Entertainment தோட்டக் கலை

மாடி தோட்டத்தில் செய்ய கூடாத சில விஷயங்கள்-3

கண்டிப்பா இந்த விஷயத்தை கவனீங்க!

நிலத்தில விவசாயம் செய்யும்போது ஏக்கர் கணக்குல செய்வாங்க. மண் அதிக அளவுக்கு இருக்கும். அங்க செடிகளுக்கு ரசாயன மருந்து தெளிப்பாங்க. ஆனா செடி எப்பவும் ரசாயனத்தைத் தனக்குள்ள வெச்சுக்காது. மண்ணுக்குள்ள இறங்கிவிட்டுடும். அது பெரிய பரப்பளவுள்ள நிலம். அங்கு மண்ணுக்குள்ள போற ரசாயனம் மண்ணுக்கு ஆழத்துலப் போய்ப் படியும். அதுனால உடனடியா பாதிப்பு தெரியாது.





ஆனா, நாம வீட்டுத்தோட்டத்துல சின்னச் சின்ன பைகள்லதான பயிர் வளர்க்குறோம். அந்தப் பையில மொத்தமே ஒரு கிலோ மண்தான் இருக்கும். அதுனால நாம தெளிக்குற ரசாயன மருந்து காலத்துக்கும் அந்தத் தொட்டியிலதான் கிடக்கும். அதை மறுபடியும் வெளியே அனுப்ப முடியாது. அடுத்த பயிரை அந்தத் தொட்டியில நடவு செஞ்சாலும் அதுலயும் அந்த ரசாயனத்தோட தாக்கம் இருக்கும். அதுனால அவசரத்துல பயன்படுத்தி இருந்தாலும் அந்தப் பயிர் முடிஞ்சவுடனே அந்தப் பையில இருக்க மண்ணை மாத்திடணும்.

இன்னொரு முக்கியமான விஷயம் மாடித்தோட்டத்தில மண் அதிகமாகப் பயன்படுத்தக் கூடாது. அதுக்குப் பதிலா தென்னை நார்க்கழிவுதான் பயன்படுத்தணும். மண் அதிகமா பயன்படுத்தும்போது மாடியில எடை கூடிக்கிட்டேப் போகும். அது ஒரு கட்டத்துல கட்டடத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம். பலரும் மாடியில மண் தொட்டி பயன்படுத்துறாங்க. அதுவே எடை அதிகம். அதுல மண்ணை வேற கொட்டிடுறாங்க. வீட்ல கீழ்ப்பகுதியில நிலத்தில் மண் தொட்டி பயன்படுத்தலாம். ஆனா, மாடியில் பயன்படுத்தும்போது மண் தொட்டி, மண் இரண்டையும் தவிர்ப்பது நல்லது. அதேபோல மாடித்தோட்டத்துல தண்ணி தேங்காம வடிஞ்சி போற மாதிரி பார்த்துக்கணும். இப்ப அதுக்கு தனியா சிமென்ட், பெயின்ட்னு பல டெக்னாலஜி கடைகள்ல கிடைக்குது.

ரெண்டு பயிர் அறுவடை முடிஞ்ச பிறகு, தென்னை நார்க்கழிவு உரத்தையும் மாத்திடணும். பையில இருக்க தென்னை நார்க்கழிவு உரத்தை வெயிலில் கொட்டி நல்லா காய வைக்கணும். அப்பத்தான் அதுல இருக்க தீமை செய்யுற நுண்ணுயிர்கள் அழிஞ்சுபோகும். பிறகு, அதை ஒரு பையில சேமிச்சு வெச்சுக்கலாம். தேவைப்படும்போது, அதுல டிரைக்கோடெர்மா விரிடி, சூடோமோனஸ் சேர்த்து ஊட்டமேற்றி பயன்படுத்தணும்.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!