட பாட்டில்களில் தண்ணீரை நீண்ட நாட்களுக்கு அடைத்து வைத்து குடிப்பது மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!