health benefits

பீரியட்ஸை வலியில்லாமல் கடக்க…

மாதவிடாய் காலம் அசெளகரியமானது. ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொருவிதமான அசெளகரியங்கள் இருக்கலாம். சமயங்களில் நாம் அறியாமல் செய்யும் சில விஷயங்கள் கூட இதை தூண்டி விடலாம். அப்படி வலியை தூண்டும்  விஷயங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

பெண்கள் அனைவருக்குமே உடல் அசெளகரியமும் மன அழுத்தமும் இருக்கும் காலம் என்றால் அது மாதவிடாய் காலம் தான். இந்த காலம் உடலிலும் மன உணர்ச்சிகளிலும் ஒரு ரோலர்கோஸ்டர் போன்ற உணர்வு இருக்கும். எல்லோராலும் இதை தவிர்த்து விட முடியாது. ஆனால் இந்த அசெளகரியத்தை மோசமாக்கும் விஷயங்கள் என்ன என்பதை கண்டறிந்து அதை தவிர்த்தால் வேதனையான மாதவிடாய் வலி உணர்வை ஓரளவு குறைக்கலாம். அப்படி நீங்கள் தவிர்க்க கூடிய விஷயங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.




​மாதவிடாய் காலம் ஏன் வலி மிகுந்தது?

மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு இடுப்பு வலி, மார்பு வலி, மன அழுத்தம், கை, கால் வலி, பெண் உறுப்பு வலி, தசைபிடிப்பு வலி, வயிறு வலி, அடி வயிற்று வலி போன்ற உடல் அசெளகரியங்கள் வரலாம். சிலருக்கு தலைவலி, வயிற்றுப்போக்கு போன்றவையும் இருக்கலாம். இவையெல்லாம் மிதமானதாகவோ தீவிரமாகவோ ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறுபடும். ஆனால் வலி அதிகமாக தாங்க முடியாமல் இருந்தால் அது டிஸ்மெனோரியா என்றழைக்கப்படுகிறது.

ஃபைபராய்டு கருப்பை, இடுப்பு தொற்று மற்றும் எஸ்டிஐ போன்றவை இதற்கு காரணங்களாக சொல்லபடுகிறது. மாதவிடாய் நாட்களில் வரக்கூடிய இந்த அசெளகரியம் 5 நாட்களுக்கு மேல் நீடித்தால் மருத்துவரை அணுகி காரணத்தை அறிவது அவசியம். அதே நேரம் வலியை அதிகரிக்க செய்யக்கூடிய நீங்கள் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.




​அதிகமாக டீ அல்லது காஃபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்​:

  • மாதவிடாய் நேரத்தில் சூடாக டீ அல்லது காஃபி குடித்தால் புத்துணர்ச்சியாக இருக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அடிக்கடி டீ அல்லது காஃபி குடிப்பது நல்லது அல்ல. ஏனெனில் இவை மன அழுத்தம், இரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பு அதிகரிப்பதுடன் நாள் முழுவதும் சோர்வாக வைத்திருக்கும்.உங்களுக்கு டீ, காஃபி குடிக்கும் பழக்கம் இருந்தால் அதை தவிர்த்து மூலிகை தேநீர், ஆரோக்கியமாக வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட பழச்சாறுகள் மற்றும் மில்க்‌ஷேக்குகள் வழக்கமான முறையில் சேர்த்துகொள்ளலாம். சில நேரங்களில் காஃபின் அடிவயிற்று பிடிப்பை ஏற்படுத்தும். இடுஹ் ஒரு டையூரிடிக் என்பதால் இது நீரிழப்பை உண்டு செய்கிறது.

  • மாதவிடாய் காலங்களில் வலி ஏற்பிகள் அதிகரிக்க செய்யும். தோல் அதிக உணர்திறன் கொண்டது. இந்நிலையில் ஓய்வில் இருக்கிறோமே என்று வேக்சிங் செய்வது வலியை அதிகரிக்க செய்யும்.

வேக்சிங் மாற்றாக ஷேவிங் செய்வதற்கு மாறினால் தோலில் வெட்டுக்காயம் உண்டாகும் அபாயம் அதிகம். இந்த பிரச்சனையை தவிர்க்க மாதவிடாய் நாட்களில் வேக்சிங் செய்வதை தவிர்ப்பதே நல்லது. மாதவிடாய் முடிந்த உடன் இல்லாமல் சில நாட்கள் தள்ளி செய்யலாம்.

​நாப்கின் பயன்பாட்டில் மோசமான பிரச்சனை:

 

  • நாப்கின் பயன்பாடு குறித்து பெண்கள் விழிப்புணர்வோடுதான் இருக்கிறார்கள் என்றாலும் சமயங்களில் நாப்கின் மாற்ற முடியாத சூழலில் நாள் முழுவதும் ஒரே நாப்கின் பயன்படுத்துவதன் மூலம் இது யோனி பகுதியில் அரிப்பு உண்டு செய்யும். அந்த இடத்தில் பாக்டீரியாக்களை அதிகரிக்கும்.

  • ஏற்கனவே பெண் உறுப்பு பகுதியில் அரிப்பு கொண்டிருக்கும் பெண்கள் நாப்கின் பயன்பாட்டால் இன்னும் அரிப்பை எதிர்கொள்ளலாம்.அதனால் உதிரபோக்கு அதிகமாக இருந்தாலும் குறைவாக இருந்தாலும் குறிப்பிட்ட நேரத்தில் நாப்கினை மாற்றியே ஆகவேண்டும். ஒவ்வொரு 4 மணி நேரத்துக்கும் குறைந்தது 6 மணி நேரத்துக்கும் ஒரு நாப்கின் மாற்றுவது அரிப்பை குறைக்கும். கறை மற்றும் துர்நாற்றத்திலிருந்து அசெளகரியத்தை தடுக்க செய்யும்.

  • தினசரி ஒரு டம்ளர் பால் குடிப்பது கால்சியம் சத்தை அளிக்கும். ஆனால் மாதவிடாய் நாட்களில் பால் பொருள்களை எடுக்கும் போது தண்ணீரை தக்கவைத்து, அமிலத்தன்மை பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிக்கும்.மாதவிடாய் காலங்களில் பால் மற்றும் பால் பொருள்களை தவிர்க்க வேண்டாம். ஆனால் அளவாக எடுத்துகொள்ளுங்கள். குறைந்த கொழுப்புள்ள பால் சேர்க்கலாம். இது பிடிப்புகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்காது. மேலும் மலச்சிக்கல் பிரச்சனையும் உண்டு செய்யாது.

​​

  • மாதவிடாய் நாட்களில் இயல்பாகவே இரத்தப்போக்கு அதிகரிக்கும். அதிகமான இரத்தப்போக்கு உங்களை பலவீனமாக உணர வைக்கும். இந்த நாளில் விரதம் இருப்பதை தவிர்க்க வேண்டும். உணவில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கால்சியம் உட்பட உடலுக்கு முழு ஊட்டச்சத்தை வழங்கும் வகையில் நிறைவாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில் உணவை தவிர்ப்பது உடலில் வேறு பல சிக்கல்களை உண்டு செய்யும். மேலும் உடலை பலவீனமாக்கும். உடல் இழந்த சத்துக்களை மீண்டும் பெற போதுமான உணவு அவசியமே.

  • அதிகப்படியான சர்க்கரை, உப்பு மற்றும் வறுத்த உணவுகள் வீக்கம், மனநிலை மாற்றங்கள் மற்றும் நீரிழப்பு போன்ற உடல் உபாதைகளை உண்டு செய்யலாம் என்பதால் உணவில் அதிக கவனம் செலுத்துங்கள்.

மேற்கண்டவை எல்லாமே வலியை அதிகரிக்க தூண்டக்கூடியவை என்பதால் கவனத்தோடு மாதவிடாய் சுழற்சியை கடத்துங்கள். ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

What’s your Reaction?
+1
1
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!