Beauty Tips அழகு குறிப்பு

2 நிமிடத்தில் அக்குள் முடியை நீக்க வேண்டுமா? அப்ப இத செய்யுங்க…

உடலை அழகாக பராமரிப்பதற்கு, உடலின் ஒவ்வொரு உறுப்புக்களுக்கும் தவறாமல் சரியான பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டும். முக்கியமாக அக்குள் பகுதியை எடுத்துக் கொண்டால், மிகவும் ஸ்பெஷலான பராமரிப்பைக் கொடுக்க வேண்டும். அதுவும் கோடைக்காலத்தில், அக்குள் பகுதியை முடியின்றி, சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். அக்குளில் வளரும் முடியை நீக்குவதற்கு பல்வேறு வழிகள் உள்ளன. வெறும் ஷேவிங் மற்றும் அழகு நிலையங்களுக்குச் சென்றால் மட்டும் தான் அக்குளில் உள்ள முடியை நீக்க முடியும் என்பதில்லை.

அக்குளில் வளரும் முடியை வெறும் 2 நிமிடத்தில் நீக்க முடியும். அதுவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிகளைப் பின்பற்றினால், 2 நிமிடத்தில் அக்குள் முடியை காணாமல் போகச் செய்யலாம். சரி, இப்போது அக்குள் முடியைப் போக்கும் இயற்கை வழிகளைக் காண்போமா…!




தேவையான பொருட்கள்:

சர்க்கரை – 2 கப்

எலுமிச்சை சாறு – 1/4 கப்

 தண்ணீர் – 1/4 கப்

 தேன் – 1/4 கப்

தயாரிக்கும் முறை:

* ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, சிறிது நேரம் நீரை கொதிக்க வைக்க வேண்டும்.

* நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் மற்ற பொருட்களையும் சேர்த்து கலந்து, குறைந்தது 1/2 மணிநேரம் குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

* எப்போது கலவையானது ப்ரௌன் நிறத்தில் மாறுகிறதோ மற்றும் சற்று கெட்டியாகிறதோ, அப்போது அடுப்பில் இருந்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.




 

பயன்படுத்தும் முறை:

* அக்குளை நீரால் கழுவ வேண்டும். பின் துணியால் அக்குளை துடைத்து, உலர்த்த வேண்டும். இதனால் அக்குளில் உள்ள வியர்வை நீங்கும்.

* பின்பு பேபி பவுடர் அல்லது வேறு ஏதேனும் டால்கம் பவுடரை அக்குளில் தடவுங்கள். இதனால் அக்குளில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கும்.

* பிறகு தயாரித்து வைத்துக்க கலவையை தட்டையான ஸ்பூன் பயன்படுத்தி அக்குளில் மெல்லிய லேயராக தடவ வேண்டும்.

* கலவையானது நன்கு காய்ந்த பின், மிகவும் வேகமாக உரித்தெடுங்கள். மெதுவாக உரித்தெடுத்தால், சருமத்தில் சுருக்கங்கள் விழ ஆரம்பிக்கும். பின் அக்குளில் உள்ள முடியும் சரியாக நீங்காமல் இருக்கும்.

* உரித்தெடுத்த பின், அக்குளை சோப்பு பயன்படுத்தி நீரால் கழுவ வேண்டும். பின் துணியால் துடைத்துவிடுங்கள் முடி நன்றாக நீங்கி இருக்கும். இந்த செயலை மற்றொரு அக்குளிலும் செய்யுங்கள்.




What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!