gowri panchangam ராசிபலன்

இன்றைய ராசி பலன் (27 பிப்ரவரி 2023)

இன்றைய நாள் பலன் 27 பிப்ரவரி 2023: கும்பத்தில் சூரியன், சனி, புதன் ஆகிய மூன்று கிரகங்களின் சேர்க்கை, வாரத்தின் முதல் நாள் மிகச் சிறப்பாக இருக்கும் தெரிந்து கொள்ளுங்கள்.

இன்று, பிப்ரவரி 27, திங்கட்கிழமை, சந்திரனின் தொடர்பு நாள் காலை 9.58 வரை கார்த்திகை பின் ரோகிணி நட்சத்திரத்தில் இருக்கப் போகிறர். இத்தகைய சூழ்நிலையில், ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுபமான மாற்றங்களைக் கொண்டு வரும். கன்னி ராசியினர் கவனமாக இருக்கவும். இன்று 12 ராசிகளுக்கு எப்படிப்பட்ட பலன் கிடைக்கும் என்பதை படித்து தெரிந்து கொள்வோம்.

 




மேஷ ராசி அன்பர்களே!

இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் உறவினர்களால் சில பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும். சிலருக்கு தந்தைவழியில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரம் சுமாராகத் தான் இருக்கும். இன்று சிவபெருமானை வழிபட சிரமங்கள் குறையும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.




ரிஷப ராசி அன்பர்களே!

வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படும். அதனால் மகிழ்ச்சியே ஏற்படும். நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி, ஒன்று மாற்றி ஒன்று ஏதேனும் வேலை இருந்தபடியிருக்கும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது வார்த்தைகளில் கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் பணியாளர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். தட்சிணாமூர்த்தியை வழிபட, காரியங்கள் அனுகூலமாகும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் மூலம் கிடைக்கும் செய்தி மகிழ்ச்சி தரும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் ஆதாயம் உண்டு.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.




மிதுன ராசி அன்பர்களே!

அதிர்ஷ்டகரமான நாள். இன்று நீங்கள் தொடங்கும் புதிய முயற்சி சாதகமாக முடியும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்புத் தருவார்கள். பங்குதாரர்களால் அனுகூலம் உண்டு. அம்பிகையை வழிபட நற்பலன்கள் கூடும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் எதிர்பார்த்த பணம் கிடைக்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

கடக ராசி அன்பர்களே!

தந்தையின் தேவையை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளால் பிரச்சனை ஏற்படக்கூடும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக முடியும். உறவினரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பப் பொறுப்புகளை முடிப்பதில் சற்று அலைச்சல் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும். இன்று விநாயகர் வழிபாடு தடைகளை அகற்றும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் சற்று கவனம் கொள்ளவும்.




சிம்ம ராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிற்பகலுக்கு மேல் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும்.. மாலையில் பிள்ளைகளுடன் கலந்து பேசி முக்கிய முடிவு எடுப்பீர்கள். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே காணப்படும். இன்று துர்கையை வழிபட காரியங்கள் அனுகூலமாகும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் வதந்திகளைப் பொருட்படுத்தாமல் இருப்பது நல்லது.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.

கன்னி ராசி அன்பர்களே!

மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படும். முயற்சிகள் வெற்றிகரமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மாலையில் பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் சற்றுக் கூடுதலாக உழைக்கவேண்டியிருக்கும். இன்று மகாலட்சுமியை வழிபட பணலாபம் கிடைக்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பது தாமதமாகும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.




துலா ராசி அன்பர்களே!

மனதில் இனம் தெரியாத குழப்பங்கள் ஏற்பட்டு விலகும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்களால் ஓரளவு அனுகூலம் ஏற்பட்டாலும், அவர்களால் சில பிரச்சனைகளும் ஏற்படக்கூடும். மாலையில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொடர்பு கொண்டு பேசுவது ஆறுதல் தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் மந்தமாகத்தான் இருக்கும். முருகப்பெருமானை வழிபடுவது நலம் சேர்க்கும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்க வாய்ப்பு உள்ளது.

விருச்சிக ராசி அன்பர்களே!

எதிர்பாராத பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப் பார்கள். இன்று ஆஞ்சநேயரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பப் பொறுப்புகளின் காரணமாக அலைச்சல் ஏற்படக்கூடும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது.




தனுசு ராசி அன்பர்களே!

உற்சாகமாகக் காணப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. ஆனாலும், புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் வீண்பிரச் னைகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம் போலவே இருக்கும். இன்று லட்சுமி நரசிம்மரை வழிபடுவது நன்று.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் அனுகூலம் உண்டாகும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!