Cinema Entertainment Serial Stories

பூக்க தவறிய பூக்கள் -6 படாபட் ஜெயலட்சுமி

       பூக்க தவறிய பூக்கள் 

‘சார் சார்’ இந்தப் படத்துல ஹீரோயினுக்கு ரொம்ப மாடனான கேரக்டர். கொஞ்சம் முற்போக்கா சிந்திக்கிறவங்க. மத்தவங்க என்ன நினைப்பாங்க அப்படிங்கறத பற்றி சிந்திக்காமல், தனக்கு  சரின்னு தோன்றத  அசால்டா செஞ்சிட்டு போற மாதிரியான ஒரு பாத்திரம் .இந்த மாதிரி கேரக்டருக்கு  எந்த நடிகை செட் ஆவாங்க சார்.

            சார், என்னுடைய படத்துல ஹீரோயினுக்கு வெயிட்டான ரோல். குடும்பத்தில் இருக்கிற பணக்கஷ்டத்தை அப்படியே பிரதிபலிக்கனும். குழந்தைக்கு பால் பவுடர் வாங்கக்கூட காசு இல்லாத ஒரு பெண் கேரக்டர். தியேட்டர்ல மக்கள் பார்த்தா கண்ணுல கண்ணீர் வரணும்.  அந்த மாதிரி நடிக்கிற ஒரு நடிகை சொல்லுங்க சார்.

சார், இந்தப் படத்துல ஹீரோயின் நிறைய காமெடி பண்ணனும். கொஞ்சம் துடுக்குத்தனமான கதாபாத்திரம் நிறைவா செஞ்சி தர்ற மாதிரி யாராவது ஹீரோயின் இருந்தா சொல்லுங்க சார்.

              சார், நம்ம படத்துல கவர்ச்சி காட்சிகள் அதிகம் அதற்கு யார் செட் ஆவார்.

நம்மளோடது பட்ஜெட் படம். நம்மளால நிறைய சம்பளம் எல்லாம் கொடுக்க முடியாது.  கொடுத்த காசுக்கு மேல கூவுற திறமையான நாயகி யாராவது  இருந்தா சொல்லுங்கப்பா.

என்ன வாசகர்களே! இவர்கள் அத்தனை பேரின் தேடலுக்கும் உண்டான அந்த ஒரே நாயகி யார் என்று தெரியுமா’? ரஜினிகாந்த் கூட தன்னுடைய படங்களில் அவரையே ஹீரோயினாக போடலாம் என்று கூறியிருக்கிறார்.  சஸ்பென்ஸ் வைக்காமல் நடிகையின் பெயரைச் சொல்லித் தொலை என்று சொல்கிறீர்களா, அட அவர் தாங்க அவரை அறிமுகப்படுத்திய படத்திலேயே கூட இயக்குனர் பாலச்சந்தரை பார்த்து ‘சே’ இப்படி திறமையான நகைகளை இந்த மனிதர் எங்கிருந்து தான் பிடிப்பாரோ!!! என்று கோலிவுட் வட்டாரமே  அதிசயித்ததே அந்த நடிகையைப் பற்றி தான் சொல்கிறேன் ‘போதும் போதும்’ உங்கள் காது மடல்களும் கண்களும் சிவப்பதை என்னால் உணர முடிகிறது இதற்குமேல் பெயரை சொல்லாமல் இருப்பது எனக்கு நல்லதல்ல..

அவர் தாங்க “ஜெயலட்சுமி” என்னங்க முழிக்கிறீங்க ஓ உங்களுக்கு அப்படி சொன்னா புரியலையா..  எப்பவுமே நான் படா பட் அப்படின்னு தான் சொல்லிடுவேன் இப்ப புரியுதா நாம பாக்க போறது “படாபட் ஜெயலட்சுமி” பத்தி என்ன இப்ப பட்டுனு  விளங்கிருச்சா?

நம்ம படாபட் ஜெயலட்சுமி தமிழகத்தைச் சேர்ந்தவர் அல்ல, அவர் பிறந்தது ஆந்திராவில். பிறந்த வருடம் 1958 நாம் வருடம் நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி. இவர் படிக்கின்ற காலத்திலேயேவும் பள்ளியில் நாடகம் நாட்டியம் முதலியவற்றில் கலந்து தன் கலை ஆர்வத்தை அவ்வப்பொழுது வெளிப்படுத்திக் கொண்டு தான் இருந்தார். ‘நல்லா நடிச்சிருக்கே குழந்தை’ ‘பரவாயில்லையே நல்லா டான்ஸ் ஆடிட்டியே’ அப்படியெல்லாம் ஆசிரியர்கள் அவரைப் பாராட்டியதுண்டு. அப்போது அவர்கள் யாருக்கும் தெரிந்திருக்க நியாயம் இல்லை பின்னாளில் இவர் ஒரு சினிமா நட்சத்திரமாக வருவார் என்று.

           வாசகர்களே  படாபட் ஜெயலட்சுமி திரை வாழ்க்கையை தெரிந்து கொள்வதற்கு முன்பு ,அவரது குடும்பப் பின்னணியை அறிந்து கொள்ளுங்கள். அவரது தந்தையார் பெயர் ‘தசரத ராம ரெட்டியாவார்’ படாபட்டின்  உடன் பிறந்தவர் ஒரு இளைய சகோதரி மட்டுமே .பலரும் அறியாத மற்றும் ஒரு முக்கிய தகவல் என்ன தெரியுமா;




What’s your Reaction?
+1
3
+1
7
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!