Cinema Entertainment விமர்சனம்

இதயம் – பட விமர்சனம்

தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும் ஒரு சில படங்கள் மட்டுமே ஆண்டுகள் கடந்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும். அந்த வகையில் மிகவும் முக்கியமான படம் என்றால் அது இதயம் படம் தான். கடந்த 1991ஆம் ஆண்டு அறிமுக இயக்குனர் கதிர் இயக்கத்தில் வெளியான இதயம் படம் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது வரை இப்படத்திற்கு இணையான ஒரு காதல் படம் தமிழ் சினிமாவில் இல்லை.

கிட்டத்தட்ட 32 ஆண்டுகளை கடந்தும் இன்றுவரை தமிழ் ரசிகர்களின் மனதில் இதயம் படம் நீங்கா இடம் பிடித்துள்ளது. இப்படத்தில் நடிகர் முரளி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக நடிகை ஹீரா நடித்திருந்தார். அந்த சமயத்தில் தமிழ் சினிமாவில் ப்ளாக்பஸ்டர் படமான இதயம் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். இளையராஜா இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் தமிழ் சினிமாவில் புது ட்ரெண்டை உருவாக்கியது.இதயம் படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான கதிர்.

ஹீரா மீது காதலான காதல் அப்படியொரு காதல் முரளிக்கு! அதை நேருக்கு நேர் சொல்லி எதிராளியின் ரியாக்ஷனைத் தெரிந்து கொண்டிருந்தால் ரெண்டுல ஒண்ணு அவருக்கு முடிவு தெரிஞ்சிருக்கும்! அப்படிச் செய்யாமல் உணர்ச்சிகளை மனத்துக்குள் பூட்டி வைத்து அவதிப்பட்டு, இதய நோய் வந்து படுத்து… கடைசிக் கட்டத்தில் ஹீரா `ஐ லவ் யூ’ சொன்ன குட் நியூஸ் முரளிக்குத் தெரிவிக்கப்பட்டால் அவர் இதயம் அதிர்ச்சி தாங்காது என்பதால் படம் முடியும் வரையில் காதலர்களை ஒன்றுசேர்க்கவேயில்லை!




பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா… குளிர் புன்னகையில் எனை சுட்ட நிலா…’ ஒரு சாப்பாட்டு தட்டை வைத்துக் கொண்டு, ஒரு கல்லூரியின் மேடையில் நின்று கொண்டு, ஒட்டுமொத்த மாணவ கூட்டத்தையும் கட்டுப்படுத்திய பாடல் அல்ல இது. 90களில் காதலுக்காக ஏங்கித் தவித்த, காதலை சொல்ல முடியாமல் ஏங்கித் தவித்த ‛இதயம் முரளிகளின்’ உள்ளக்குமுறல் தான் அந்த பாடல்.

இன்றும் ‛இதயம் முரளி’ என்கிற அடைமொழியோடு சில காதல் ஃபார்முலா நாயகர்கள் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பரிசுத்தமானவர்கள் என்று அவர்களை பாராட்டுவோரும் உண்டு. பயந்தாங்கோலிகள் என்று சாடுபவர்களும் உண்டு. ஏன் இந்த நிலை இதயம் முரளிகளுக்கு?




தன்னம்பிக்கை இல்லாத மருத்துவ மாணவன் ஒருவன்; சக மாணவி ஒருத்தியை காதலிக்கிறான். அவளுக்காக ஏங்குகிறான். இதற்கிடையில் அந்த மாணவி, தன் தங்கையின் காதலிக்கு உதவிவதை, அவன் அவளின் காதல் என்று தவறாக புரிந்து கொள்கிறான். இதற்கிடையில் தங்கையின் காதலுக்கு தந்தை மறுக்க, தங்கை தற்கொலை செய்து செய்து கொள்கிறாள்.

அதுவரை தன் காதலை சொல்லாமல், சொல்ல தைரியமும் இல்லாமல் சுற்றித்திரிந்த மருத்துவ மாணவன், தன் காதலி யாரையும் காதலிக்கவில்லை என்கிற உண்மை தெரிந்து, அவளிடம் தயங்கி தயங்கி தன் காதலை கூறுகிறான். அதுவும் கல்லூரியின் கடைசி நாளில். தங்கை இறந்த சோகத்தில் இருக்கும் அந்த மாணவி, மாணவன் சொன்ன காதலை காது கொடுத்து கேட்கவில்லை. பின்னர் அதை அவள் தாமதமாக அறிந்து கொள்கிறாள். இந்நிலையில், தன் காதலை சொல்லாமல் பொத்தி வைத்து பொத்தி வைத்து, இதய நோய்க்கு ஆளாகிறான் மாணவன்.

சிகிச்சை முடிந்து ரயிலுக்காக அவன் ஊர் திரும்பும் போது, தன் தந்தை ஒப்புதலோடு, அவனிடம் காதலை சொல்ல வருகிறாள் அந்த மாணவி. அப்போது, அவளை தடுக்கும் மாணவனின் நண்பன், ‛அவனுக்கு சந்தோஷத்தையும் துக்கத்தையும் தாங்கும் சக்தி இப்போது இல்லை’ என்று கூறி தடுத்துவிடுகிறான். அத்தோடு, அங்கிருந்து ரயில் புறப்பட, அதை பார்த்தபடி நிற்கிறாள் காதலி.




இது தான் இதயம் படத்தின் கதை. 1991 செப்டம்பர் 6 ம் தேதி இதே நாளில் வெளியான இத்திரைப்படத்தை, காதலர் தினம் உள்ளிட்ட படங்களை இயக்கிய கதிர் இயக்கியிருந்தார். இளையராஜாவின் இசையும், அப்துல் ராஹ்மானின் ஒளிப்பதிவும், இதயத்துடிப்பை நமக்கு உணர வைத்திருக்கும். பிரபல சத்யஜோதி ப்லிம்ஸ் தயாரித்த இதயம் திரைப்படம், பெரிய அளவில் வசூலையும், வெற்றியையும் பெற்றது. அதுமட்டுமல்லாது, இதயம் முரளி என்கிற கதாபாத்திரத்தை வாழ்வியலோடு இணைத்தது.

முரளி, ஹீரா, சின்னி ஜெயந்த், ராஜகோபால் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம், துள்ளல், காதல், சோகம், வலி என பல உணர்வுகளோடு பயணித்து, ரசிகர்கள் நெஞ்சில் இடம் பிடித்த படம். 32  ஆண்டுகளுக்கு முன்   இதயம் வெளியான போது, கல்லூரி மாணவர்கள் தியேட்டர்களில் தவம் இருந்ததை மறக்க முடியாது.




What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!