gowri panchangam Sprituality Uncategorized

மேஷம் – அனைத்திலும் உச்சத்தை தொடும் மாதம்( பிப்ரவரி பலன்கள் )

ராகு பகவான் சுய ஸ்தானத்தில் இருப்பதால் குழப்பம் நிறைந்த சூழல் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதம் ஏற்படும். மன அழுத்தத்தால் உடல் ரீதியான நோய்கள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு செவ்வாய் பகவான் குடும்ப ஸ்தானத்தில் நேர் வழியில் சஞ்சாரம் செய்வதால் தெளிவில்லாத நிலைக்கு தள்ளப்படுவீர்கள். மேலும் அவருடன் சந்திர பகவான் இருப்பதால் முன்கோபத்துடன் இருப்பீர்கள். அதனால் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பிரச்சனை உண்டாகலாம்.




பொருளாதாரம் நெருக்கடி ஏற்படும். கேது பகவான் கலஸ்தரா ஸ்தானத்தில் இருப்பதால் கணவன் மனைவிக்குள் பாகுபாடு உணர்வு அதிகரிக்கும். கூட்டு தொழிலில் இருப்பவர்கள் கொஞ்சம் கவனத்துடன் இருக்க வேண்டும். செய்யாத தவறுக்கு நீங்கள் பழியேற்கும் சூழல் அமையலாம் என்பதால் கவனம் தேவை. தந்தை அல்லது தந்தை வழி உறவினர்களால் கவலை ஏற்பட வாய்ப்புள்ளது.

இருப்பினும் பிப்ரவரி மாதம் உங்களுக்கு சனி பகவானால் பலன்கள் கிடைக்கும் மாதமாக அமையும். பாக்கிய ஸ்தானத்தில் புதன் பகவான் சஞ்சாரம் செய்வதால் உங்கள் துணை உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இந்த மாதத்தில் மேஷ ராசிகாரர்களுக்கு சனி பகவான் மற்றும் குருவால் எல்லாம் நன்மையாக அமையும். சூரிய பகவான் 10 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்வதால் உங்களுக்கு எந்த தீங்கும் நடக்க விடமாட்டார்.




பகைமையை வென்று வெற்றியை அடைவீர்கள். உங்களின் முயற்சிக்கான பலன் அமோகமாக இருக்கும். தொழில் வகையில் சிறிது ஏற்றம் இரக்கம் இருக்கும். குரு பகவான் விரைய ஸ்தானத்தில் இருப்பதால் உங்கள் உடன் பிறந்தவர்களின் சுப நிகழ்ச்சிகளுக்கான செலவு உண்டாகும். எல்லா விஷயங்களுக்கும் உங்கள் குடும்பத்தின் ஆதரவு கண்டிப்பாக இருக்கும்.




What’s your Reaction?
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!