Cinema Entertainment Serial Stories

பூக்க தவறிய பூக்கள் – சில்க் ஸ்மிதா 2 

            டச்சப்  கேளாகிப் போனார் விஜயலட்சுமி. ஆம், ‘கதாநாயகிகளுக்கு அல்ல’  துணை நட்சத்திரங்களுக்கு    மேக்கப் செய்து விடும் வேலை விஜயலட்சுமிக்கு கிடைத்தது. மிகப்பெரிய சாதனையை செய்தது போல் குதூகளித்தார் விஜயலட்சுமி .தான் விரும்பிய சினிமா தளம், தான் விரும்பிய சூட்டிங் ஸ்பாட், தான் விரும்பிய நடிகர்கள் மத்தியில்! ஆனால் !! இவர் யார் என்று எவருக்கும் தெரியாது. இப்படியாக காலம் உருண்டோட ஆரம்பித்தது.





ஒரு கட்டத்தில் பத்து இருபது பெண்களில் ஒருத்தியாக கும்பலோடு கும்பலாக, கோரஸ் பாடும் கதாபாத்திரங்கள் விஜிக்கு கிடைத்தது. அந்த பாத்திரங்கள் பெரிய அளவில் விஜயலட்சுமிக்கு திருப்தியை தரவில்லை. எல்லாவற்றிற்கும் நேரம் வரவேண்டும் அல்லவா?

அந்த நேரம் அவர் வாழ்நாளில் ஒரு நாள் வந்தது. ரைஸ் மில்லில் மாவு அரைப்பதற்காக சென்றார் விஜி. ஏவிஎம் ஸ்டுடியோ வாசலில் உள்ள ரைஸ் மில் அது அவர் ஏவிஎம்மின் வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்பொழுது காரில் அவரை கடந்து சென்றார் ‘வினுசக்கரவர்த்தி. காரில் அவரை கடந்து சென்ற அந்த ஒரு வினாடியை வினுசக்கரவர்த்தி” எவ்வாறு பதிவிடுகிறார் தெரியுமா?              யார் ‘இந்த அற்புதப் பெண்’ ‘இந்தப் பெண்ணின் கண்களில் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது’ .அது என்னை சுண்டி இழுக்கிறது. நான் இவளை கடந்தது ஒரு வினாடி தான். ஆனால் அந்த ஒரு வினாடி நேரத்தில் ஒரு மின்னலைக் கடந்தது போல் நான் உணர்ந்தேன். என்று பதிவு செய்கிறார் வினுசக்கரவர்த்தி.

பிறகென்ன அந்தப் பெண் யார் என்று தேடி, அது விஜயலட்சுமி தான் என்று தெரிந்து, அன்னபூரணிக்கு தகவல் தரப்பட்டு, அடித்துப் பிடித்துக் கொண்டு அன்னபூரணி விஜியையும் கூட்டிக்கொண்டு வினுச்சக்கரவர்த்தியை பார்க்க வந்து நின்றார்.




என்னுடைய வண்டிச்சக்கரம் படத்தில் சாராயம் விற்கும் ஒரு பெண்ணின் கேரக்டர் இருக்கிறது. கொஞ்சம் கவர்ச்சியாக நடிக்க வேண்டும், உனக்கு சம்மதமா?  பளிச்சென்று கேட்டார் வினு சக்கரவர்த்தி. நடிக்க வேண்டும் என்ற வார்த்தையிலேயே காற்றில் மிதந்த விஜயலட்சுமி , அது எப்படியானால் என்ன ?கவர்ச்சியானால் என்ன? எந்த கதாபாத்திரமானால் என்ன? நடித்தால் மட்டும் போதுமே,’ சம்மதம் சம்மதம்’ என்று குதித்தார். தமிழ் சினிமாவில் விஜயலட்சுமி ஆட்டம் ஆரம்பமானது.

   திரைக்காக அவருக்கு ‘சுமிதா’ என்று பெயர் சூட்டப்பட்டது. அந்தத் திரைப்படத்தில் சில்க் என்ற பெயரில் சாராய கடை நடத்திவரும் பெண்ணாக நடித்திருப்பார் விஜி. அவருடைய கவர்ச்சி, அவருடைய கண் விழி பார்வை , அவருடைய கிறக்கும் பேச்சு, ஒட்டுமொத்த ரசிகர்களையும் கிறுக்கு பிடிக்க வைத்தது. தமிழகத்திற்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லாத விஜயலட்சுமி என்ற பெயர் இல்லாமலே போனது. சுமிதா என்ற பெயரோ ஒதுங்கிக் கொண்டது. அந்தக் கதாபாத்திரமான சில்க் முன்னால் வந்து நின்றார். சுமிதா சில்க்குடன் இணைந்து சில்க் சுமிதா ஆகிப் போனார்.

இந்த கட்டுரையை வாசித்துக் கொண்டிருக்கும் நண்பர்களுக்கு; ஒரு பெண்ணாக இருந்து கொண்டு, அதிலும் அழகான பெண்ணாக இருந்து கொண்டு, சினிமா துறையில் சாதிக்க, ‘இல்லை இல்லை ‘நுழைய எவ்வளவு கஷ்டப்பட்டார் விஜயலட்சுமி என்பதை நான் மேலோட்டமாக தான் சொல்லி இருக்கேன். அதை உற்று நோக்கினால் அவரது வலியும் வேதனையும் இன்னும் அதிகம். எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் சினிமாவில் நடிப்பது என்பது எட்டாக்கனிதான். இதை இந்த இடத்தில் பதிவிட விரும்புகிறேன்.

சில்க் ஸ்மிதாவின் வண்டிச்சக்கரம் திரைப்படம் அவருடைய வாழ்க்கைச் சக்கரத்தை புரட்டிப் போட்டது. ஒற்றைப் படத்தில் ஒரு சூப்பர் ஸ்டாரா? ஒரு படத்தில் ஒரு பெண் முழு இந்தியவும்  அறிந்த ஒரு பெண்ணாகி விட முடியுமா? யாரப்பா இந்த திராவிட பேரழகி?  ஒட்டுமொத்த சினிமா துறையையும் ஒரு படத்திலேயே திரும்பிப் பார்க்க வைத்து விட முடியுமா? ‘பிளாக் பிளாக்’ இது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு ஒரே விடையாக அமைந்தவர் தான் சில்க் ஸ்மிதா தான்.




  வண்டிச்சக்கரம் படம் வெளிவந்த உடனேயே ,காளையர்கள் அவரது கடைக்கண் பார்வைக்காக தியேட்டர் வாசலில் காத்திருக்க ஆரம்பித்தனர். ரசிகர்கள் கூட்டம் தியேட்டரை ‘மொய்க்க மொய்க்க’ தயாரிப்பாளர்களின் கூட்டம் சுமிதாவின் வீட்டை மொய்த்தது.        அன்றைய கால கட்டத்தில் சுமிதாவுக்கு இருந்த அந்த ‘கிரைஸ்’ பத்தி சொல்ல வேண்டும் என்றால், ஒரு முறை படப்பிடிப்பு தளத்தில் ஒரு ஆப்பிள் ஒன்றை எடுத்து கடித்திருக்கிறார் சில்க், அப்பொழுது டைரக்டர் ஸாட்டிற்கு அழைக்க அந்த ஆப்பிளை அப்படியே வைத்துவிட்டு டேக்குக்கு சென்று விட்டார். அவர் வைத்துவிட்டு போன ஆப்பிள் ரசிகர்கள் மத்தியில் கிடைத்துவிட, அந்த ஆப்பிளுக்காக சண்டை போட்டு, மண்டை உடைபட்டு, சட்டை கிழிந்த, சில்க் ரசிகர்கள் எத்தனையோ பேர். முடிவில் அந்த ஆப்பிள் ஏலம் விடப்பட்டு பல ஆயிரங்களை வசூலித்து தந்தது. அவரது புகழ் எப்படி பரவி  இருந்தது என்பதை தெரிந்து கொள்வதானால், அன்றைய பாரதப் பிரதமர்  திருமதி இந்திரா காந்தி அவர்கள் ‘யார் இந்தப் பெண்’ என்று வியந்து சில்க் ஸ்மிதாவை விசாரித்தார் என்றால் அவருடைய புகழ் இந்தியா முழுவதும் எவ்வளவு பரவி இருந்திருக்கும் என்பதை யூகித்துக் கொள்ளுங்கள்.

சில்க் சினிமா அதீத  வளர்ச்சி பற்றி நாளைய பதிவில் பார்க்கலாம்.




What’s your Reaction?
+1
3
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!