Samayalarai

மொறுமொறுப்பான வாழைக்காய் பால்ஸ்

குழந்தைகளுக்கு மிகவும் சுவையான ஏதாவது புதிய ஸ்நாக்ஸ் ரெசிபி செய்து தர வேண்டும் என்று நினைக்கிறீர்களா..? அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்காக தான். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் மிகவும் எளிமையான மற்றும் மிகவும் ருசியான ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபியை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம்.




அது என்ன ரெசிபி என்றால் மொறுமொறுப்பான வாழைக்காய் பால்ஸ்  தான். வாழைக்காயை வாரம் மூன்று முறை சாப்பிட்டு வருவதால் உடலில் இன்சுலின் ஹார்மோன் சுரப்பை அதிகரித்து, ரத்தத்தில் குளுகோஸின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. சர்க்கரை நோய், உடல் எடை குறைக்க, எலும்பு பலம் பெற உதவுகிறது. அதனால் பதிவை முழுசாக படித்து இந்த வாழைக்காய் பால்ஸ்  எப்படி செய்வது என்பதை அறிந்து கொண்டு உங்களின் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும் செய்து கொடுத்து அசத்துங்கள். சரி வாங்க நண்பர்களே படித்து தெரிந்து கொள்ளுவோம்.




தேவையான பொருட்கள்

வாழைக்காய் – 2

வெங்காயம் – 4

மஞ்சள் தூள் – 2 டீஸ்பூன்

கரம் மசாலா தூள் – 2 டீஸ்பூன்

மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்

கொத்தமல்லி இலை – 1 கைப்பிடி அளவு

பிரட் தூள்  – 150 கிராம்

மைதா மாவு – 3 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

தண்ணீர் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு




செய்முறை விளக்கம்

  • முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அத்துடன் நாம் எடுத்து வைத்துள்ள 2 வாழைக்காய்களையும் இரண்டாக நறுக்கி அதனுடனே சேர்த்து  வேக வைத்து கொள்ளுங்கள்.

  • பின்னர் வேக வைத்துள்ள வாழைக்காயின் தோலை நீக்கி விட்டு நன்கு மசித்து கொள்ளுங்கள். பிறகு அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 2 டீஸ்பூன் மஞ்சள் தூள், 2 டீஸ்பூன் கரம் மசாலா தூள், 2 டீஸ்பூன் மிளகாய் தூள், 50 கிராம் பிரட் கிராம்ஸ் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள்.

  • அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 4 வெங்காயம் மற்றும் 1 கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும். பின் இதனையும் சேர்த்து பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

  • அடுத்து ஒரு சிறிய கிண்ணத்தில் நாம் எடுத்து வைத்துள்ள 3 டேபிள் ஸ்பூன் மைதா மாவினை சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.

  • இப்பொழுது நாம் முன்னரே உருட்டி வைத்துள்ள உருண்டைகளை நாம் தயார் செய்து வைத்துள்ள மைதா மாவு கலவையில் நனைத்து  நாம் எடுத்து வைத்துள்ள பிரட் தூள் போட்டு பிரட்டி எடுத்து அதனை மீண்டும் மைதா மாவு கலவையில் நனைத்து மீண்டும் பிரட் தூள்களை  போட்டு பிரட்டி எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

  • பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெயை ஊற்றி அதில் நாம் தயார் செய்து வைத்துள்ள உருண்டைகளை போட்டு நன்கு பொறித்து கொள்ளுங்கள்.

  • இப்பொழுது நமது மொறுமொறுப்பான வாழைக்காய் தயாராகி விட்டது வாங்க சுவைக்கலாம். நீங்களும் இந்த ரெசிபியை உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள்.

 

டிப்ஸ்

  • வாழைக்காயை  நன்றாக வேக வைத்து கொள்ளுங்கள். மைதா மாவு இல்லை என்றால் கார்ன் மாவு சேர்த்து கொள்ளலாம்.

  • வாழைக்காய் மற்றும் வாழை மரம் தொடர்பான அனைத்துமே நமது உடலில் இருக்கும் இரத்த செல்களில் குளுக்கோஸ் அதிகம் உறிஞ்சப்படுவதை தடுக்கிறது. ஆகையால் வாரம் 2 முறை  வாழைக்காயை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

வீட்டு குறிப்புகள்

  • வீட்டிற்கு எந்த ஒரு பொருளை வாங்கும் போதும், அந்த பொருள் வீட்டிற்கு தேவைதானா? வீட்டின் இட அளவிற்கு போதுமானதா? என்பதை யோசித்து வாங்க வேண்டும்

  • சுவரில் எங்காவது விரிசல், ஓட்டை ஆகியவை காணப்பட்டால், அந்த இடங்களில் அழகிய சுவர் ஓவியங்களை மாட்டி வைக்கலாம்.

What’s your Reaction?
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!