Beauty Tips அழகு குறிப்பு

ஆண்கள் மட்டும் படிங்க! ப்ளீஸ்! –6  

                                      அழகு குறிப்பு

               ஆண்கள் மட்டும் படிங்க! ப்ளீஸ்! –6     

வழுக்கை விழுவதை இயற்கை முறையில் தடுக்கும் வழிமுறைகள்

வழுக்கைத் தலை என்பது இன்று பலருக்கும் பிரச்சனை கொடுக்கக்கூடிய மன வேதனை கொடுக்கக்கூடிய முக்கியமான பிரச்சனையாக இருக்கின்றது. வயதான பின்பு வயது முதிர்வு காரணமாக வழுக்கை விழுவது என்பது வேறு. ஆனால் இன்று பலருக்கும் 40 வயதிற்கு முன்பே தலையில் வழுக்கை விழுந்து விடுகிறது. இதனால் பலரும் மன உளைச்சலுடன் காணப்படுகிறார்கள்.




ஆண்களுக்கு ஏற்படும் வழுக்கை பற்றி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. எனவே அந்த வகையில் மீண்டும் முடி வளர என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம்.

  • சின்ன வெங்காயத்தை அரைத்து வழுக்கை விழுந்த இடத்தில் தேய்த்து ஊற வைத்து 20 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளித்து வர முடி வளர்வதை காணலாம்.

  • முட்டையை 2 எடுத்து அதன் வெள்ளை கருவை தனியாக ஒரு பவுலில் ஊற்றி, அத்துடன் சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி  20 நிமிடம் ஊற வைத்து, பின்பு தலை முடியை அலச வேண்டும்.

  • செம்பருத்திப் பூவை அரைத்து பேஸ்ட் செய்து, அத்துடன் விளக்கெண்ணெய் சிறிது சேர்த்து கலந்து ஸ்கால்ப்பில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து தலையை குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!