தோட்டக் கலை

வாழை மரம், வளர்ப்பு மற்றும் பராமரிப்பு முறைகள்..!

இன்று உலகம் முழுவதும் ஒரு மரம் உள்ளது என்றால் அது வாழைமரம் என்று அனைவருக்கும் நன்றாக தெரியும். இந்த வாழை மரமானது முசேசி குடும்பத்தைச் சார்ந்தது. வாழையிலிருந்து கிடைக்கக்கூடிய ஒவ்வொரு பொருளுமே பயன்பாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.




மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை வாழை மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூறலாம். அப்படிப்பட்ட வாழை மரத்தை உங்கள் வீட்டுத் தோட்டத்தில் எப்படி வளர்ப்பது, எப்படி பராமரிப்பது என்பது பற்றிய விளக்கத்தை இந்த கட்டுரையில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

வாழை மரம் வளர்க்கும் முறைகள்

வாழைமரம் வளர்க்க வேண்டும் என்றால் அதற்கு வெய்யில் அதிகமாக இருக்கக்கூடிய பகுதியே சிறப்பாக இருக்கும். இந்த மரத்திற்கு ஏழு முதல் எட்டு மணி நேரம் சூரிய ஒளி அவசியம் தேவை.

நாற்றாங்கால்களில் கிடைக்கும் நல்ல வாழை கன்று ஒன்றினை வாங்கி வந்து அதனை உங்கள் வீட்டுத் தோட்டத்தில் நடவு செய்து வளர்க்கலாம்.




இவ்வாறு நீங்கள் வாழை கன்றினை வாங்கி வந்துவிட்டால், அதை நடவு செய்ய முதலில் மண்ணில் தோண்டி நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். மேலும் மண்ணுக்குத் தேவையான உரங்களை போட்டு நீங்கள் தோண்டி இருக்கும் குழியில் வாழைக்கன்றை வைத்து மண்ணினை மூடி விடுங்கள்.

இந்த வாழைக்கன்றுக்கு தேவையான நீரினை தினமும் ஊற்றுவதோடு, அதற்குத் தேவையான உரத்தையும் நீங்கள் தருவது அவசியமாகும்.

மேலும் உங்கள் வீட்டு சமையல் அறையில் வீணாக எறியப்படும். காய்கறி கழிவுகளை நீங்கள் வெளியே போடாமல் உங்கள் வாழைமரம் வேர் பகுதியில் போட்டு மண்ணை அணைத்து கொடுங்கள்.




இப்படி செய்வதின் மூலம் உங்கள் வாழை நன்கு செழித்து வளர்ந்து ஊறிய பருவத்தில் குலையை தள்ளும். குலையை தள்ளும் போது நீங்கள் மரம் சாய்ந்து விடாமல் இருக்க முட்டுக் கொடுப்பது மிகவும் முக்கியமானதாகும்.

மேலும் குலை நன்கு முற்றிய பிறகு உங்கள் மரத்திலேயே அதை பழுக்க விட்டு எடுத்து சாப்பிட்டு பாருங்கள் நிச்சயமாக இதன் சுவை மாறுபட்டு இருப்பதை நீங்கள் உணருவீர்கள்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!