lifestyles News

பெண்கள் பற்றிய சுவாரசியமான உளவியல் உண்மைகள்

‘பெண்ணாய் பிறப்பதற்கே மாதவம் செய்திருக்க வேண்டும்’ என கவிமணி மிக அழகாகப் பெண்ணின் பெருமையை எடுத்துக்கூறியதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். பெண்ணானவள் அகிலத்தையே ஆளும் சக்தி வாய்ந்தவள் என்பது நமக்கு தெரியும். ஆனாலும் நமக்கு தெரியாத  பெண்கள் பற்றிய சுவாரசியமான உளவியல் உண்மைகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆண்கள் ஒரு நாளுக்கு 5000 முதல் 7000 வார்த்தைகள் வரை பேசுவார்கள். பெண்கள் ஒரு நாளுக்கு 20,000 வார்த்தைகள் வரை பேசுவார்கள். பெண்களுக்கு, தான் பேசுவதை பிறர் கேட்பது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

  •  பெண்கள் தனக்கான உடையைத் தேர்ந்தெடுப்பதற்கு மட்டுமே, வாழ்நாளில் சுமார் ஒரு வருட காலத்தைச் செலவழிக்கின்றனர்.

  •  ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும் திறன் படைத்தவர்கள் பெண்கள் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தங்களது இரண்டு காதுகளால் ஒரே நேரத்தில் வெவ்வேறு விஷயங்களைக் கேட்டு உள்வாங்கும் திறனும் பெண்களுக்கு உண்டு.

  • ஆண்களை விட, குறைவாகவே பெண்கள் பொய் பேசுவார்கள். தான் பேசுவது பொய் என்று பிறர் கண்டுபிடிக்காதவண்ணம், உண்மைபோலவே பேசும் திறமை பெண்களிடம் உள்ளது. மேலும் மற்றவர்கள் பேசும் பொய்யை எளிதாக கண்டுபிடிக்கும் திறனும் அவர்களுக்கு உண்டு.




  • பெண்கள் உடல் அளவில் பலவீனமானவர்கள் என்பது பொதுவான கருத்து. உண்மையில் மனதளவில் மட்டுமின்றி, உடல் அளவிலும் பெண்கள் பலமிக்கவர்கள். வலியை தாங்கும் சக்தி ஆண்களை விட, பெண்களுக்கு அதிகமாக உள்ளது.

  • சிறு சிறு பிரச்சினைகளுக்குக்கூட பெண்கள் அதிகமாக கவலைப்படுவார்கள். அதேசமயம் அவர்களால் கவலைகளில் இருந்து சீக்கிரமே மீண்டு வர இயலும். அதுமட்டுமல்லாமல் பிரச்சினைக்கானத் தீர்வையும் எளிதாக கண்டுபிடித்து விடுவார்கள்.

  •  பெண்கள் அதிகமாக அழுவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. வருடத்திற்கு 30 முதல் 60 முறை பெண்கள் அழுகின்றனர்.

  • சுற்றி இருப்பவர்களைத் திருப்திப்படுத்தவும், மற்றவர்களின் கருத்துக்களை கேட்டு தன்னை சரிபடுத்திக்கொள்ளவும் பெண்கள் விரும்புவார்கள். முக்கியமாக ஆடை அலங்கார விஷயத்தில் மற்றவர்களின் கருத்தை கவனமுடன் கேட்பதில் ஆர்வமுடையவர்களாக இருப்பார்கள்.

  •  தனது கோபத்தைப் பெரும்பாலும் உணர்ச்சிகள் மூலமாகவும், வார்த்தைகள் மூலமாகவும் பெண்கள் வெளிப்படுத்துவார்கள். ஆண்கள் கோபத்தை செயல் வடிவத்தில் வெளிப்படுத்துவார்கள்.

  •  பெண்கள் அழுவதற்குப் பெரிதாக எந்த காரணமும் தேவை இல்லை. பெரும்பாலான பெண்கள் மற்றவர்கள் அழுவதை பார்த்தாலே, அழுது விடுபவர்களாக இருப்பார்கள்.




What’s your Reaction?
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!