Sprituality

காப்பு செடி மஞ்சளை என்ன செய்வது ?

பொங்கல் பண்டிகையின் மஞ்சள் அடையாளம் (மஞ்சள் கீறுதல் சடங்கு )

பொங்கல் படையலில் கரும்புக்கு அடுத்த முக்கிய பொருள் மஞ்சள் கிழங்கு.  பொங்கல் தவிர முக்கிய வழிபாடுகளுக்கும் மங்களகரமான மஞ்சள் கிழங்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.  மங்கல பொருட்களில் மகாலட்சுமியின் அம்சமாகத் திகழும் மஞ்சள் மகிமை நிற்கிறது. மஞ்சள் இருக்கும் இடத்தில் திருமகள் வாசம் செய்கிறார்.  அதனால்தான் சுமங்கலி பெண்கள் மஞ்சளை உடலில் பூசி கொள்கிறார்கள் புத்தாடை அணியும் போது அதில் மஞ்சள் தடவி அணிகிறோம். எந்த சுப நிகழ்ச்சி என்றாலும் அழைப்பிதழில் மஞ்சள் தடவி கொடுக்கிறோம்.




திருமண வைபவங்களில் மஞ்சள் இடித்தல் என்று கூட ஒரு சடங்கு இருக்கிறது.  முனை முறியாத அரிசியான அட்சதை தயாரிக்கும் போது மஞ்சள் சேர்த்து தான் தயாரிப்பர்.  எந்த பூஜை என்றாலும் மஞ்சளில் செய்த பிள்ளையாரை வணங்குவது நம் வழக்கம். சுமங்கலிகள் வீடுகளுக்கு வந்து செல்லும்போது அவர்களுக்கு மஞ்சள் குங்குமம் கொடுத்து வழி அனுப்புவது மங்களத்தின் அடையாளம் தான். பண்டிகைகள் விழா கொண்டாட்டங்கள் நல்ல காரியங்கள் அனைத்திலும் மஞ்சள் சிறப்பிலும் வகிக்கிறது. ஆண்களின் புனித தன்மையால் அவற்றை தரும் திருமணத்தில் கட்டப்படும் மங்கள  நாண்  எனப்படும் தாலி கயிற்றில் பூசப்படுகிறது.

 அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகையின் போது பொங்கல் பானையில் மஞ்சள் செடி மங்கள அடையாளமாக கட்டப்படுகிறது.  மஞ்சள் கட்டப்பட்ட பானையில் பொங்கும் பொங்கல் அந்த வீட்டின்  வளத்தை குறிப்பதாக கருதப்படுகிறது.




இப்படி மகிமை மிக்க மஞ்சள் கிழங்கு செடியை உங்கள் வீட்டு  வாசலில் கட்டி இருந்த அந்த மஞ்சளை பத்திரப்படுத்தி மறுநாள் காலையில் மஞ்சள் கீறுதல் என  சடங்காக செய்வது சிறப்பாக கருதப்படுகிறது.  வீட்டில் இருக்கும் பெரியவர்கள் அந்த மஞ்சள் கிழங்கு கீறி சிறியவர்களின்  நெற்றியில் இட்டு அவர்களுக்கு அந்த மஞ்சளை வாசம் பிடிக்க வைத்து  ஆசியளிப்பர்.  வீட்டில் உள்ள அனைவரும் சீரும் சிறப்பு பெற்று வாழ வேண்டும் என்பதை இச்சடங்கின் நோக்கம்.

அதே மஞ்சளை பத்திரபடுத்தி வெயிலில் காயவைத்து அரைத்து நம் சமையலுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.

இப்போது புரிகிறதா? மஞ்சள் கீறுதல்  வெறும் சடங்கு மட்டும் அல்ல. அதற்குப் பின்னால் இருப்பது ஆதித் தமிழனின் மருத்துவ அறிவு. இந்த அறிவைத் தலைமுறைகள் தாண்டிக் கொண்டு செல்ல வேண்டியது நம் அனைவரின் கடமை. இதற்காக அதிகம் மெனக்கெட தேவையில்லை. இந்த சடங்கு செய்யும்  போது, அதை எதற்காக செய்கிறோம் என்பதையும் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லுங்கள் போதும்.




What’s your Reaction?
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!