Cinema Entertainment Serial Stories

எதிர்நீச்சல் கிளைமாக்ஸ்? இயக்குனர் திருச்செல்வம் ஓபன் டாக்..!




சன் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் எதிர்நீச்சல் சீரியலின் கிளைமாக்ஸ் பற்றியும், எதிர்நேச்சல் சீரியலில் இடம்பெறும் குணசேகரன் கதாபாத்திரம் பற்றியும் பேசியுள்ளார் இயக்குனர் திருச்செல்வம்

90 ஸ் கிட்ஸ் அனைவர்க்கும் கோலங்கள் சீரியல் மனதிற்கு நெருக்கமான சிரியலாக இருந்து வந்தது. பள்ளி பயின்ற காலகட்டத்தில் டியூஷன் முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து இரவு உணவு அருந்திக்கொண்டே கோலங்கள் சீரியல் பார்த்தது இன்றளவும் நம்மால் மறக்கமுடியாத நினைவுகளாக நெஞ்சில் இருக்கின்றது. அந்தளவு அந்த சீரியலின் மூலம் நமக்கு தாக்கத்தை ஏற்படுத்தியவர் தான் இயக்குனர் திருச்செல்வம்.

மெட்டிஒலி சீரியலில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்த திருச்செல்வம் கடந்த 2003 அம ஆண்டு கோலங்கள் சீரியலை இயக்க துவங்கினார். தேவையானி நாயகியாக நடித்த கோலங்கள் சீரியல் 2003 ஆம் ஆண்டு துவங்கி 2009 ஆம் ஆண்டு வரை வெற்றிகரமாக ஓடியது. இதன் மூலம் தனக்கென தனி இடத்தை சின்னத்திரை வட்டாரத்தில் பிடித்தார் திருச்செல்வம்.

கோலங்கள் சீரியலை பார்த்துவிட்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தே திருச்செல்வத்தை அழைத்து பாராட்டியிருக்கிறார். அந்த அளவு கோலங்கள் சீரியல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து சில சீரியல்களை இயக்கிய திருச்செல்வம் தற்போது எதிர்நீச்சல் என்ற சீரியலை வெற்றிகரமாக இயக்கிக்கொண்டிருக்கின்றார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த சீரியல் TRP யில் நம்பர் ஒன் இடத்தை பிடித்து வருகின்றது. பெண்கள் மற்றும் வயதானவர்கள் மட்டுமல்லாமல் இளைஞர்கள் மத்தியிலும் இந்த சீரியல் பிரபலமாக இருந்து வருவது கூடுதல் சிறப்பாக இருக்கின்றது.




குறிப்பாக இந்த சீரியலில் வரும் குணசேகரன் கதாபாத்திரம் வேற லெவெலில் ரீச்சாகியுள்ளது. நடிகர் மற்றும் இயக்குனருமான மாரிமுத்து தான் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். என்னதான் பல படங்களில் நடித்து அவர் பாராட்டை பெற்றாலும் இந்த குணசேகரன் கதாபாத்திரம் அவரை பட்டி தொட்டியெங்கும் உள்ள ரசிகர்களிடம் கொண்டு சென்றுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் எதிர்நீச்சல் தொடரை பற்றியும், குணசேகரன் கதாபாத்திரத்தை பற்றியும் பேசியுள்ளார் திருச்செல்வம். அவர் பேசியதாவது, எதிர்நீச்சல் சீரியலில் வரும் குணசேகரன் கதாபாத்திரத்தை போல ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் கண்டிப்பாக இருப்பார்கள். நான் நிஜத்தில் சந்தித்த ஒருவரை மனதில் வைத்து தான் குணசேகரன் கதாபாத்திரத்தை உருவாக்கினேன்.

அவர்களை போன்றவர்கள் தனக்கென தனி ஒரு பாதையை வகுத்துக்கொண்டு அதுதான் சரி என நினைத்துகொள்வார்கள். எனவே அவர்கள் திருந்தினால் அது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாக இருக்கும். ஒன்று அவர்கள் தானாக ஒதுங்கிக்கொள்வார்கள் இல்லையென்றால் கடைசிவரை மாறாமல் அப்படியே இருப்பார்கள்.

ஒருவேளை அவர்கள் திருந்துவது போல காண்பித்தால் அது செயற்கையாக இருக்கும். மேலும் எதிர்நீச்சல் கிளைமாக்ஸை வேறொரு விதமாக யோசித்துள்ளேன். அதை இப்போ கூறினால் சுவாரஸ்யம் குறைந்துவிடும் என்பதால் அதை கூறாமல் இருப்பதே நல்லது என்றார் திருச்செல்வம்.

 




 

இந்நிலையில் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் எதிர்நீச்சல் சீரியலின் முழு கதையையும் திருச்செல்வம் ஆரம்பத்திலேயே உருவாக்கினார் என்றும், இடையில் கதையில் எந்த மாற்றத்தையும் நிகழ்த்தாமல் தான் எழுதிய கதையை அப்படியே எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார் திருச்செல்வம். பொதுவாக சிலபேர் போக்கிற்கு ஏற்றாற்போல கதையில் சில மாற்றங்களை செய்வார்கள் என்றும், தான் எழுதிய கதையை தான் எபிசோடாக எடுப்பேன் என்றும் கூறியுள்ளார் திருச்செல்வம்.

முடிவு எப்போது:  அது மட்டுமல்லாமல் எதிர்நீச்சல் சீரியல் இப்போது வரைக்கும் நல்ல ஒரு நிலையில் சென்று கொண்டிருக்கிறது. அதிகமான பாசிட்டிவ் கருத்துக்கள் எனக்கு வந்த வண்ணமாக இருக்கிறது. இனி இந்த சீரியலில் இருக்கும் பெண்களுக்கு சிறு துரும்பு போல ஒரு கயிறு கிடைத்தாலும் அதை பிடித்துக் கொண்டு அவர்கள் வாழ்க்கையில் முன்னேற துடிப்பார்கள். அந்த மாதிரி தான் சீரியல் போகப் போகிறது. கோலங்கள் சீரியலில் தனக்கு 400 எபிசோடுகளுக்கு மேலே கிடைத்த ரசிகர்கள் எனக்கு இந்த சீரியலில் 150 எபிசோடில்  கிடைக்க தொடங்கி விட்டார்கள். இந்த நிலையில் இந்த சீரியல் எப்போது ரசிகர்கள் சுவாரசியம் குறைகிறது என்று நினைக்கிறார்களோ அப்போதுதான் அதற்கான முடிவு தெரியும் என்று கூறியிருக்கிறார்.

மேலும் அவர்  கோலங்கள் சீரியலால் நான் பல வாய்ப்புகளை இழந்து இருக்கிறேன். அந்த நேரத்தில் சீரியல் இயக்கிக் கொண்டிருக்கும் போது பலர் திரைப்படங்களை இயக்க தொடங்கி விட்டார்கள். குறிப்பாக சமுத்திரக்கனி கூட அப்போது என்னை போல சீரியல் தான் இயக்கிக் கொண்டிருந்தார். ஆனால் அவர் வாய்ப்பு வந்ததும் டக்கென்று மாறிவிட்டார். நானும் ஏற்கனவே திரைப்படங்களில் இருந்து தான் சீரியலுக்கு வந்திருந்தேன். ஆனால் என்னால் அப்படி போக முடியவில்லை.  நான்  இயக்கி ஒரு நல்ல நிலையில் வைத்திருக்கும் சீரியலை விட்டுப் போக எனக்கு மனதில்லாமல் அந்த சீரியலிலே இருந்துவிட்டேன். அதனால் நான் நிறைய வாய்ப்புகளை இழந்து இருக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

 




What’s your Reaction?
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!