Cinema Entertainment

‘எனக்கு இப்படி ஒரு நோய் இருக்கு’ ஓபன் டாக் கொடுத்த வனிதா!

நடிகை வனிதா விஜயகுமார் தனக்கு இருக்கும் நோய் குறித்து சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டியில் கூறி உள்ளார்.

அவர் பேசுகையில், எனக்கு கிளாஸ்ட்ரோஃபோபியா நோய் இருக்கிறது. இது என்னுடன் நெருக்கமாக இருக்கும் நபர்களுக்கு தெரியும். சின்ன இடங்களில் என்னால் இருக்க முடியாது. லிப்ட்டில் நீண்ட நேரம் இருக்க முடியாது. கழிப்பறை கூட அப்படி தான். நான் பொது கழிப்பறைக்கு செல்லவே மாட்டேன். எனக்கு அங்கே போகவே பயம். அதனால் தான் நான் போகவே மாட்டேன்.




என்னால் போகமால் கூட இருக்க முடியும். இரண்டு நாள் வரை கூட கழிப்பறைக்கு போகமால் இருப்பேன். எனக்கு எதுக்கு தான் கேரவன் கொடுப்பார்கள் என்று பலரும் கேட்டு இருக்கிறார்கள். நான் கேரவனில் இருக்கும் கழிப்பறையை பயன்படுத்தவே மாட்டேன். உடை மாற்றிவிட்டு உடனே அங்கிருந்து வந்துவிடுவேன். எனக்கு இது எல்லாமே ஒரு பிரச்னை.

பிக் பாஸில் கூட கிளாஸ்ட்ரோஃபோபியா சூழ்நிலை தான். இதில் தாக்குப்பிடிக்கும் சந்தர்ப்பம் என்பது ஒருவருக்கு ஒருவர் மாறுப்படும். என் வாழ்க்கையும் அதே போல் தான். நான் ஒரு இடத்தில் அடைக்கப்பட்டேன் என்றால் அங்கு இருக்கமாட்டேன். அவர்கள் வேண்டாம் என்று சொல்லி வந்துவிடுவேன்.

எனக்கு எல்லாமே என் மூத்த மகள் தான். என் வாழ்க்கையில் நீண்ட நாளாக அதாவதது 16 ஆண்டுகள் இருக்கிறார். யாரும் அப்படி என் கூட இருப்பது இல்லை. எல்லாமே அவளிடம் தான் சொல்வேன், கேட்பேன்.




வாழ்க்கையில் எல்லாமே சாய்ஸ் தான். அடுத்தவர்களுக்காக நாம் பார்க்க கூடாது. என் பையன் கிட்ட எல்லமே நான் கேட்டு இருக்கேன். 5 வயதாக இருக்கும் போதே அவ்வளவு அறிவுரை சொல்லுவான்.

நான் அவனிடம் ஒரு முறை கேட்டேன். அம்மா இல்லை என்றால் என்ன செய்வாய் என்று? அதற்கு அவர், கொஞ்சம் நேரம் அழுதுவிட்டு தாத்தாவிடம் சென்றுவிடுவேன் என்று சொன்னான். எனக்கு அதை கேட்டு சிரிப்பு தான் வந்தது” என்றார்.




What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!