Entertainment தோட்டக் கலை

வீட்டுக்கு தேவையான காய்கறி மற்றும் விதைகள்

வீட்டுக்கு தேவையான காய்கறி என்ன  மற்றும் விதை எங்கே கிடைக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்




1) முதலில் காய்கறிகளில் இரண்டு வகை உண்டு ஓன்று செடி வகை மற்றொன்று கொடிவகை . இதில் உங்களுக்கு என்னவகையான காய்கறிகள் தேவை என்பதை பொறுத்து தோட்டத்தை திட்டமிடுங்கள் சில காய்கறிகள் உங்களுக்கு தினமும் தேவைப்படலாம்  தக்காளி , வெங்காயம் , பச்சைமிளகாய் , புதினா ,கொத்தமல்லி ,கருவேப்பில்லை .

2) அடுத்ததாக வாரம் அல்லது 10 நாட்களுக்கு ஒரு முறை தேவைப்படும் காய்கறிகள்  வெண்டைக்காய் , கத்தரிக்காய் , முள்ளங்கி மற்றும் கொடிவகை காய்கறிகள்.

3) எந்த பருவத்தில் எந்தவிதமான காய்கறிகள் பயிர் செய்யவேண்டும் என்பதை தெரிந்து வைத்திருப்பது நல்லது தக்காளி வெண்டை போன்ற பயிர்கள் வருடம் முழுவதும் வரும்.

4) நீங்கள் வீட்டுத்தோட்டம் அமைக்கும் பகுதியில் எவ்வளவு வெயில் கிடைக்கும் என்று பாருங்கள் . வெயில் சரியாக இருந்தால் ஓட்டுவகை மரங்களை நடலாம் . இந்த ஒட்டு வகை செடிகளின் அடிப்படை குட்டையாக இருக்கும் விரைவாக காய் காய்க்கும் . ஒருவேளை கட்டிடங்களால் வெய்யில் பாதிக்கப்பட்டால் குட்டை ரக மரங்கள் தங்கள் இயல்ப்பை மீறி வேகமாக வளரும் எனவே சூரிய ஒளி தேவையான இடைவெளி இரண்டும் மிக முக்கியம் .




5) வீட்டு தோட்டத்தை பொறுத்தவரை குறைந்த இடத்தில் அதிக செடிகள் நடுவதை தவிர்த்து விடலாம் . குறைந்த இடத்தில் அதிக இடத்தில் நடுவதால் பூச்சி நோய்க்கு சுலபமாக தாக்கும் செடிகள் இயல்ப்பை மீறி வளரும் தமிழ் நாட்டை பொறுத்தவரை பழமரங்கள் மற்றும் காய்கறிகள் அதிகம் வெயிலை விரும்புபவை அதை நிழலுக்கு கொண்டு செல்லும்போது விளைச்சல் பாதிக்கலாம்.

6) வீட்டுத்தோட்டத்தை பொறுத்தவரை நீர் அளவாக கொடுக்கவேண்டும் காய்ச்சலும் பாய்ச்சலுமாக இருந்தால் மிக நன்று தேவையான இடு பொருட்களும் சீரான இடைவெளியில் கொடுக்கவேண்டும் .

7) பொதுவா வீட்டுக்கு தேவையான பொரியலுக்கு தேவையான காய்கறிகள் கொடி வகை காய்கறிகளாக இருக்கும் வெர்ட்டிகள் ஆக இந்த கொடி வகைகளை வளர்க்கலாம் .

8) தோட்டம் நல்ல முறையாக செயல்பட தேவையான நேரத்தை நாம் ஒதுக்க வேண்டும் ஒவ்வொரு செடியும் ஒவ்வொரு இலையும் பார்த்து மக்கி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். செடி உயரமாக வளர்ந்தால் குச்சி கட்டி விட வேண்டும்.வேர்கள் வெளியே தெரிந்தாலும் மண்கலவை போட வேண்டும்.
எவ்வளவு நேரம் நாம் மாடித் தோட்டத்திற்கு என செலவிடுகிறேமோ அவ்வளவு விஷயங்களையும் நாம் கற்றுக்கொள்ளலாம்.பொறுமைதான் மாடி,வீட்டுத்தோட்டத்திற்க்கு ரொம்ப முக்கியம்.  வீட்டுத் தோட்டம் என்பது ரசாயனங்கள் தெளிக்காமல் வளர்த்து விளைச்சல் எடுப்பதுதான் அடிப்படையே. இவையெல்லாம் தான் நாம் தோட்டத்தில் ஜெயிக்க அடிப்படை விஷயம்.




காய்கறி மற்றும் நாட்டு காய்கறி விதைகள் கிடைக்கும் இடம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • நீங்கள் எந்த மாவட்டத்தில் இருந்தாலும்  நம் வீட்டில் அருகில் உள்ள நாட்டு மருந்து கடைகளிலும் விதைகள் கிடைக்கும்.

  • வெவ்வேறு மாவட்டத்தில் உள்ள விதைகள் கிடைக்கும் இடத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நேரில் சென்று கடைகளை பார்த்து வாங்குங்கள்.

தமிழ்நாட்டில், ஆண்டிற்கு இருமுறை, பாரம்பரிய அரிசி விதை திருவிழா நடைபெறுகிறது. C.R.E.A.T.E.(Consumer Research Education Action Training Empowerment) என்ற இயற்கை வேளாண்மை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், இந்த திருவிழாவை நடத்துகிறது. திருவாரூர் மாவட்டம், திருத்துறைபூண்டி தாலுக்காவில் உள்ள ஆதிரங்கம் என்ற ஊரில் இயங்கி வருகிறது இந்த மையம். இந்த மையத்தில், தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல்விதைகளில்  53 வகைகளை சேகரித்து வைத்திருக்கிறார்கள். விதை திருவிழாக்கள் மூலம் பாரம்பரிய விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப் படுகின்றன. ஆர்வமுள்ள விவசாயிகள் தங்கள் வசம் உள்ள பாரம்பரிய விதைகளை மற்றவர்களுக்கு வழங்கும் விதை பரிமாற்றமும் அப்போது நடக்கும்.

திரு. ஜெயராமன் 

தொடர்பு கொள்ள – 04369-2209954,

Cell: 94433 20954,

E-mail: [email protected].
இவர்களிடம் பாரம்பரிய காய்கறி விதைகளும் கிடைக்கும்.

இதே திருத்துரைபூண்டியை சேர்ந்த C. கரிகாலன் (92456 21018) என்பவரும் பாரம்பரிய விதை விற்பனை செய்து வருகிறார்.

நாட்டு காய்கறி விதை வாங்க விரும்புவோர், திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்த திரு. யோகநாதனை அணுகலாம். தமிழ்நாட்டின் 36 பாரம்பரிய காய்கறி விதை வகைகள் அவரிடம் இருக்கின்றன. கத்தரிக் காயில் மட்டும் பொன்னி கத்தரி, பச்சை கத்தரி, வெள்ளை கத்தரி, பாளையம் கத்தரி, முள் கத்தரி என்று ஐந்து வகைகளை வைத்திருக்கிறார் இவர்.  தொடர்புக்கு – 94428 16863.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள பாலூரில் உள்ள காய்கறிகள் ஆராய்ச்சி நிலையமும், காய்கறி விதை வாங்க சிறந்த இடம். பச்சை வெண்டை, வெள்ளை வெண்டை, சிகப்பு வெண்டை, நெட்டை புடலை, குட்டை புடலை, மிதி பாகல், நெட்டை பாகல், குட்டை பாகல்,கீரை வகைகள், பீர்க்கன் காய், கொடி அவரை, சுரைக்காய், தக்காளி, கொத்தவரை, பரங்கி, சாம்பல் பூசணி ஆகிய விதைகள் இங்கே கிடைக்கும். காய்கறி ஆராய்ச்சி நிலையம், பாலூர், கடலூர் மாவட்டம். 0414 -2212538.




பாரம்பரிய விதைகள் வாங்க மற்றுமொரு சிறந்த தொடர்பு-கர்நாடக மாநிலத்தின் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள ஒடயார்பாளயம் கிராமத்தை சேர்ந்த குருசாமி. பாரம்பரிய விதை சேகரிப்பாளர் இவர். சேகரித்த பாரம்பரிய விதைகளை வகை படுத்தியுள்ளார் . 09008167819.

பெங்களூரை சேர்ந்த ஜனதான்ய அமைப்பு பாரம்பரிய விதை சேகரிப்பு மற்றும் விற்பனை பணிகளை செய்து வருகிறது.
080-26784509, 9449861043,
FAX-080-26680995.

e-mail: [email protected]
[email protected]
[email protected]

இயற்கை முறையில் விளைந்த (organic), நாட்டு காய்கறி விதைகளை விற்பனை செய்கிறது. [email protected] ல் தொடர்பு கொண்டு விதைகள் வாங்கலாம்.

பொருட்களை நேரில் சென்று பார்த்து வாங்கி வரவும் ..தயவு செய்து ஆன்லைனில்  பணம் அனுப்பி வாங்குவதை தவிர்க்கவும். 




What’s your Reaction?
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!