Beauty Tips Uncategorized

முகப்பரு பிரச்சனைக்கு தீர்வு தரும் வாழைப்பழத்தோல்

முகத்தில் பருக்கள் வந்துவிட்டாலே கவலைகளும் வந்துவிடும். கண்ணாடியில் முகத்தை பார்க்கும்போதெல்லாம் பருக்கள் மீதுதான் கண்கள் சாயும். அப்படி நீங்களும் வருத்தப்படுகிறீர்கள் எனில் வாழைப்பழத் தோலை பயன்படுத்தி எவ்வாறு முகப்பருக்களை அகற்றலாம் என்று பார்க்கலாம்.




வாழைப்பழத் தோலுடன் பால் சேர்த்து சருமத்திற்கு அழகு சேர்க்கலாம். மேலும் சரும வறட்சி, எண்ணெய் பசைத்தன்மை போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்.

  • முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி விட்டு, பின்னர் பாலை முகத்தின் அனைத்து பகுதியிலும் தடவி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். உலர்ந்த பின்னர் பருத்தி துணியால் முகத்தை துடைக்க வேண்டும். அதன் பின்னர், வாழைப்பழத்தோலின் உள்பகுதியை எடுத்து முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும்.இதனால் பருக்கள் தானாக உடைந்து குணமாகும்.




  • வாழைப்பழத் தோலை, தேனுடன் கலந்து பயன்படுத்துவதன் மூலம் முகப்பருக்களை போக்க முடியும். மேலும் இதன்மூலம் சருமத்தில் ஈரப்பத தன்மையை தக்க வைத்தல், சரும வறட்சியை தடுத்தல் ஆகியவற்றை செய்யலாம்.

  • அத்துடன், முகப்பருவால் ஏற்படும் வீக்கம் இதன்மூலம் தடுக்கப்படும். வாழைப்பழத் தோலை கூழ் போல் செய்து, அதனுடன் தேன் சேர்த்து குழைத்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையை முகத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். தினமும் இதனை ஒருமுறை செய்ய வேண்டும். இவ்வாறு  செய்ய முகத்தில் உள்ள எண்ணெய் பிசுக்கு, அழுக்குகள் வெளியேறிவிடும்.

  • வாழைப்பழத் தோல் மற்றும் கற்றாழை இலை ஜெல் இரண்டையும் ஒன்று சேர்த்து, பசைபோல் குழைத்து முகத்தில் தடவி, அரை மணி கழித்து நீரில் கழுவ வேண்டும். இதன்மூலம் கரும்புள்ளி  பிரச்சனைகள் தீரும்.

  • வாழைப்பழத் தோலை கூழ் செய்து, அதனுடன் மஞ்சள் தூள் கலந்து முகத்தில் பூசி வர, முகப்பரு பிரச்சனையால் ஏற்படும் வீக்கம் குறையும். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இதனை செய்ய வேண்டும். மசாஜ் செய்தவுடன் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!