Cinema Entertainment

13 முறை ரஜினியுடன் நேருக்கு நேராக மோதிய கமல்..

ரஜினி, கமலின் படங்கள் ஒரே நேரத்தில் 14 தடவை ரிலீஸ் ஆகி இருக்கிறது, ஆனால் அதில் ரஜினியின் படங்களே அதிக வெற்றி அடைந்துள்ளது. ஒரே ஒரு முறை மட்டுமே ரஜினியுடன் போட்டி போட்டு கமலின் படம் வெற்றி பெற்று இருக்கிறது.

கமலும் ரஜினியும் சமகாலத்து போட்டியாளர்கள், ஆனால் கமலை விட ரஜினி படத்திற்கு எப்போதுமே தியேட்டர் ரெஸ்பான்ஸ் அதிகம், அதற்கு ரஜினியின் மாஸ் பாடல்களும், பன்ச் வசனங்களும் காரணம்.

Prime Video: Nallavanukku Nallavan




நல்லவனுக்கு நல்லவன் vs எனக்குள் ஒருவன் (1984): நல்லவனுக்கு நல்லவன் மற்றும் எனக்குள் ஒருவன் திரைப்படங்கள் இயக்குனர் SP முத்துராமன் இயக்கி ஒரே நேரத்தில் வெளியானது. இதில் எனக்குள் ஒருவன் 100 நாட்களும், நல்லவனுக்கு நல்லவன் 175 நாட்களும் ஓடியது.

.Japanil Kalyanaraman (Original Motion Picture Soundtrack) Songs Download - Free Online Songs @ JioSaavn

படிக்காதவன் vs ஜப்பானில் கல்யாணராமன் (1985): படிக்காதவன் திரைப்படம், ரஜினி, சிவாஜி கணேசன், அம்பிகா, நாகேஷ் நடித்த திரைப்படம். ஜப்பானில் கல்யாணராமன் படத்தின் இயக்குனர் SP முத்து ராமன், இந்த படம் கல்யாண ராமன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக எடுக்கப்பட்டது. படிக்காதவன் திரைப்படம் 235 நாட்கள் ஓடி வெற்றி கண்டது.

மாப்பிள்ளை vs வெற்றி விழா (1989): ரஜினி மீண்டும் இயக்குனர் ராஜசேகர் கூட்டணியில் மாப்பிள்ளை திரைப்படத்தில் நடித்தார். கமலின் வெற்றி விழா பிரபு, குஷ்பூ என பெரிய கூட்டணியுடன் அமைந்தாலும் மாப்பிள்ளை திரைப்படம் 125 நாட்கள் ஓடி வெற்றி கண்டது.

பணக்காரன் vs இந்திரன் சந்திரன் (1990): பணக்காரன் , இயக்குனர் வாசு இயக்கத்தில் ரஜினி-கௌதமி நடிப்பில் 1990 ஆம் ஆண்டு பொங்கல் அன்று ரிலீஸ் ஆனது. இந்திரன் சந்திரன் கமல் நடித்த தெலுங்கு படத்தின் தமிழ் பதிப்பாக வெளியானது. இந்த படங்களில் ரஜினியின் பணக்காரனே வெற்றி கண்டது.

தளபதி vs குணா (1991): இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி-மம்முட்டி என்னும் மிகப்பெரிய ஜாம்பவான்களின் கூட்டணியில் வெளியான திரைப்படம். இது ரஜினியின் கேரியரில் மிக முக்கியமான திரைப்படம். இந்த படத்துடன் ரிலீசான கமலின் குணா திரைப்படம் அந்த அளவிற்கு எடுபடாமல் போனது.

பாட்ஷா vs சதிலீலாவதி (1995): கமல்-கிரேசி மோகனின் வழக்கமான நகைச்சுவை பாணியில் சதிலீலாவதி திரைப்படம் இருந்தது. இந்த படத்துடன் ரிலீசான பாட்ஷா திரைப்படம் மும்பை கேங்ஸ்டர் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு 185 ஓடி வெற்றி கண்டது.

முத்து vs குருதி புனல் (1995): குருதிப்புனல் நடிகர் கமலஹாசனின் கேரியரில் மிக முக்கியமான படம் என்றாலும், KS ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, மீனா, சரத் பாபு, ராதா ரவி, வடிவேலு, செந்தில் நடித்த முத்து 185 நாட்கள் வெற்றிகரமாக திரையில் ஓடியது.

சந்திரமுகி vs மும்பை எக்ஸ்பிரஸ் (2005): சந்திரமுகி ரஜினிக்கு 3 ஆண்டுகளுக்கு பின் திரைக்கு வந்த படம். இந்த படம் 365 நாட்கள் ஓடி மிகப்பெரிய சாதனை படைத்தது. இந்த படத்துடன் ரிலீசான கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் மற்றும் விஜயின் சச்சின் தோல்வியையே கண்டது.

பாண்டியன் vs தேவர் மகன் (1992): கமலின் எழுத்து மற்றும் இயக்கத்தில் கமல்-சிவாஜி கணேசன் நடிப்பில் உருவான திரைப்படம். இந்த படம் 5 தேசிய விருதுகளை பெற்றது. இந்த படம் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்த படம் 175 திரை கண்டது. இந்த படத்துடன் வெளியான ரஜினியின் பாண்டியன் திரைப்படம் பெரிதாக கண்டு கொள்ளப்படவில்லை.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!