health benefits News

திருமணத்துக்கு முன்பே தன் கருமுட்டையை உறைய வைத்த பிரியங்கா சோப்ரா… ஏன்னு தெரியுமா?​

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா இளம்வயதிலேயே (30 வயதுக்கு முன்பாக) தன்னுடைய கருமுட்டையை உறைநிலையில் (frozen) வைத்திருந்தாராம். அந்த யோசனையை மகப்பேறு மருத்துவரான அவருடைய தாய் மது சோப்ரா தான் அவருக்கு கொடுத்தாராம். இதற்கு முக்கிய காரணம் அந்த சமயத்தில் நிக்கியுடன் இணைந்து குழந்தைக்காக உறவில் ஈடுபட வேண்டாமென்று நினைத்து இதை செய்ததாகவும் அவரே சமீபத்தில் தெரிவித்திருக்கிறார். ஏன் இந்த முடிவை எடுத்தார், அப்படி கருமுட்டையை உறைய வைப்பது பாதுகாப்பானது தானா போன்றவை குறித்து நாம் இங்கே தெரிந்து கொள்ளலாம் வாங்க..




உலகப் புகழ்பெற்ற பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் நிக்கி ஜோன்ஸ் தம்பதி கடந்த 2022 ஆம் ஆண்டு வாடகைத்தாய் முறையில் அழகான குழந்தையை பெற்றெடுத்தார்கள். சமீபத்தில் அந்த குழந்தையின் முகத்தை சமூக ஊடகங்களின் வாயிலாக காட்டினார்கள். ஆனால் இந்த குழந்தையை பெற்றுக் கொள்ள முடிவு செய்வதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே பிரியங்கா தன்னுடைய கருமுட்டையை உறைநிலையில் மருத்துவ ஆலோசனையின் பேரில் வைத்திருந்திருக்கிறார். அதுபற்றி அவர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

​​மருத்துவ நிலைகள் காரணமா?​

பிரியங்கா தன்னுடைய கருமுட்டை தாயின் ஆலோசனையின் பேரில் உறைநிலையில் வைத்திருந்தார்.அதேபோல திருமணத்துக்கு பிறகு இவர்கள் வாடகைத்தாய் முறையின் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதற்கும் நிறைய விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் பிரியங்காவின் சில மருத்துவ நிலைகள் காரணமாகவே வாடகைத் தாய் முறையை தேர்வு செய்ததாகத் தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமின்றி கருமுட்டையை உறைநிலையில் வைத்திருந்தது அவர் நிக்கியை திருமணம் செயவ்தற்கு முன்பாக, நிக்கியை சந்திப்பதற்கு முன்பாக நடந்திருக்கிறது.இவை எல்லாவற்றுக்கும் அவருடைய மருத்துவ நிலைகளும் சினிமா துறையில் தன்னை நிலைநிறத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் அந்த நேரத்தில் தனக்கிருந்த ஆன்சைட்டியாலும் அப்படியொரு முடிவு எடுத்ததாகவும் குறிப்பிடுகிறார்.


​கருத்தரிப்பது கடினம்​

ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் இயற்கையாகவும் இயல்பாகவும் கருத்தரிப்பது மிக மிகக் கடினமான விஷயம். இது தன்னுடைய இளம் வயது நண்பர்கள் பலருக்கும் நடந்திருப்பதாகக் குறிப்பிடுகிறார்.35 வயதிற்குப் பிறகு கர்ப்பம் தரிப்பது கடினமான விஷயம். குறிப்பாக நிறைய வேலை செய்யும் பெண்களுக்கு அந்த வலு குறைந்து கொண்டே போகும். அந்த சமயங்களில் அதிக பணம் செலவு செய்து சிகிச்சைகள் மேற்கொள்வதை விட இளம்வயதிலேயே தங்களுடைய கருமுட்டையை உறைய வைத்துக் கொள்ளும் முறை நன்மையளிப்பதாகவே தோன்றுகிறது என்கிறார் அவர்.இப்படி செய்யும்போது முட்டைகள் உறைந்திருக்கும் அதே வயதிலேயே இருக்கும், அதேசமயம் நம்மால் வழக்கமான வேலைகளையும் செய்ய முடியும் என்கிறார்.

​குழந்தைகள் மிகப் பிடிக்கும்

நிக்கிக்கு 25 வயதிலேயே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமா என்ற கேள்வி இருந்த நிலையில் நான் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை. ஆனால் எனக்கு குழந்தைகள் மிகவும் பிடிக்கும். பெரியவர்களைக் காட்டிலும் குழந்தைகளுடன் விளையாடவும் அதிக நேரம் செலவிடவும் பிடிக்கும்.யுனிசெஃபில் குழந்தைகளுடன் பணியாற்றி இருக்கிறேன். குழந்தைகள் நல மருத்துவமனைகளில் தன்னார்வலராகப் பணபுரிந்திருக்கிறேன். நான் குழந்தைகளை மிகவும் நேசிப்பவள் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.




​கருமுட்டையை உறைய வைத்தல் ​

கருமுட்டையை நீண்ட நாட்களுக்கு உறைய வைத்து, தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளும் இந்த முறையை மருத்துவத் துறையில் oocyte Freezing என்று அழைக்கப்படுகிறது. இந்த முறையில் பெண்ணின் கருமுட்டையை கருப்பையில் இருந்து சேகரித்து பின் உறைநிலையில் பாதுகாக்கப்படுகிறது.

​​எக் ஃப்ரீசிங் யாரெல்லாம் செய்யலாம்? என்ன பலன்?​

எதிர்காலத்தில் கர்ப்பம் தரிக்க இயலாத நிலை ஏற்படும்போது இந்த ஃப்ரீசிங் செய்த கருமுட்டை மூலம் கருத்தரிக்க வைக்க முடியும். அதனால் அதுபோன்ற மருத்துவ நிலைகள் உள்ளவர்கள் எக் ஃப்ரீசிங் செய்யலாம்.

புற்றுநோய் அல்லது அதற்கான சிகிச்சையில் இருக்கும் பெண்கள் அந்த சிகிச்சை தொடங்கும்முன் தங்களுடைய கருமுட்டையை ஃப்ரீசிங் செய்து வைக்கலாம். ஏனெனில் புற்றுநோய்க்கான கீமோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகளின் போது கருப்பையில் பாதிப்புகள் ஏற்படலாம்.

ஐவிஎஃப் முறையில் குழந்தை பெற்றுக் கொள்பவர்கள் தங்களுடைய கருமுட்டை உறைய வைத்து சரியான நேரங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆண்களுக்கு உயரணுக்கள் குறைவாக இருக்கும்போது உறைநிலையில் இருக்கும் கருமுட்டையில் பரிசோதனைக்கு பிறகு ஆரோக்கியமான உயிரணுக்களை செலுத்தி அதன்பின் கருத்தரிக்கச் செய்யலாம்.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!