தோட்டக் கலை

வெங்காயத்தை வீட்டிலேயே எளிமையாக வளர்ப்பது எப்படி?

பொதுவாய் வீட்டுத் தோட்டத்தில் பேசப்படாத ஓன்று. மாடித் தோட்டம் என்றால் தக்காளி, கத்தரி, மிளகாய், அவரை, வெண்டை என்ற அளவில் முடித்துக் கொள்வோம். வெங்காயத்தை ஒரு முக்கிய காய்கறியாக யாரும் பெரிதாய் எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் நம்மை நிறைய நேரம் தலைச்சுற்ற விடுவது வெங்காயம் விலை தான்.

சில நேரம் கிலோ பத்து ரூபாய் என்று அடிமாட்டு விலைக்கு விற்கும் வெங்காயம், பல நேரங்களில் கிலோ அறுபது ரூபாய், என்பது ரூபாய் என்று ஏறி வீட்டில் வெங்காய சட்னி, வெங்காய தோசைக்கு எல்லாம் வேட்டு வைத்து விடுகிறது.விலை கூட பரவாயில்லை, இப்போவெல்லாம் சின்ன வெங்காயத்திற்கும் பெரிய வெங்காயத்திற்கும் வித்தியாசமே தெரிவதில்லை. 




இதன் காரணமாக பலரும் வீட்டிலேயே வெங்காயத்தை வளர்த்தால் என்னவென்று தோன்றும். உங்களுக்கும் அப்படி தோன்றினால், இக்கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வெங்காயம் வளர்ப்பதற்கு தோட்டம் அவசியம் என்பதில்லை. கண்டைனர் தோட்டத்தில் கூட வெங்காயத்தை வளர்க்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? கண்டைனரில் வெங்காயத்தை வளர்ப்பதால் அவற்றை வீட்டிற்குள் அல்லது வீட்டின் பின்புறத்தில் சிறிய இடத்தில் கூட வளர்க்கலாம்

கண்டைனர்

உண்மையில் சொல்ல வேண்டுமானால், வெங்காயத்தை பூமியில் வளர்ப்பதற்கும், தொட்டியில் வளர்ப்பதற்கும் என்ன வித்தியாசம் என்றால், என்ன கண்டைனரை நீங்கள் தேர்ந்தெடுக்க போகிறீர்கள் என்பதில் தான் உள்ளது.




நல்ல அறுவடை செய்ய பல வெங்காய செடிகளை நட்டு வைக்க வேண்டி வரும். ஆனால் 5-6 இன்ச் தொட்டியில் இதை செய்வது மிகவும் சிக்கலான ஒன்றாக இருக்கும். ஒருவேளை, வெங்காயத்தை தொட்டியில் வளர்க்க முடிவு செய்தீர்கள் என்றால், பெரிய வாயை கொண்ட தொட்டியை தேர்ந்தெடுக்கவும். குறைந்தது 10 இன்ச் ஆழமாவது இருக்க வேண்டும். ஆனால் பல அடி அகலமாக இருக்க வேண்டும். அப்போது தான் நல்ல அறுவடையை ஈட்டிட போதிய செடிகளை நட்டு வைக்க முடியும்.

வெங்காயம், விதையில் இருந்தும் கொண்டு வரலாம், வெங்காயத்தில் (bulb) இருந்தும் கொண்டு வரலாம். சின்ன வெங்காயம் விதையும் பயன்படுத்தலாம்.  சந்தையில் நல்ல நாட்டு வெங்காயம் கிடைத்தால் அதையும் பயன்படுத்தலாம்.வெங்காயத்தை நாற்று எடுத்து நடுவது, தகுந்த இடைவெளி விட்டு நட எளிதாக இருக்கும்.




வெங்காயத்தை வாளி அல்லது தொட்டியில் என எதில் வளர்த்தாலும், வெங்காய கண்டைனரில் 6 முதல் 7 மணி நேரம் சூரிய வெளிச்சம் படும் படி பார்த்துக் கொள்ளுங்கள். வீட்டிற்குள் வெங்காயத்தை வளர்த்து, அந்த இடத்தில் போதிய சூரிய ஒளி கிடைக்கவில்லை என்றால், வெங்காயத்தில் படும் படி, ஒளிரும் விளக்குகளை அமைத்திடவும்.

கண்டைனரில் வெங்காயத்தை வளர்க்க வேண்டுமானால், அதற்கு தண்ணீர் அத்தியாவசியமானது. கண்டைனரில் வளரும் வெங்காயத்திற்கு வாரத்திற்கு குறைந்தது 2-3 இன்ச் அளவிலாவது தண்ணீர் தேவைப்படும். கோடைக் காலம் என்றால் இன்னும் அதிகமாக தேவைப்படும். உங்கள் வெங்காய செடிகளை தினமும் சோதிக்கவும். அதன் மண் காய்ந்து போனால் உடனே தண்ணீர் ஊற்றுங்கள்.

வெங்காயம், மிக எளிதான ஒரு காய்கறி என்று சொல்லலாம். வெங்காயத்தில் எந்த நோய் தாக்குதலோ, பூச்சி தாக்குதலோ இருக்காது.  நாற்று எடுத்து விட்டால், நான்கு மாதத்தில் விளைச்சல் எடுக்கலாம்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!