health benefits lifestyles

எது சரியான  மெனோபாஸ்?

மெனோபாஸ் (Menopause) என்பது ஒரு பெண்ணுடைய மாதவிடாய் சுழற்சியின் முடிவை குறிக்கும் ஒரு இயற்கையான உயிரியல் (biological process) செயல்முறையாகும். பெரும்பாலும் பெண்களின் 40 அல்லது 50-களில் (பொதுவாக 45 முதல் 50  வயது வரை) மெனோபாஸ் ஏற்படுகிறது. மேற்கண்டவாறு குறிப்பிட்ட வயதை கடக்கும் பெண்களுக்கு ஒரு வருடத்திற்கும் மேல் மாதவிடாய் ஏற்படாத போது மட்டுமே மெனோபாஸ் எனப்படும் மாதவிடாய் நிற்கும் பருவத்தை எதிர்கொள்வார்கள்.மருத்துவ ஆலோசனை எப்போது தேவைப்படும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்:

1. மாதந்தோறும் மாதவிலக்கு வந்துகொண்டே இருக்கும், அடுத்த மாதத்திலிருந்து வரவே வராது.

2. மாதந்தோறும் ஐந்து நாட்கள் வரக்கூடிய மாதவிலக்கு, ஒவ்வொரு மாதமும் நான்கு நாள், மூன்று நாள், இரண்டு நாள் எனப் படிப்படியாகக் குறைந்து, பிறகு நின்றுவிடும்.

3.  30, 40, 50, 60  நாட்களுக்கு ஒருமுறை எனத் தள்ளி மாதவிலக்கு வருவது. ரத்தப்போக்கும் குறைவாக இருப்பது.

இந்த மூன்றும்தான் நார்மல் மெனோபாஸ் நிலைக்கான அறிகுறிகள்.

இதைத் தவிர, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாதவிலக்கும், அதிகப்படியான ரத்தப்போக்கும் இருப்பது, மாதந்தோறும் அதிக ரத்தப்போக்கு இருப்பது, மாதவிலக்கு வராமல் நின்றுவிட்டு, திடீரென ஒருநாள் குறைவாக வந்து, பிறகு அதிகரிப்பது போன்ற பிரச்னைகள் இருந்தால், உடனே பரிசோதித்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை நோயாளிகள், உடல் பருமன், ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு, அதிக ரத்தப்போக்கு இருந்தால், அவர்களுக்குப் புற்றுநோய் வர வாய்ப்புகள் அதிகம் என்பதால், உடனடியாகப் பரிசோதித்துக்கொள்வது அவசியம்.




வெள்ளைப்படுதல்

மெனோபாஸ் நிலையில் இருப்பவர்களுக்கு, வெள்ளைப்படுதல் பிரச்னை இருந்து அதில் துர்நாற்றமோ, தொற்றோ, தாங்க முடியாத அரிப்புப் பிரச்னையோ இருந்தால், உடனே மருத்துவரை அணுகுவது அவசியம். இந்த அறிகுறிகள் கர்ப்பப்பை புற்றுநோய்க்கானவையாகவும் இருக்கலாம். இவர்கள், ஆரம்ப கட்டத்திலேயே மருத்துவரை அணுகுவது அவசியம்.




நாற்பது வயதைக் கடந்த பெண்கள்

பாப் ஸ்மியர் (Pap Smear) சோதனையை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து செய்யலாம். 10 வருடங்களுக்குப் பிறகு வரப்போகும் புற்றுநோயைக்கூட, இந்த சோதனையின் மூலம் கண்டுபிடித்துவிட முடியும். வியா விலி  (Via Vili) என்ற சோதனை மூலமும் கருப்பைப் பிரச்னைகளைக் கண்டறிந்துகொள்ளலாம். இந்த சோதனை  அரசு மருத்துவமனைகளிலும் செய்யப்படுகிறது.மெனோபாஸ் சமயத்தில் கால்சியம் சத்து மிகவும் அவசியம். பால், கொய்யா, மீன், கேழ்வரகு போன்ற கால்சியம் நிறைந்த உணவுகளைச் சாப்பிடலாம். பால் சாப்பிடும்போது, அதனால் எடை அதிகரிக்கும் என்பதால், எளிதான உடற்பயிற்சிகள் அவசியம். தினமும், அரை மணி நேரமாவது நடப்பது உடலுக்கும் மனதுக்கும் நன்மையைத் தரும்.




What’s your Reaction?
+1
2
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!