தோட்டக் கலை

நமது தோட்டத்தில் இஞ்சி வளர்க்கலாமா?

இஞ்சி வளர்ப்பது அநேகருக்கு ஒரு புதிராகவே இருக்கலாம். இதற்கு சாட்சியாக இஞ்சியை நாம் பொதுவாக கடைகளில் பார்க்க முடியும் ஆனால் நர்சரிகளில் அச்செடியினை காண முடியாது. சரி இப்போது இஞ்சியை வீட்டில் வளர்க்க முடியுமா முடியாதா? விடை முடியும் என்பதே! அதுமட்டுமல்லாமல் அதை வளர்ப்பது எளிதானதும் கூட. வாருங்கள் எப்படி இஞ்சியை வீட்டில் வளர்ப்பது என பார்ப்போம்.




  • இஞ்சி வளர்ப்பதற்கு மிக எளிமையான வழி இஞ்சி வளர்ப்பவர்களிடமிருந்து சில புது மலர்ச்சி வாய்ந்த (ஃபிரஷ்) இஞ்சி துண்டுகளை வாங்குவது தான் இல்லையென்றால் கடையிலிருந்தும் வாங்கிக்கொள்ளலாம். பிறகு அத்துண்டுகளை வெதுவெதுப்பான நீரில் இரவு முழுதும் ஊற வைக்க வேண்டும். இதன் மூலம் அதன்மேல் இருக்கும் வளர்ச்சியை தடுக்கும் பொருட்களை நீக்கிவிடலாம்.

  • நீங்கள் இஞ்சியை தொட்டியில் வளர்ப்பதாயிருந்தாலும் சரி, தோட்டத்தில் வளர்ப்பதாயிருந்தாலும் சரி இரண்டிற்குமே இளம் இஞ்சி செடிக்கு நன்கு உணவளிக்க கூடிய வளமான மண் தேவை. அதுமட்டுமன்றி நன்கு நீரை தக்க வைக்க கூடியதும் அதே நேரத்தில் அதிகபட்ச நீரை வெளியேற்ற கூடியதாயும் இருக்க வேண்டும்.

  • இஞ்சி வளர்ப்பதற்கு நிறைய இடம் தேவை படுவதில்லை, ஏனெனில் இஞ்சி அதிகபட்சமாக 2-3 அடி உயரம் வரை தான் வளரும். ஒரு 14 அங்குல தொட்டியில் அதிகபட்சமாக 3 இஞ்சி செடிகளை வளர்க்கலாம். தோட்டத்தில் வளர்ப்பதாயிருந்தால் ஒவ்வொரு செடிக்கும் 6-8 அங்குலம் இடைவெளி இருப்பது நல்லது.




  • இச்செடியை நிறைய சூரிய ஒளி கிடைக்கும் இடத்தில் வைக்க வேண்டும். அதே நேரத்தில் நேரடியாக சூரிய ஒளி அதன்மேல் படாத இடமாயும் நிறைய காற்று அடிக்காத இடமாயும் இருத்தல் வேண்டும். இவற்றிற்கு ஏற்ற வெப்பம் 25-30°C ஆகும்.

  • நன்கு வளர இவற்றிற்கு நிறைய நீர் தேவை. மண் எப்போதும் காய்ந்து போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் தேவைக்கு அதிகமாக நீர் ஊற்றுவதன் மூலம் மண்ணில் இருக்கும் சத்துக்களும் நீருடன் வடிந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இவற்றிற்கு ஈரப்பதமான சூழல் தேவை ஒருவேளை சுற்றியிருக்கும் காற்று ஈரப்பதமின்றி காய்ந்திருந்தால் அடிக்கடி நீரை அதன்மேல் தெளிப்பது(Spray) நல்லது. ஆனால் இவை சிலந்திகளை ஈர்க்கலாம். அடைக்கலமான (sheltered) வெதுவெதுப்பான ஈரமிக்க இடம் இதற்கு போதுமான ஈரப்பதத்தை அளிக்கிறது.

  • நீங்கள் இஞ்சியை நல்ல வளமிக்க மண்ணில் வைத்திருந்தால் அதற்கு கூடுதலாக எந்த ஊட்ட சத்தும் தேவைப்படாது. நீங்கள் கடையில் விற்கும் தொட்டி கலவையை(pot mixture) பயன்படுத்தியிருந்தால் முறையாக ஊட்டச்சத்து அளித்தல் வேண்டும். நடும்போது மெதுவாக சத்துக்களை வெளியேற்றும் கரிம உரங்கள் போதுமானது. பின் கடல்பாசியிலிருந்து எடுக்க படும் திரவ உரத்தையோ மீன் உரத்தையோ தொடர்ந்து சில வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தலாம்.




  • நீங்கள் தோட்டத்தில் இதனை வளர்த்தால் நட்டு 4 மாதங்களிலிருந்து சிறு சிறு துண்டுகளை அதிலிருந்து எடுத்து கொள்ளலாம். தோண்டும் போது மட்டும் கவனமாக இருக்க வேண்டும். மற்றபடி இஞ்சியை அறுவடை செய்ய சிறந்த நேரம் அதன் இலைகள் அனைத்தும் உயிரிழந்த பிறகு தான். இதற்கு எட்டிலிருந்து பத்து மாதங்கள் வரை ஆகலாம்.

இஞ்சி வளர்ப்பது மிக சுலபமாக உள்ளதல்லவா? பிறகு ஏன் காத்திருக்கிறீர்கள்? உடனே முயற்சி செய்து பாருங்கள். பயிரிட்டு மகிழுங்கள். நன்றி.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!