Cinema Entertainment விமர்சனம்

அருள்நிதி நடிப்பில் வெளியாகியுள்ள ‘திருவின் குரல்’ எப்படி இருக்கிறது – முழு விமர்சனம் இதோ.

சமீப காலமாகவே நடிகர் அருள்நிதி ஹாரர் படங்களில் நடித்து வந்த நிலையில் மீண்டும் ஆக்ஷன் படங்களுக்கு திரும்பியுள்ளார். அந்த வகையில் இயக்குனர் ஹரிஷ் பிரபு இயக்கத்தில் வகையில்  அருள்நிதி நடித்துள்ள படம் தான் “திருவின் குரல். இப்படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக ஆத்மீகா நடித்திருக்கிறார். அதோடு ராபர்ட், மோனிகா சிவா ஆகியோரும் நடித்திருக்கின்றனர். சாம் சிஎஸ் இசையமைத்து லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில் இன்று படம் வெளியாகியுள்ளது.




கதைக்களம் :

காது சரியாக கேட்காத மற்றும் வாய் பேச முடியாத சிவில் இன்ஜினியர் கதாபாத்திரத்தில் அருள் நிதி நடித்திருக்கிறார். அழகான குடும்பம், பாசமான அப்பா என அழகான  வருகிறார் அருள் நிதி. அதோடு இவருக்கு தன்னுடைய அத்தை மகள் ஆத்மிகாவுடன் திருமணம் நடக்கிறது. அப்பைடையோரு நிலையில் திடீரென அருள் நிதி அப்பா பாரதிராஜா விபத்தில் சிக்கி தலையில் காயம் ஏற்படுத்தினால் என்று அரசு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்.

இந்நிலையில் அரசு மருத்துவமனையில் அருள் நிதிக்கும் அங்குள்ள ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையால் பாரதிராஜாவுக்கு போலியான மருந்து போடப்படுகிறது. அதே போல அந்த மருத்துவமனையில் நடக்கும் அதே கொலைகளை அவரது குடும்பத்தில் இருக்கும் ஒரு குழந்தை ஒருவர் பார்த்து விடுகிறார். இப்படியொரு நிலையில் அருள்நிதியின் அப்பாவை கொல்ல வில்லன்கள் திட்டம் தீட்டுகின்றனர். இதனையடுத்து பாரதிராஜா பிழைத்தாரா? அருள்நிதி குடும்பத்தில் இருபவர்களை கொலை செய்ய நினைக்கும் வில்லன்கள் யார் என்பதே மீது கதை.




வாய்பேச முடியாத மற்றும் காது சரியாக கேட்காத கதாபாத்திரத்தில் அருள் நிதி மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். அதே போல அருள் நிதியின் அப்பா கதாபாத்திரத்தில் வரும் அருள்  நடிப்பில் அசத்தியுள்ளார். படத்தில் அதிகபட்சம் பாரதிராஜாவை சுற்றித்தான் படம் நகர்கிறது. ஆனால் படத்தின் கதாநாயகிக்கு முக்கியத்துவம் இல்லை. அரசு மருத்துவமனையில் நடக்கும் சில குற்றங்களை மையமாக பெய்து எடுக்கப்படும் படமாக இருந்தாலும் இப்படத்தின் கதை மாறுபட்டு இருக்கிறது.




கதை ஒரே இடத்தை சுற்றி நடப்பதினால் ஆங்கங்கே தொய்வு இருக்கிறது. அதே போல அதிகமான செண்டிமெண்ட் காட்சிகள் ரசிகர்களுக்கு சலிப்பை தருகிறது. ஆனால் வில்லன் கதாபாத்திரத்தில் சலிப்பை  அஷ்ரஃப், சுரேஷ், சாந்தன் போன்றவர்கள் மிரட்டலான நடிப்பை கொடுத்திருப்பது படத்திற்கு பிளஸ். என்னதான் படத்திற்கான சுதந்திரம் இருந்தாலும் லாஜிக் குறைபாடுகள் வெளிப்படையாகவே தெரிகிறது. மற்றபடி பின்னணி இசை மற்றும் பாடல்களில் இசையமைப்பாளர் சாம் கலக்கி பின்னி இருக்கிறார்.

சரியான திரைக்கதை அமைத்திருந்தால் திருவின் குரல் இன்னமும் சிறப்பாக வந்திருக்கும். மொத்தத்தில் அருள் நிதி நடித்துள்ள “திருவின் குரல்” சரியாக யாருக்கும் கேட்கவில்லை.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!