Entertainment தோட்டக் கலை

மாடித் தோட்டதில் செய்ய கூடாத சில விஷயங்கள் -2

`ஷேட் நெட்’னு சொல்ற நிழல்வலை. இது நம்ம ஊருக்குத் தேவையில்லாதது. இன்னிக்கு அது பேஷன் ஆகிப்போச்சு. நம்மளோட பயிர்கள் நிழலில் வளரக்கூடிய பயிர்கள் இல்ல. எல்லாமே வெப்பமண்டல பயிர்கள்தான். அந்தத் தாவரங்கள்ல முழுக்க முழுக்க வெயில்பட்டால்தான் நல்லா வளரும். அதனாலதான் மொட்டை மாடியில வைக்கிறோம். `ஷேட் நெட்’ போடும்போது தேவையான சூரிய ஒளி கிடைக்கிறது இல்ல. செடி வளரும். ஆனா நம்ம தேவையை நிறைவேற்றாது. ஒரு கணுவுக்கும் இன்னொரு கணுவுக்குமான இடைவெளி கூடும். தேவையான மகசூல் கிடைக்காது. வாளிப்பான தரமான காய்கறிகள் கிடைக்காது.




சரி அப்ப `ஷேட்நெட்’ பயன்படுத்தக் கூடாதா?னு ஒரு கேள்வி வரலாம். எந்தெந்த தாவரங்கள் பூக்காதோ அந்தத் தாவரங்களுக்குப் பயன்படுத்தலாம். புதினா, கொத்தமல்லி, கீரை மாதிரியான பூக்காத தாவரங்களை வளர்க்கலாம். தக்காளி, மிளகாய், வெண்டை உள்ளிட்ட பூப்பூத்து காய்காய்க்குற பயிர்களை வெயில்லதான் வைக்கணும். இதுதான் மாடித்தோட்டத்தோட அடிப்படை.

சிலர் கேரட், முட்டைகோஸ் மாதிரியான இங்கிலீஸ் காய்கறிகளை மாடித்தோட்டத்துல பயிர் பண்றாங்க. அதுக்கு ஷேட்நெட் பயன்படுத்துறாங்க. அது வெயிலைக் குறைக்குமே தவிரக் குளிர்ச்சியை ஏற்படுத்தாது. இந்தப் பயிர்கள் எல்லாம் குளிரான பகுதிகள்ல வளரக்கூடிய பயிர்கள். ஆனா, பல வீடுகள்ல இந்தப் பயிர்களை வளர்க்குறாங்க. மண்ணுக்குள்ள வளரும் பயிர், நேரடியா சூரிய ஒளி படாத இடத்துல வச்சா வளரும். ஆனால், அது சரியான முறை இல்லைனு தோட்டக்கலைத்துறை விஞ்ஞானிகள் சொல்றாங்க. இதையும் கவனத்துல வெச்சுக்கங்க மக்களே.

  • மேலும் பூச்சிகள்  பயறு வகைப் பயிர்களைத் தாக்கக்கூடிய முக்கியமான பூச்சிகளில் ஒன்று. கொத்தவரையைத் தவிர தக்காளி,   அவரை, மிளகாய் போன்ற பல்வேறு பயிர்களையும் தாக்கக்கூடியது.

  • புழுக்கள் காய்களைத் துளைத்து உள்ளிருக்கும் விதைகளை உண்டு அதிக சேதம் விளைவிக்கக்கூடியவை.

விவசாயத்துல இன்னோர் அடிப்படை, இயற்கை விவசாயம். நம்ம வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை, விஷம் இல்லாம உற்பத்தி பண்ணிச் சாப்பிடணும்னுதான் மாடித்தோட்டம் போடுறோம். இதுல அவசரத்துல சிலர் ஒரு தப்பு பண்ணிடுறாங்க. சில நேரங்கள்ல பூச்சித் தாக்குதல் அதிகமாகிடும். உதாரணமாக, மேலே சொன்ன மாதிரி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பயிர்களைப் பக்கத்துல பக்கத்துல வைக்கிறதுனாலக்கூட வரலாம். அதுமாதிரி அதிக பூச்சிக வந்தவுடனே பதறிப்போய், அவசரத்துக்கு ரசாயன மருந்தை வாங்கிட்டு வந்துத் தெளிச்சிடுறாங்க. அது மிக மோசமான விளைவுகளைக் கொடுக்கும்.

என்ன மாதிரி விளைவுகளை கொடுக்கும்? நாளைய பதிவில் தெரிஞ்சுக்கலாம்..




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!