health benefits News

சர்க்கரை நோயாளிகளுக்கு காயம் ஆறவே ஆறாதா?

சர்க்கரை நோயாளிகளுக்கு காயம் ஏற்பட்டாலோ அல்லது புண் ஏற்பட்டாலோ ஆறவே ஆறாது என்று கூறப்படுவது ஓரளவு உண்மைதான் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு சிலருக்கு வருட கணக்கில் கட்டை விரலில் காயம் ஏற்பட்டால் ஆறாமல் இருக்கும், பொதுவாக சர்க்கரை நோயாளிகளுக்கு காயம் அல்லது புண் ஏற்பட்டால் ஆறாமல் இருப்பதற்கு சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது ஒரு காரணம்.




குறிப்பாக கால் கட்டை விரலில் காயம் ஏற்பட்டால் அதை கவனிக்காமல் விட்டால் அறுவை சிகிச்சை மூலம் கால் விரலை துண்டிக்க வேண்டிய நிலையும் ஏற்படலாம். எனவே சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை அளவை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும் அவ்வாறு இருந்தால் கால் கட்டைவிரல் உட்பட உடலில் எந்த பகுதியில் காயம் ஏற்பட்டாலும் உடனடியாக ஆறிவிடும்.

ரத்தத்தின் சர்க்கரை அளவை இயற்கையாக சரி செய்ய முடியவில்லை என்றால் இன்சுலின் போட்டு குறைத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.




சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க இப்படி செய்து பாருங்கள்

  • நீரிழிவு நோயாளி ஒருவர் வாழைப்பூவை கசாயம் செய்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். இதே வாழைப்பூவுடன், சிறிது காய்ந்த மிளகாய் எல்லாம் சேர்த்து அரைத்து துவையல் மாதிரி செய்து தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது சர்க்கரை நோய் கட்டுப்படுத்தலாம். 

  • பாகற்காயை நன்கு காயவைத்துப் பொடி செய்து காலை, இரவு என்று இரண்டு வேளை தொடர்ந்து சாப்பிடக் கூடியவர்களுக்கு கண்டிப்பாகச் சர்க்கரை நோய் முழுமையாகக் குறையும்.

  • தென்னை மரத்துப் பூவை நன்றாகக் காயவைத்து, அதைப் பொடி செய்து காலையிலும், இரவிலும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தோம் என்றால் சர்க்கரை நோய் கட்டுப்படுவதுடன் சர்க்கரை நோயால் தளர்ந்து போன நரம்புகள் அனைத்தும் சரியாகிவிடும்.




  • சமையலில் சீரகத்திற்குப் பதிலாக அல்லது சீரகத்துடன் கருஞ்சீரகத்தையும் சேர்த்து சமையலில் ஈடுபடுத்தும் பொழுது சர்க்கரைக்கு அற்புதமான ஒரு மருந்தாக இருக்கும்.

  • ஆவாரம்பூ இந்நோய்க்கு அவ்வளவு அற்புதமானது. ஆவாரம்பூ, சுக்கு, ஏலக்காய் இவற்றை தொடர்ந்து கொதிக்கவைத்து கசாயமாகச் சாப்பிடும்பொழுது சர்க்கரை நோய் முழுமையாக கட்டுப்படும்.

உடலில் வியர்வை உண்டாக்க வேண்டும். அதுதான் பிரதானமானது. நாம் சிறிது நடைப்பயிற்சி கூட செய்யாமல் இருப்பதனால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடியாது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!