Entertainment தோட்டக் கலை

இப்படி வச்சா தான் அதிக மகசூல் கிடைக்கும்

ஒரு பையில ஒரு செடியைத்தான் வைக்கணும். அப்பத்தான் பயிரோட முழுமையான மகசூல் நமக்குக் கிடைக்கும். பொதுவா, தக்காளி, கத்திரி ரெண்டும் 6 முதல் 8 கிலோ வரைக்கும் மகசூல் கொடுக்கும். ஆனா, ஒரே தொட்டியில ரெண்டு செடி வச்சா, நிறைய காய்க்கும்னு நினைச்சு வெச்சிடுறோம். ஒரு செடி மட்டும் இருந்தா சத்துக்களை முழுசா எடுத்துக்கிட்டு 6 கிலோ கொடுக்கும். அதே இடத்துல ரெண்டு செடி இருக்கும்போது ரெண்டும் சேர்ந்து 4 கிலோவுக்கு மேல காய்க்காது. அப்ப நமக்கு 2 கிலோ மகசூல் இழப்பு ஆகிடும்.




அதே மாதிரி ஒரே செடியா இருந்தா நாலஞ்சு மாசம் கூட செடி காய்க்கும். ஆனா, ரெண்டு, மூணு செடிக இருந்தா மூணு மாசத்துக்கு மேல செடிகள்ல மகசூல் எதிர்பார்க்க முடியாது. கத்திரி, தக்காளி வளைஞ்சு நெளிஞ்சு போகாம, நேராப் போற மாதிரி பாத்துக்கணும். குட்டி மரம் மாதிரி இருக்கணும். அப்பதான் நல்ல மகசூல் கிடைக்கும்.

சில பேரு நேரடியா விதையைப் பையில நடவு செஞ்சிடுறாங்க. பொதுவா அப்படி நடக் கூடாது. அப்படி நட்டாலும் நேரடியா வெயில் படக் கூடாது.

தக்காளி, கத்திரி, மிளகாய் விதை ரொம்ப மெல்லிசா இருக்கும். மண்ணுல மேலாக வெச்சுதான் மூடுவோம். அது முளைக்க ஈரப்பதம் முக்கியம். நடவு செய்யும்போது மண்ணுல ஊத்துற தண்ணியோட ஈரப்பதத்தை விதை உறிஞ்சி பிறகுதான் முளைக்கும்.

அது முளைக்கிற வரைக்கும் ஈரப்பதம் குறையாம பாத்துக்கணும். வெயில்ல வைக்கும்போது, மண்ணோட ஈரப்பதம் போயி, விதையிலயும் ஈரப்பதம் போயிடும். முளைக்காது. என்னால ஈரப்பதம் போகாம பார்த்துக்க முடியும்னு நினைக்குறவங்க நேரடியா நடவு பண்ணலாம். நாட்டு விதையா ரெண்டு, மூணு விதையை நடவு பண்ணணும். முளைவிட்டதும், நல்லா இருக்குற செடியை விட்டுட்டு மத்த செடிகளைக் கிள்ளி விட்டுடணும். இதுல கவனமா இருந்தா  தோட்ட விவசாயத்துல நீங்க கில்லி தான்.




What’s your Reaction?
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!