gowri panchangam Sprituality

அருள்தரும் சக்தி பீடங்கள் -17 கொடுங்கல்லூர் பகவதி அம்மன்

அம்மனின் சக்தி பீட வரிசையில் கேரளாவின் திருச்சூர் மாவட்டம் கொடுங்கல்லூர் பகுதியில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோயில் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது. இத்தலம் ‘மகாசக்தி பீடம்’ என்று அழைக்கப்படுகிறது. கொடுங்கல்லூரம்மை, கண்ணகி, பத்ரகாளி ஆகிய பெயர்களில் அழைக்கப்படும் தேவி, சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றியுள்ளார்.

தேவியின் விக்கிரகம் பலா மரத்தால் (வரிக்க பிலாவு) செய்யப்பட்டது என்பதால் வழக்கமான அபிஷேகங்கள் இங்கு செய்யப்படுவதில்லை. ‘சாந்தாட்டம்’ என்ற சந்தன அபிஷேகம் மட்டும் செய்யப்படும்.




வரலாறு

இன்று நாம் காண இருப்பது கேரளாவில் திருச்சூர் அருகே உள்ள கொடுங்கலூர் பகவதி அம்மனின் வரலாறு.

அந்த ஆலயத்தில் இருந்து சரியாக எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கொடுங்கலூர் பகவதி அம்மன் ஆலயம். அதன் வரலாறைச் பற்றி விரிவாக விளக்கமாக பார்ப்போமா!!??.

தமிழ்நாட்டில் பிறந்த கோவலன் கண்ணகி மாதவியுடன் கோவலன் தொடர்பு வைத்ததன் காரணமாக செல்வத்தையெல்லாம் இழந்து கண்ணகியின் காற்சிலம்பை விற்க மதுரைக்கு செல்ல அச்சமயத்தில் மகாராணியின் காறசிலம்பு திருடுபோன தகவலறிந்த பொற்கொல்லன் கோவலனை திருடன் என்று கருதி மன்னர் முன் நிறுத்த மன்னன்  சற்றும் ஆராயாமல் அவன் மேல் கொலைப்பழி சுமத்தி கொலைக்களத்திற்கு அனுப்பி கோவலனின் கதையை முடித்தார் .

விபரம் அறிந்த கண்ணகி வெகுண்டு தன் காற்சிலம்புடன் மன்னனிடம் சென்று நீதிகோரி தன் கணவன் திருடன் அல்ல என்று நிரூபித்தார் .நிரூபித்த பிறகு மன்னன் மாண்ட பிறகும் அவருடைய கோபம் தணியவில்லை. மதுரை மாநகரை தீக்கிரையாக்கிய பிறகும் தனியாத கோபத்துடன் சேரநாடு நோக்கிச் சென்றார் .கண்ணகியின் கற்பின் தன்மையை உணர்ந்த  சேர மன்னன் அவளுக்கு அங்கு ஒரு கோயில் கட்டினார். அக்கோயில் அக்காலத்தில் கண்ணகி கோயிலாக இருந்து பின் மருவி பகவதி கோயில் என்று ஆனது.அதுவே தற்போதுள்ள கொடுங்கலூர் பகவதி ஆலயம். திருச்சூருக்கு அருகில் உள்ளது .

புராண வரலாறு

கேரள தேசத்தை உருவாக்கியவர் பரசுராமர் என்று அனைவருக்கும் தெரியும் .ஆதி காலத்தில் கேரள தேசம் பரசுராம க்ஷேத்திரம் என்றே அழைக்கப்படும்.

பரசுராமர் தியானத்தில் இருக்கும் போதெல்லாம் அவரை தியானம் செய்ய விடாது தாருகன் என்னும் அசுரன் துன்புறுத்திக் கொண்டிருப்பான். அவனுடைய துன்புறுத்தலை தாங்கமுடியாத பரசுராமர் சிவபெருமானைக் குறித்து தவம் செய்து அவரிடம் தன்னை  தாருகனிடம் இருந்து காத்து அருளும்படி வேண்டினார். பரசுராமரின் கோரிக்கையை ஏற்று சிவபெருமான் பராசக்தியான காளியை வழிபடுமாறு கூறினார் . சிவபெருமான் கூறியபடி காளியை  பூஜை செய்து அவருக்காக உருவாக்கிய கோயிலே கொடுங்கல்லூர்  பகவதி என்று அழைக்கப்படுகிறது என்பது புராண வரலாறு.




இந்த அம்மன் ஆதிகாலத்தில் உக்கிரமாக இருந்ததாகவும் மிகவும் அதிகமாக உயிர்பலி கேட்டதாகவும் அதன் காரணமாக பலவகையான மிருகங்களைப் பலியிட்டு சாந்தி செய்ததாகவும் மிருகங்களின் ரத்தத்தை எடுத்து குருதி பூஜை  செய்ததாகவும் பழங்கால கதைகள் கூறுகின்றன. அதுமட்டுமன்றி இந்த அம்மனுக்கு கள் சாராயம் முதலியவற்றை  நேர்த்திக்கடனாக  செலுத்தியதாகவும் கூறுவர்.

ஒரு முறை ஆதிசங்கரர்  இந்த கோவிலுக்கு விஜயம் செய்து அம்மனின் உக்கிரத்தைத் தணிப்பதற்காக எந்திரம் பிரதிஷ்டை செய்து அம்மனின் உக்ரகத்தை தணித்ததாகவும் குருதி பூஜைக்கு பதிலாக குங்குமத்தை நீரில் கரைத்து பூஜை செய்ததாகவும் கள் சாராயம் முதலியவற்றுக்கு பதிலாக இளநீரை அபிஷேகம் செய்ததாகவும் அதில் இருந்து அக்கோவிலில் விலங்கு பலியிடுவது கள் சாராயம் படையலிடுவது  கிடையாது என்றும் குங்குமம பூஜையும் இளநீர் அபிஷேகமும் மட்டுமே இன்று வரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.




இக்கோயிலில் மஞ்சள் பொடி வைத்து வழிபட்டால் வைசூரி நோய் தாக்காது என்றும் அவ்வாறு தாக்கியிருந்தால் நோயின் தீவிரம் படிப்படியாக குறையும் என்றும் பக்தர்கள் இங்குள்ள வைசூரி சமாதியில் மஞ்சள்பொடி வைத்து வழிபடுகின்றனர் .இக்கோவிலில் குழந்தைகளுக்காக துலாபாரம் செய்வதும் மிகவும் சிறப்பு.வேண்டுதல் நிறைவேறியதும் இங்கு வந்து அன்னதானம் செய்வது இன்றும் நடைமுறையில் உள்ளது.இதுவே கொடுங்கல்லூர்  பகவதியம்மன் வரலாறு ஆகும்.

திருவிழா

கும்பமாதத்து பரணி விண்மீன் தொடங்கி, மீனமாதத்துப் பரணி வரை நிகழும் பரணி விழா, கேரளத்தின் புகழ்பெற்ற விழாக்களில் ஒன்றாகும். “கோழிக்கல்லுமூடல்” எனும் உயிர்ப்பலியுடன் பரணி விழா ஆரம்பிக்கும். கொடுங்கல்லூர் மன்னரின் மேற்பார்வையில், இங்கு நிகழும் “காவு தீண்டல்” பரணி விழாவின் இன்னொரு முக்கியமான நிகழ்வு ஆகும். இதன்போது, கெட்ட வார்த்தைகளால் திட்டியபடியே, ஆலயத்தைச் சுற்றிப் பக்தர்கள் ஓடி வலம்வருவது காவுதீண்டலின் முக்கிய அம்சம். “சந்தனப்பொடி சார்த்தல்” எனும் இன்னொரு நிகழ்வும் இதன்போது இடம்பெறுவதுண்டு

நாளை வேறு ஒரு சக்தி பீடங்களுடன் சந்திப்போம்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!