gowri panchangam Sprituality

அருள்தரும் சக்தி பீடங்கள் – 21 நேபாளம் குஹ்யேச்வரி

அம்மனின் சக்தி பீட வரிசையில், நேபாளம் குஹ்யேச்வரி கோயிலும் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. தாட்சாயணியின் முழங்கால் பகுதி இத்தலத்தில் விழுந்துள்ளதாக ஐதீகம்.




குஹ்யேஸ்வரி கோவிலில், சக்தி மகாஷிரா மற்றும் பைரவர் கபாலி. அம்மன் கோயிலின் மையத்தில் வெள்ளி மற்றும் தங்கத்தால் மூடப்பட்ட ஒரு கலசத்தில் (தண்ணீர் ஜாடி) வணங்கப்படுகிறார். கலசா ஒரு கல் அடித்தளத்தில் உள்ளது, இது நிலத்தடி இயற்கை நீர் ஊற்றை உள்ளடக்கியது, அதில் இருந்து அடித்தளத்தின் விளிம்புகளில் இருந்து தண்ணீர் வெளியேறுகிறது. கோயில் ஒரு முற்றத்தின் மையத்தில் நிற்கிறது மற்றும் இறுதி கூரையை ஆதரிக்கும் நான்கு கில்டட் பாம்புகளைக் கொண்டுள்ளது. இந்த ஆலயம் தாந்த்ரீகர்களால் போற்றப்படுகிறது, மேலும் இந்த கோவிலில் தாந்த்ரீக சடங்குகள் செய்யப்படுகின்றன. காளி தந்திரம், சண்டி தந்திரம் மற்றும் சிவ தந்திரம் ரஹஸ்யா ஆகியவற்றிலும் இந்த கோயில் குறிப்பிடப்பட்டுள்ளது மற்றும் தந்திர சக்தியைப் பெறுவதற்கான மிக முக்கியமான இடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. குஹ்யேஸ்வரி தேவியின் விஸ்வசொரூபம் அவளை எண்ணற்ற கைகளுடன் பல வண்ணத் தலை தேவியாகக் காட்டுகிறது.

இமயமலையின் அடிவாரத்தில் நேபாளம் (நேவா + பாலம்), பூபாளம் ஆகிய தேசங்கள் உள்ளன. ‘நேவா’ என்றால் முனிவரால் ஆக்கப்பட்ட அமைப்பு முறை என்று பொருள் கொள்வதுண்டு. அதனால் இத்தலத்துக்கு தெய்விகத்தன்மை உள்ளதாகக் கருதப்படுகிறது. கயிலை மலையில் அகத்திய முனிவரை சந்திக்க, திருமூலர் என்ற சிவயோகியார், நேபாளத்தில் வழிபட்டதாக பெரியபுராணத்தில் வருகிறது. பாரதப் போரில் பீஷ்மர், துரோணர் முதலிய ஆச்சாரிய பெருமக்களை வதம் செய்த பாண்டவர்கள், பாப விமோசனத்துக்காக சிவதரிசனம் செய்ய வேண்டும் என்று கிருஷ்ண பரமாத்மாவால் பணிக்கப்பட்டனர். பாண்டவர்களும் கேதாரம் சென்று சிவபெருமானை தரிசித்த பின்னர், நேபாளம் வந்து பசுபதிநாதரை தரிசித்து, பாப விமோசனம் பெற்றனர். பசுபதிநாதரின் கோயிலில் இருந்து அரை மைல் தொலைவில், பாக்மதி நதிக்கரையில் உள்ளது குஹ்யேச்வரி கோயில்.




கோயில் அமைப்பு

தாட்சாயணி தன் உருவத்தை சிதைத்துக் கொண்டபோது, அவரது முழங்கால் பகுதி இத்தலத்தில் விழுந்துள்ளதால், ஜோதிர்லிங்கத்துக்கு இணையாகக் கருதப்படும் பசுபதிநாதர் கோயிலுக்கு இணையாக இத்தலம் முக்கியத்துவம் பெறுகிறது. இக்கோயிலின் முகப்புப் பகுதியில் ஒருபுறம் கணபதியும், மறுபுறம் முருகப்பெருமானும் எழுந்தருளியுள்ளனர்.




கருவறையில் தங்கத்தால் ஆன பீடம் உள்ளது. தேவி இத்தலத்தில் எங்கும் தங்க மயமாக அருள்பாலிக்கிறார். பீடத்தின் மற்றொரு பகுதியில் சிரமாலை அமைந்துள்ளது. இத்தலத்தில் தேவி தவம் செய்ததை, இந்த சிரமாலை உணர்த்துகிறது. மகிஷாசுரன் என்ற அசுரன், தேவியின் தவத்தைக் கலைக்க அசுரர்களை ஏவினான். அந்த அசுரர்கள் விழுங்கப்பட்டார்கள். பின்பு ஏவப்பட்ட சும்ப, நிசும்பர்களையும் தேவி வதம் செய்தார். தேவியின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் அவருக்கு காட்சியளித்தார். இச்சம்பவங்களை நினைவுகூரும் வகையில், பீடத்தின் அருகில் சிலை வடிவங்கள் காணப்படுகின்றன. மனக்குழப்பத்துடன் வந்து இத்தலத்தில் வேண்டுபவர்களுக்கு மனோபலம் உறுதியான முறையில் அமைகிறது என்பது இச்சம்பவங்களின் உட்கருத்தாகும்.




திருவிழாக்கள்

தினசரி தரிசன நேரம், மகா சிவராத்திரி, 12 மாத சிவராத்திரி, அனைத்து திங்கள் கிழமைகளிலும் இங்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அதனால் எப்போதும் இங்கு பக்தர்கள் குவிந்த வண்ணம் இருப்பர். நவராத்திரி 9 தினங்களிலும் தேவிக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!